நற்பிட்டிமுனையில் நாளை சதோச திறப்பு விழா
நற்பிட்டிமுனை பிரதான வீதியில் அமைக்கப்பட்டுள்ள லங்கா சதோச விற்பனை நிலையம் நாளை ஞாயிற்றுக் கிழமை (09) மாலை 3.45 மணிக்கு திறந்து வைக்கப் படவுள்ளது .
கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கல்முனை தொகுதி பிரதி அமைப்பாளரும் உயர் பீட உறுப்பினரும் லங்கா சதோச நிறுவனத்தின் பணிப்பாளருமான சி.எம்.முபீத் தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ள நிகழ்வில் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவருமான றிஸாட் பதியுதீன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு திறந்து வைக்கவுள்ளார்.
கிராமிய பொருளாதார பிரதி அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளருமான சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லாஹ் மஃரூப் ,இஸ்ஸாக் ரகுமான் .எம்.எச்.எம்.நவவி ஆகியோர் கெளரவ அதிதிகளாகவும்,
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் எஸ்.சுபைதீன் ,அரச வர்த்தக கூட்டுத் தாபனங்களின் தலைவரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் கட்சியின் பிரதி தவிசாளருமான ஏ.எம்.ஜெமீல் ,லங்கா அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவரும் ,கல்முனை மாநகர முன்னாள் முதல்வருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் , காரிய வள கூட்டுத்தாபனத்தின் தலைவர் எம்.ஏ.அப்துல் மஜீத்,லக்சல நிறுவனத்தின் தலைவர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில் ,அமைச்சரின் பாராளுமன்ற விவகார செயலாளரும் கல்முனை தொகுதி அமைப்பாளருமான ஏ.ஆர்.எம்.ஜிப்ரி ,கல்முனைக்குடி அமைப்பாளரும் முன்னாள் கல்முனை மாநகரசபை உறுப்பினருமான ஏ.எம்.றியாஸ் ,நெடா நிறுவனத்தின் பணிப்பாளரும் மருதமுனை அமைப்பாளருமான சித்தீக் நதீர்,அம்பாறை மாவட்ட கொள்கைப்பரப்பு செயலாளர் எம்.எம்.ஜுனைதீன் உட்பட கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சரின் இணைப்பாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கல்முனை தொகுதி இளைஞர் அமைப்பாளருமான சி.எம்.ஹலீம் ஆகியோர் விசேட விருந்தினர்களாக கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
Comments
Post a Comment