Posts

Showing posts with the label General

கல்முனை மக்களுக்கு ஒரு திறந்த மடல்

Image
  SM சபீஸ் இலங்கையில் வாழும் முஸ்லிம்களுக்கு ஒரு அடையாளத்தையும் முகவரியையும் பெற்றுத்தந்த நமது பெரும்தலைவர் மாமனிதர் மர்ஹூம் அஸ்ரப்  அவர்கள் பிறந்து வாழ்ந்த பெருமைக்குரிய கல்முனை மண்ணில் வாழும் எமது உடன் பிறப்புக்களே, உங்கள்மீது இறைவன் அவனது அருளை பொழிய பிரார்த்தித்தவனாக பழமைவாத சிந்தனைகளுக்குள்ளும், இத்துப்போன காலாவதியான யோசனைக்குள்ளும் எமது மக்களை உணர்ச்சி ரீதியாக தள்ளி, ஊர்வாதத்தை உண்டுபண்ணி, சிந்திக்க வைக்கும் ஆற்றலை மழுங்கடிக்கச் செய்யும் சதிகாரர்களின் சூழ்சிகளை, கல்வியால் முன்னேறிய மாநகரத்து மக்களாகிய நீங்கள் எமது உடன்பிறப்புக்கள் அறிந்து சிந்தித்து செயலாற்ற வேண்டிய தருணத்தில் இருக்கின்றோம். இந்த அரசாங்கத்தை உருவாக்கியவர்கள் நாங்கள்தான் என தம்பட்டம் அடித்துக்கொண்டு பங்காளிகட்சி என்ரபேரோடு இருக்கும் கௌரவ ஹகீம் நகர அபிவிருத்தி அமைச்சும் அதன்கீழ் காணி கையகப்படுத்தல் காரியாலயத்தையும் வைத்துக்கொண்டிருந்த போது சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிலத்தினை கையகப்படுத்தி அம்மக்களுக்கு விடிவு பெற்றுக்கொடுக்காதது ஏன்? மயோன் முஸ்தபாவின் முயற்சியில் கொண்டுவரப்பட்டு பேரியல் அஸ்

மூஸா கண்ட சாமிரியும், முஸ்லிம் காங்கிரஸ் கண்ட ஹக்கீமும்.

Image
மூஸாவின் அல்லாஹ்வைக் காண வேண்டும் என்பதற்காக பிர்அவ்ன் தன்னைத் தானே கடவுளாக்கிக் கொண்ட எகிப்தில் பிரமிட்டுக்களைக் கட்டினான். இறை கட்டளைப்படி அந்த அற்பன் மூஸாவைப் பின் தொடர கடலில் மூழ்கடிக்கப்பட்டான்.அல்ஹம்துலி ல்லாஹ் ஆணவம் அழிந்தது. எல்லாவற்றையும் இனிதே முடித்த நபி மூஸா இறைவனின் தரிசனத்தைக் காண தூர்சினா மலையடிவாரத்தைச் சென்றடைந்தார். அசரீயாக ஒரு குரல், மூஸாவே என்ன அவசரம்| என் இறைவனைக் காண வேண்டும் என்ற ஆவல்' என்றார் மூஸா. நீர் இங்கே வந்து விட்டாய் உன் சமூகத்தார் காளைக் கன்று ஒன்றை இதுதான் மூஸாவின் கடவுள் என வழிபடுகின்றனரே என்று இறைவன் கூற நபி மூஸா கடுங்கோபத்துடன் மீண்டும் திரும்பி வருகின்றார். அவரின் தம்பி நபி ஹாறூனின் தலையைப் பிடித்து இழுத்து நடந்தது என்ன என்று கேட்கின்றார். என் தாயின் மகனே! என் மீது கோபம் கொள்ளாதே, நான் எவ்வளவோ சொல்லியும் சாமிரிதான் இந்த காரியத்தைச் செய்தான் என்றார். மூஸா சாமிரியைத் தேடிச் சென்றார். சாமிரியே உன் காரியம் என்ன என்று கேட்டார். நீங்கள் போனதன் பின் பிர்அவ்னின் பொக்கிஷங்கள், ஆபரணங்கள் சிலதை எடுத்து மூட்டப்பட்ட தீயில் தூத

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் ஆணிவேர் மிகப் பலமானது இந்த ஆணிவேரை யாராலும் அசைக்க முடியாது

Image
பிரதித் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.சலீம்  (பி.எம்.எம்.ஏ.காதர்) அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் ஆணிவேர் மிகவும் பலமானது இந்த ஆணிவேரை யாராலும் அசைக்க முடியாது யார் எந்த மாயாஜாலங்களைக் காட்டினாலும்,யார் எத்தனை  பஞ்ஞ பூதங்களைக் கொண்டு வந்தாலும், இந்தச் சங்கத்தை அழிக்க முடியாது என சம்மேளனத்தின் பிரதித் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.சலீம் தெரிவித்தார்.  அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் விஷேட பொதுச் சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (27-03-2016)மருதமுனை பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கி  உரையாற்றிய போதே அவர்  இவ்வாறு தெரிவித்தார்.  இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்ததாவது :- எமது சங்கத்தின் தலைவர் மீரா எஸ் இஸ்ஸடீன் சுகவீனமுற்றிருப்பதால் இன்றைய விஷேட பொதுச் சபைக் கூட்டத்திற்கு நான் தலைமைதாங்குகின்றேன் இக்கூட்டத்திற்கு பெரும் அளவில் உறுப்பினர்கள் வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியைத் தருகின்றது. இந்தச் சங்கம் பல தியாகங்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்டது இதையாராலும் இலகுவாக அழித்து ஒழித்து விடமுடியாது எத்தகைய பி

ஊடகவியலாளர்களுக்கு அரசு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றவேண்டும் கல்முனை மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

Image
நல்லாட்சி அரசாங்கத்தில்  ஊடகவியலாளர்களுக்கு தீர்வையற்ற சலுகை அடிப்படையில் மோட்டார் சைக்கள் , வீட்டுத்திட்டம்  வழங்குவதற்கு  ஊடக அமைச்சினால்  சுற்றுநிருபம் வெளியிடப் பட்டது . அதன்படி  தீர்வை அற்ற  சலுகை  அடிப்படையில் ஊடகவியலாளர்களுக்கு மோட்டார் சைக்கள் விநியோகிக்கப்பட வேண்டும் என கல்முனை மாநகர சபை இன்று  (28) நடை பெற்ற  மாதாந்த அமர்வில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது . அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் நிர்வாகிகள் சம்மேளனத்தின் உப தலைவர்   கலா பூசணம்   ஏ.எல்.எம்.சலீம்  தலைமையில்  இன்று காலை கல்முனை மாநகர முதல்வர் சட்டமுதுமாணி நிஸாம் காரியப்பரை சந்தித்து ஊட்டகவியலாள ர்களுக்கு  அநீதி  இழைக்கப் பட்டுள்ளதை தெரிவித்து   விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக இந்த தீர்மானம் மாநகர முதல்வரினால் இன்று மாலை இடம்பெற்ற சபை அமர்வில் விசேட பிரேரணையாக  சமர்ப்பிக்கப்பட்டு சபை உறுப்பினர்களால் ஏகமானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு  தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது . கல்முனை மாநகர சபையில் எடுக்கப் பட்டுள்ள  இத் தீர்மானத்தினை எழுத்துமூலமாக ஜனாதிபதி , பிரதமர்  மற்றும்  ஊடகத்துறை அமைச்சர் ஆகியோருக்கு  உடனடியாக 

ஊடகவியலாளர்களுக்கு மோட்டார் சைகள் கடன் வேண்டாம் சலுகை வேண்டும்! "அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் களத்தில்"

Image
வங்கி கடன் மூலம் ஊடகவியலாளர்களுக்கு  மோட்டார் சைக்கள் வழங்குவதற்கு  ஊடக அமைச்சு  எடுத்திருக்கும் நடவடிக்கைகளை மீள் பரிசீலனை செய்யுமாறு கோரி இன்று நடை பெறவுள்ள  கல்முனை  மாநகர சபை அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப் படவுள்ளது . இதற்கான பிரேரணை  இன்று நடை பெறும்  அமர்வில் மாநகர முதல்வர் எம்.நிஸாம் காரியப்பரினால்  முன் வைக்கப் படவுள்ளது.  இந்த பிரேரணை பிரதிகளை ஜனாதிபதி ,பிரதம மந்திரி ,ஊடக அமைச்சர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கவுள்ளதாக மாநகர முதல்வர் தெரிவித்தார் . அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் விசேட பொதுச்சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானத்துக்கமைய இப்பிரேரணைக்கான  கோரிக்கை  சம்மேளனத்தின் உப தலைவர் கலாபூசணம் ஏ.எல்.எம்.சலீம் ,செயலாளர் எஸ்.எல்.ஏ.அஸீஸ் ,பொருளாளர் யு.எம்.இஸ்ஹாக் ஆகியோரால் இன்று மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பரிடம் வழங்கி வைக்கப் பட்டது . இன்று மாலை நடை பெறவுள்ள மாநகர சபை அமர்வில் முதல்வரினால் இப்பிரேரணை சபைக்கு சமர்ப்பிக்கப் பட்டு தீர்மானம் நிறைவேற்றப் படவுள்ளது. வரிசலுகை அடிப்படையில் ஊடகவியலாளர்களுக்கு மோட்டார் சைக்கள்  வழங்குவதாக ஆரம்பத்தில் ஊடக

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் விஷேட பொதுச்சபைக்கூட்டம்! ஆர்வத்துடன் கலந்து கொண்ட அங்கத்தவர்கள் !!

Image
அம்பாறை   மாவட்ட   ஊடகவியலாளர்   சம் மேளனத்தின் விஷேட பொதுச்சபைக்கூட்டம் இன்று  27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை மருதமுனை பொது நூலக மண்டபத்தில் இடம் பெற்றது . அம்பாறை   மாவட்ட   ஊடகவியலாளர் சம்மேளனத்தின் உப  தலைவர் கலாபூசணம் ஏ.எல்.எம்.சலீம்   தலைமையில்  இடம் பெற்ற  இவ் விஷேட பொதுச் சபைக் கூட்டத்தில்  சம்மே ளனத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும், அங்கத்தவர்கள் நலனோம்பல் விடயங்கள் தொடர்பாகவும் விஷேடமாக கலந்தாலோசிக்கப் பட்டு எதிர்கால நலன் கருதி சம்மேளனத்தின் யாப்பு மாற்றம் தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப் பட்டது. சம்மேளனத்தின் செயலாளர் எஸ்.எல்.ஏ.அஸீஸ் ,பொருளாளர் யு.எம்.இஸ்ஹாக்  உட்பட  சம்மேளனத்தின் அங்கத்தவர்கள் 35க்கும் மேற்படாவர்கள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்ததுடன் எடுக்கப் பட்ட தீர்மானங்களுக்கும் ஆதரவு வழங்கினர் .  

கல்முனை செலான் வங்கிக் கிளையில் வங்கியின் 28வது ஆண்டு விழா

Image
செலான் வங்கியின் 28ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் கல்முனை கிளை ஏற்பாடு செய்த நிறைவு விழா நிகழ்வு மிக சிறப்பாக இன்று வியாழக் கிழமை இடம் பெற்றது . கல்முனை கிளை வங்கி முகாமையாளர் திருமதி இன்னோசென்டியா பிறேமினி மோகன்ராஜ் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் வங்கி ஊழியர்கள்  அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

கட்டாரில் "கல்முனை மாநகரம்" உள்ளூராட்சியும், சிவில் நிருவாகமும் வரலாற்று ஆவணப்பதிவு நூல் வெளியீடு!

Image
கல்முனைக்கான மத்திய கிழக்கு அமையத்தின் ( Gulf Federation for Kalmunai - GFK ) ஏற்பாட்டில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ. எம். பறக்கத்துள்ளாஹ் எழுதிய "கல்முனை மாநகரம்" உள்ளூராட்சியும், சிவில் நிர்வாகமும் எனும் வரலாற்று ஆவணப்பதிவு நூல் வெளியீட்டு விழா கடந்த வெள்ளிக்கிழமை 1 8 ஆம் திகதி மாலை 6:00 மணியளவில் கட்டார் டோஹாவில் அமைந்துள்ள பிரண்ட்ஸ் கல்ச்சரல் சென்டரில் மிகவும் விமர்சையாக நடைபெற்றது. தென்கிழக்கின் தலைநகராக இன்று அறியப்படும் கல்முனை மாநகரானது வெள்ளையன் ஆட்சி செய்த காலம் தொட்டு இன்று வரைக்கும் பல சிவில் நிர்வாக மற்றும் உள்ளூராட்சி அலகாக பிரகடணப்படுத்தப்பட்டு நிருவாகங்கள் நடந்து வந்துள்ளன என்பதை பல புகைப்படங்களோடும், இற்றைப்படுத்தப்பட்ட பல தரவுகளோடும் வெளிக்கொணர்ந்த்திருக்கிறது இந்நூல். கல்முனை மாநகரம் ஏலவே கரவாகுப்பற்றாக குறிக்கப்பட்டு சனிட்டார் போர்ட் , லோகல் போர்ட் , பட்டின சபை , பிரதேச சபை, நகர சபை, ஈற்றில் மாநகர சபையாக உருவெடுத்த வரையில் சகல சிவில் நிர்வாகம் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களையும் அதன் நிர்வாக கட்டமைப்பையும் இன்னும் பல விடயங்களையும் உள்ளடக்கியத

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் விஷேட பொதுச்சபைக் கூட்டம்

Image
அம்பாறை   மாவட்ட   ஊடகவியலாளர்   சம் மேளனத்தின் விஷேட பொதுச்சபைக்கூட்டம் எதிர்வரும் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை மருதமுனை பொது நூலக மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. அம்பாறை   மாவட்ட   ஊடகவியலாளர் சம்மேளனத்தின்  தலைவர் கலாபூசணம்  மீரா எஸ். இஸ்ஸடீன் தலைமையில்  இடம்பெறவுள்ள இவ் விஷேட பொதுச்சபைக்கூட்டத்தில்  சம்மே ளனத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும், அங்கத்தவர்கள் நலனோம்பல் விடயங்கள் தொடர்பாகவும் விஷேடமாக கலந்தாலோசிக்கப்படவுள்ளதாக   சம்மேளனத்தின்  பொதுச் செயலாளர்   எஸ்.எல்.அஸீஸ் தெரிவித்தார்.

முஸ்லிம் மீடியா போரத்தின் 19ஆவது வருடாந்த மாநாடு

Image
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 19ஆவது வருடாந்த மாநாடு எதிர்வரும் ஜுன் 21ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.20 மணிக்கு தேசிய நூதனசாலையின் கேட்போர்கூடத்தில் இடம்பெறவுள்ளது. மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சிய தூதுவர் அப்துல் ஹமீட் அப்துல் பதாஹ் கே. அல் முல்லாஹ் கலந்துகொள்ளவுள்ளார். இதன்போது தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பில் கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் பீடாதிபதி வி.டி.தமிழ்மாறன் சிறப்புரையாற்றவுள்ளார்.ஒரு அமர்வாக இடம்பெறும் இந்த நிகழ்வின் இறுதியில் அடுத்த வருடத்திற்கான புதிய நிர்வாகிகள் தெரிவுசெய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

கட்டாரில் கல்முனை மாநகரம்

Image
கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ் எழுதிய “கல்முனை மாநகரம், உள்ளுராட்சியும் சிவில் நிருவாகமும் ”  நூல் அறிமுக விழா எதிர்வரும் 2016.03.18ம்திகதி வெள்ளிக்கிழமை கட்டாரில் இடம்பெறவுள்ளது. கட்டார் டோஹா நகரிலுள்ள பிரண்ட்ஸ் கல்சரல் சென்டர் – அல் ஹிலால் என்னும் இடத்தில் மாலை 5.00 மணிக்கு இவ்வறிமுகவிழா  இடம்பெறவுள்ளது. கல்முனைக்கான மத்திய கிழக்கு அமையம் ( GFK-  கட்டார்) இந்நூல் அறிமுக விழாவை ஏற்பாடு செய்துள்ளது. நூல் அறிமுகவிழாவில் கலந்துகொள்ளும் பொருட்டு நூலாசிரியரான கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் இன்று (15) மாலை கட்டார் பயணமானார். “கல்முனை மாநகரம், உள்ளுராட்சியும் சிவில் நிருவாகமும் ”  நூல் கடந்த 2015.12.20ம்திகதி சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும், தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்பு மற்றும் நகர திட்டமிடல் அமைச்சர் ரஊப் ஹக்கீம் தலைமையில் கொழும்பில் வெளியீட்டு வைக்கப்பட்டது. நூலின் முதலாவது  அறிமுக விழா கல்முனையில் கடந்த 2016.01.23ம்திகதி இடம்பெற்றது. இதன்தொடர்ச்சியாகவே இரண்டாவது நூல் அறிமுகவிழா கட்டாரில் எதிர்வரும்; 18ம் திகதி இ

அமானா வங்கி வாடிக்கயாளர்களுக்கும் வங்கி உயர் அதிகாரிகளுக்கும் இடையேயான விசேட சந்திப்பு

Image
அமானா வங்கி வாடிக்கயாளர்களுக்கும்  வங்கி உயர் அதிகாரிகளுக்கும் இடையேயான விசேட சந்திப் பொன்று  நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை இரவு  சாய்ந்தமருது லீமெரிடியன்  வரவேற்பு மண்டபத்தில் நடை பெற்றது . அமானா வங்கியின் பிரதித் தலைவர் ஜனாப்.குவைலீத் ,வங்கி சிரேஸ்ட முகாமையாளர் ஜனாப் .முகம்மது நிலாம்  உட்பட 60க்கும் மேற்பட்ட வாடிக்கயாலர்களும் கலந்து கொண்டனர் . அமானா வங்கியின் அக்கரைப்பற்று கிளை வாடிக்கையாளர் உறவு முகாமையாளர் எம்.எம்.ஆஷிப்  வரவேற்புரையையும் , கல்முனை வங்கி முகாமையாளர் ஜனாப்.சமீம்  நன்றியுரையையும் வழங்கினர். இந்த கலந்துரையாடலில் வாடிக்கயாளர்களின்  பல தரப்பட்ட சந்தேகங்கள்,கேள்விகளுக்கு  விளக்கமளிக்கப் பட்டதுடன் வங்கியின் ஏதிர்கால திட்டம் குறித்தும் விரிவாக ஆராயப் பட்டன .

ஒரு தீய ஆட்சியை நல்லாட்சியாக மாற்றக்கூடிய வல்லமை ஊடகங்களுக்கும்,ஊடகவியலாளர்களுக்கும் உண்டு

Image
 கலாபூஷணம் மீரா எஸ் இஸ்ஸடீன்;   (பி.எம்.எம்.ஏ.காதர்)  சமூகத்தின் நல்வழிகாட்டலில் ஊடகங்களுக்கும் ,ஊடகவியலாளர்களுக்கும், பெரும் பங்கு உண்டு ஒரு தீய ஆட்சியை நல்லாட்சியாக மாற்றக்கூடிய  வல்லமை ஊடகங்களுக்கும்,ஊடகவியலாளர்களுக்கும்  உண்டு என அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் கலாபூஷணம் மீரா எஸ் இஸ்ஸடீன்  தெரிவித்தார். அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம்  இன்று(21-02-2016)சாய்ந்தமருது சீ பிறீச் மண்டபத்தில் “எயார் கின்ங்ஸ் பிறைவெட் லிமிடட்” அனுசரணையில் நடைபெற்றது இதில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் சிரேஷ்;ட உறுப்பினரும் ,ஆலோசகர்களில் ஒருவருமான எம்.எல்.எம்.ஜமால்டீன் தலைமையில் நடப்பு வருடத்திற்கான நிர்வாகத் தெரிவு  இடம்பெற்றது இதில் கலாபூஷணம் மீரா எஸ் இஸ்ஸடீன், 18ஆவது தடவையாக மீண்டும் தலைவராகத் தெரிவு  செய்யப்பட்டார். இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது :-தீய ஆட்சியை நல்லாட்சியாக மாற்றக்கூடி வல்லமை உள்ள ஊடகவியலாளர்கள் தூர நோக்குடையவர்களாகவும்; சமூக சிந்தனை உள்ளவர்க