ஒரு தீய ஆட்சியை நல்லாட்சியாக மாற்றக்கூடிய வல்லமை ஊடகங்களுக்கும்,ஊடகவியலாளர்களுக்கும் உண்டு
கலாபூஷணம் மீரா எஸ் இஸ்ஸடீன்;
(பி.எம்.எம்.ஏ.காதர்)
சமூகத்தின் நல்வழிகாட்டலில் ஊடகங்களுக்கும் ,ஊடகவியலாளர்களுக்கும், பெரும் பங்கு உண்டு ஒரு தீய ஆட்சியை நல்லாட்சியாக மாற்றக்கூடிய வல்லமை ஊடகங்களுக்கும்,ஊடகவியலாளர்களுக்கும் உண்டு என அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் கலாபூஷணம் மீரா எஸ் இஸ்ஸடீன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் இன்று(21-02-2016)சாய்ந்தமருது சீ பிறீச் மண்டபத்தில் “எயார் கின்ங்ஸ் பிறைவெட் லிமிடட்” அனுசரணையில் நடைபெற்றது இதில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் சிரேஷ்;ட உறுப்பினரும் ,ஆலோசகர்களில் ஒருவருமான எம்.எல்.எம்.ஜமால்டீன் தலைமையில் நடப்பு வருடத்திற்கான நிர்வாகத் தெரிவு இடம்பெற்றது இதில் கலாபூஷணம் மீரா எஸ் இஸ்ஸடீன், 18ஆவது தடவையாக மீண்டும் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது :-தீய ஆட்சியை நல்லாட்சியாக மாற்றக்கூடி வல்லமை உள்ள ஊடகவியலாளர்கள் தூர நோக்குடையவர்களாகவும்; சமூக சிந்தனை உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் ஊடகவியலாளர்களிடம் நல்லொழுக்கமும்.நற்பண்பும் இருக்க வேண்டும்.
ஊடகவியலாளர்களிடம் ஒழக்கம் இல்லையென்றால் சமூகம் அவர்களை ஏற்றுக் கொள்ளாது எனவே நாங்கள் நல்லொழுக்கத்துடன் நாட்டுப்பற்றுடன் சமூக மேம்பாட்டுக்காகப் பாடுபட வேண்டும் என்றார்.
இவ்வருடாந்தக் கூட்டத்தில் பின்வருவோர் நடப்பு வருட நிர்வாகிகளாகத் தெரிவ செய்யப்பட்டனர்.
தலைவர் கலாபூஷணம் மீரா எஸ் இஸ்ஸடீன்
செயலாளர் எஸ்.எல்.அஸீஸ்
பொருளாளர் யூ.எம்.இஸ்ஹாக் (2ஆவது முறையாக)
உப தலைவர்கள் கலாபூஷணம் ஏ.எல்.எம்.சலீம், எம்.ஐ.ஆரிப்
உப செயலாளர் ஆர். தில்லை நாயகம்
கணக்காய்வாளர் யு .கே காலிடீன்
செயற் குழு உறுப்பினர்கள் :- பி.எம்.எம்.ஏ.காதர்
யு .கே.சம்சதீன், எஸ்எல்.எம்.பிக்கீர்,எஸ்.கார்திகேசு,ஏ.எல்.றபீக் பிர்தௌஸ், ஏ.ஜே.எம்.ஹனீபா, ரி.கே ரகுமத்துல்லாஹ்,ஐ.ஏ.சிறாஜ், ஏ.எஸ்.எம்.முஜாஹித். எம்.எல்.சரிப்டீன்.
“எயார் கின்ங்ஸ் பிறைவெட் லிமிட்டட் " அனுசரணையுடன் நடை பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட 56 உறுப்பினர்களுக்கும் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் மற்றும் “எயார் கின்ங்ஸ் பிறைவெட் லிமிட்டட் "ஆகியவற்றின் இலட்சினை பொறிக்கப்பட்ட நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment