Posts

Showing posts from January, 2018

கிழக்கு மாகாண கல்வித் திணைக்கள வித்தியாரம்ப விழா

Image
கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் ஏற்பாடு செய்த கிழக்கு மாகாண வித்தியாரம்ப விழா நேற்று  கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் நடை பெற்றது. கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் கல்வி வலயக் கல்வி அலுவலகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த இவ்விழா கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி. அப்துல் நிஸாம் தலைமையில் நடை பெற்றது. கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல், கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை அதிபர் அருட் சகோதரர் தேவ சந்தியாகு, மதப் பெரியார்கள்  உட்பட கல்வி அதிகாரிகளும் மற்றும் கல்முனை பிரதேச பாடசாலை மாணவர்களும் பெற்றோர்களும்  கலந்து சிறப்பித்தனர். இவ்வாண்டில் பாடசாலைகளில் இணைத்துக் கொள்ளப்பட்ட முதல் மாணவர்களை பதிவு  செய்த மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி. அப்துல் நிஸாம் அம்மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பரிசுகளும் வழங்கி வைத்தார். நிகழ்வில் தரம் 02 மாணவர்களின் கலை நிகழ்கவுளும் அரங்கேங்கேற்றப்பட்டன.

நற்பிட்டிமுனையில் இரண்டு மருத்துவ ஆய்வு கூட பரிசோதகர்கள்

Image
நற்பிட்டிமுனையில்  முதல்   தடவையாக இரண்டு சகோதரிகள் மருத்துவ ஆய்வு கூட விஞ்ஞான  பீடத்துக்கு தெரிவாகியுள்ளனர் . தெரிவானவர்கள் அப்துல் ரகுமான் ரிஹானா பர்வீன் , ஹம்சா மொஹிடீன் சமியா  ஆகிய இரு சகோதரிகளுமே . இவர்கள் இருவரையும் பாராட்டி பரிசு வழங்கும் நிகழ்வு நற்பிட்டிமுனை அல் -கரீம் பவுண்ஷடேன்  ஏற்பாட்டில் இன்று மாலை சகோதரிகளின் இல்லங்களில் இடம் பெற்றது. அல் -கரீம் பவுண்டேஷன் தலைவர் சி.எம்.ஹலீம் தலைமையில் இடம் பெற்ற  நிகழ்வில் நிறுவனத்தின் செயலாளர் யு.எல்.எம்.பாயிஸ் , நிறுவன ஆலோசகர்களான  நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மத்திய மகா வித்தியாலய உதவி அதிபர் திருமதி  முனாஸிர்  மற்றும் கே.நஜிமுதீன் உட்பட சகோதரிகளின் பெற்றோரும் ,குடும்பத்தவர்களும் கலந்து கொண்டனர். இருவருக்கும் மாலை அணிவித்து பரிசுப்  பொதிகளும் வழங்கி வைக்கப் பட்டன . 

பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வெளச்சர்கள்

Image
பாடசாலை மாணவர்களுக்கு, சீரு டை துணிகளை பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள வெளச்சர்கள் இம்மாதம் இறுதிவரை ஏற்றுக் கொள்ளப்படுமென்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.  ஒரு சில காரணங்களால் வவுச்சர்களைப் பெற முடியாமல் போன மாணவர்கள் எதிர்நோக்கியுள்ள சிரமத்தை கருத்திற் கொண்டு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமின் அறிவுறுத்தலுக்கு அமைய சீருடை வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் இவ்வாறு நீடிக்கப்பபட்டதாக  அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைவாக பாடசாலை மாணவர்களுக்கான சீருடை துணிகளை கொள்வனவு செய்வதற்காக வழங்கப்பட்டுள்ள வெளச்சர்கள் பெறுமதி எதிர்வரும் 30ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என்றும் கல்வி அமைச்சு குறிப்பிட்டு;ள்ளது. வெளச்சர் மூலம் துணிகளை பெற்றுக்கொள்ள வழங்கப்பட்டிருந்த காலம் கடந்த மாதம் 31ஆம் திகதியுடன் முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

மருதமுனை 3ஆம் வட்டாரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கிளை திறப்பு விழா

Image
கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில்; மருதமுனை 3ஆம் வட்டாரத்தில்(ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு)மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் வை.கே.றகுமான் அவர்களுக்கான கிளை அலுவலகம் திறந்து வைத்த நிகழ்ம்வும் .கூட்டமும் வேட்பாளர் வை.கே.றகுமான் தலைமையில் சனிக்கிழமை(06-01-2018)நடைபெற்றது.இங்கு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டு கிளையைத் திறந்து வைத்த்தார்.இதில் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி> கட்சியின் செயலாளர் சுபைதீன் ஹாஜியார் > முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம்.ஜெமீல்;> கே.எம்.அப்துல் றஸாக்> கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப்> அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மருதமுனை மத்திய குழுவின் தலைவர் கலீல் முஸ்தபா ஆகியோருடன் பெரும் அளவிலான ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்கு உறுதிசெய்யும் பணி இன்று

Image
தபால் மூல வாக்கு அட்டை உள்ளடக்கிய பொதிகளை விநியோகிப்பதற்காக எதிர்வரும் வியாழக்கிழமை தபால் திணைக்களத்திடம் கையளிக்கப்படும் என்று மேலதிக ஆணையாளர் எம் எம் மொகமட் தெரிவித்தார். உத்தியோக வாக்காளர் அட்டை தொடர்பான அறிவிப்பு ஆவணங்களை விநியோகிப்பதற்காக அவை தபால் திணைக்களத்திடம் எதிர்வரும் 18ஆம் திகதி ஒப்படைக்கப்படும். எதிர்வரும் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வ வாக்காளர் அறிவிப்பு அட்டைகளை விநியோகிப்பதற்கான விசேட தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் 3ஆம் திகதி வரையில் தமது உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை கிடைக்கப்பெறாவிட்டால் அருகில் உள்ள தபால் அலுவலகத்தில் ஆள் அடையாளஅட்டையை உறுதிப்படுத்தி பெற்றுக்கொள்ளுமாறுமேலதிக தேர்தல் ஆணையாளர் எம் எம் மொகமட் தெரிவித்தார்.

எதிர்வரும் புதன்கிழமை பாராளுமன்ற விசேட அமர்வு

Image
பாராளுமன்ற விசேட அமர்வு எதிர்வரும் புதன்கிழமை காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கோரிக்கைக்கு அமைய சபாநாயகர் பாராளுமன்றத்தை கூட்டவிருப்பதாக பாராளுமன்றத்தின் பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார்.  பாராளுமன்றம் இம்மாதம் 23 ஆம் திகதி கூடவிருந்தமை குறிப்பிடத்தக்கது 

நகைகளை கடத்த முயன்ற கல்முனைவாசி விமான நிலையத்தில் கைது

Image
சட்டவிரோதமாக சுமார் 45 இலட்சம் ரூபா பெறுமதியான 157 தங்க நகைகளை எடுத்து வந்த இலங்கைப் பிரஜையொருவரை சுங்க அதிகாரிகள் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் கல்முனையைச் சேர்ந்த 49 வயதுடையவராவாரென சுங்க திணைக்களத்தின் பேச்சாளர் பணிப்பாளர் சுனில் ஜயரட்ன தெரிவித்தார். டபிள்யு.வை 373 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்த இந்நபர், விமான நிலையத்திலிருந்து வெளியேற முற்பட்டவேளை அவரது நடத்தையில் சந்தேகம் கொண்ட சுங்க அதிகாரிகள் அவர் கையிலிருந்த பையை ஸ்கேனுக்கு உட்படுத்தியபோதே அதற்குள் துணிகளில் சுற்றப்பட்ட நிலையில் தங்க நகைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் கூறினார். மீட்கப்பட்ட தங்க நகைகளின் மொத்த பெறுமதி 44 இலட்சத்து 72 ஆயிரத்து 380 ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. பைக்குள்ளிருந்து 27 சிறிய காப்புகள், 18 நடுத்தர அளவிலான காப்புகள், 19 பாரிய அளவிலான காப்புகள், 77 மோதிரங்கள், 16 பதக்கங்களென மொத்தமாக 157 தங்க நகைகள் காணப்பட்டதாகவும் அவர் கூறினார்.இந்நகைகளின் மொத்த நிறை 815 கிராம் என்றும் கணிப்பிடப்பட்டுள்ளது. சம...

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் துரிதம்

Image
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பெப்ரவரி மாதம் 10ம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோக நடவடிக்கை எதிர்வரும் 11ம் திகதி இடம்பெறும். அத்துடன் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் 18ம் திகதி ஆரம்பமாகும். தேர்தல் சுதந்திரமாகவும், நீதியாகவும் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு . பொலிசாரும் தேவையான ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றனர். தேர்தல் விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக பொலிசார் செயற்படுகின்றனர். உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயாதீனக் குழுக்களின் வேட்பாளர்கள் தற்போது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். கட்சிகளின் பங்களிப்புடன் முக்கிய கூட்டங்கள் நடைபெறுகின்றன. வேட்பாளர்கள் வீடு வீடாகச் சென்று, வாக்காளர்களை தெளிவுபடுத்தி வருகின்றனர். முடிந்தளவு தேர்தல் விதிமுறைகளை மீறப்படாத வகையில் தேர்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்...

இரண்டு கட்டங்களின் கீழ் தபால்மூல வாக்களிப்பு

Image
அடுத்த மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இரண்டு கட்டங்களின் கீழ் இடம்பெறவிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்னாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் 22ம் திகதி தேர்தல் அலுவலகங்களிலும், பொலிஸ் நிலையங்களிலும் தபால்மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளது. ஏனைய தபால்மூல வாக்களிப்பு எதிர்வரும் 25ம் 26ம் திகதிகளில் இடம்பெறவிருப்தாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.ஏ.எல்.ரத்னாயக்க கூறினார்

மருதமுனையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கிளை திறப்பு விழா

Image
(பி.எம்.எம்.ஏ.காதர்) இவ்வருடம் பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெறவூள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலையொட்டி கல்முனை மாநகர சபைக்காக மயில் சின்னத்தில் போட்டியிடும்  வேட்பாளர்களுக்காக மருதமுனை 3ஆம் வட்டாரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்(ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு)கிளை திறப்பு விழா நாளை சனிக்கிழமை(06-01-2018)மாலை 4.00மணிக்கு  வேட்பாளர் வை.கே.றகுமான் தலைமையில் நடைபெறவூள்ளது. இங்கு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்இஅமைச்சருமான ரிஷாட் பதியூதீன் கலந்து கொண்டு கிளையைத் திறந்து வைப்பதுடன் மருதமுனை பிரதேசத்தில் மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களான ஏ.நெய்னா முஹம்மட்(2ஆம் வட்டாரம்)   வை.கே.றகுமான்;(3ஆம் வட்டாரம்)ஏ.எச்.ஏ.ழாஹிர்(4ஆம் வட்டாரம்)பஹூர்தீன் சிபான்(5ஆம் வட்டாரம்) ஆகியோரை ஆதரித்து அமைச்சர் விஷேட உரையாற்றவூள்ளார்.

பிணைமுறி மோசடி குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது!

Image
பிணைமுறி மோசடி குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது! புனர்வாழ்வு மற்றும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு  மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள விசேட அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும். நாட்டின் நலன் கருதி நடுநிலையான தீர்மானமாகவும் அது அமைந்துள்ளது என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.  காத்தான்குடியில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.  அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:-  மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு அதன் விசாரணை அறிக்கையை அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்திருந்தது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை தெளிவாக எடுத்துரைத்து அதற்கு எதிராக எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளார். இது உண்மையிலேயே வரவேற்கத்தக்க ஒரு விடயம். நல்லாட்சி அரசாங்கம் ஒருபோதும் குற்றவாளி...

கல்முனை இலங்கை வங்கி கிளையின் புத்தாண்டு கொடுக்கல் வாங்கல்

Image
கடந்த 75 வருடங்களுக்கும் மேலாக கல்முனையில் இயங்கி வரும் இலங்கை வங்கி கிளையின் 2018 புது வருடத்துக்கான புத்தாண்டு கொடுக்கல் வாங்கல் பணி ஆரம்பம் இன்று காலை வங்கி முகாமையாளர் ஐ.எம். முனவ்வர் தலைமையில் நடை பெற்றது