நற்பிட்டிமுனையில் இரண்டு மருத்துவ ஆய்வு கூட பரிசோதகர்கள்

நற்பிட்டிமுனையில்  முதல் தடவையாக இரண்டு சகோதரிகள் மருத்துவ ஆய்வு கூட விஞ்ஞான  பீடத்துக்கு தெரிவாகியுள்ளனர் . தெரிவானவர்கள் அப்துல் ரகுமான் ரிஹானா பர்வீன் , ஹம்சா மொஹிடீன் சமியா  ஆகிய இரு சகோதரிகளுமே .

இவர்கள் இருவரையும் பாராட்டி பரிசு வழங்கும் நிகழ்வு நற்பிட்டிமுனை அல் -கரீம் பவுண்ஷடேன்  ஏற்பாட்டில் இன்று மாலை சகோதரிகளின் இல்லங்களில் இடம் பெற்றது. அல் -கரீம் பவுண்டேஷன் தலைவர் சி.எம்.ஹலீம் தலைமையில் இடம் பெற்ற  நிகழ்வில் நிறுவனத்தின் செயலாளர் யு.எல்.எம்.பாயிஸ் , நிறுவன ஆலோசகர்களான  நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மத்திய மகா வித்தியாலய உதவி அதிபர் திருமதி  முனாஸிர்  மற்றும் கே.நஜிமுதீன் உட்பட சகோதரிகளின் பெற்றோரும் ,குடும்பத்தவர்களும் கலந்து கொண்டனர்.

இருவருக்கும் மாலை அணிவித்து பரிசுப்  பொதிகளும் வழங்கி வைக்கப் பட்டன . 

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்