பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வெளச்சர்கள்
ஒரு சில காரணங்களால் வவுச்சர்களைப் பெற முடியாமல் போன மாணவர்கள் எதிர்நோக்கியுள்ள சிரமத்தை கருத்திற் கொண்டு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமின் அறிவுறுத்தலுக்கு அமைய சீருடை வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் இவ்வாறு நீடிக்கப்பபட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக பாடசாலை மாணவர்களுக்கான சீருடை துணிகளை கொள்வனவு செய்வதற்காக வழங்கப்பட்டுள்ள வெளச்சர்கள் பெறுமதி எதிர்வரும் 30ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என்றும் கல்வி அமைச்சு குறிப்பிட்டு;ள்ளது.
வெளச்சர் மூலம் துணிகளை பெற்றுக்கொள்ள வழங்கப்பட்டிருந்த காலம் கடந்த மாதம் 31ஆம் திகதியுடன் முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment