Posts

Showing posts from October, 2017

வாசிப்பின் மீது நேசம் கொண்டவர்களால்தான் ஆழுமை மிக்க மேம்பாடான சமூகத்தையும், தேசத்தைக்கட்டியெழுப்ப முடியும்.

Image
நூலகர் மருதமுனை ஹரீஷா (பி.எம்.எம்.ஏ.காதர்) வாசிப்பு என்பது மிக உன்னதமான புனிதமான விடயம். வாசிப்பின் முக்கியத்துவம் பற்றி எல்லா மதங்களும் கூறுகிறது. பல புலமையாளர்கள், அறிவியல் மேதைகள், கல்வியாளர்களும் பல்வேறு கருத்துக்களையும் முன்வைத்துள்ளனர் .  இந்த நிலையில் வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் நூல்கள் வறட்சியற்ற நூலகங்களை உருவாக்க வேண்டும் என களுதாவளை பொது நூலகத்தின் நூலகர் திருமதி எம்.ஏ.சி.ஹரீஷா சமீம் தெரிவித்தார். தேசிய வாசிப்பு மாதத்தையொட்டி வாசிப்பு தொடர்பாக அவரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது:-ஒக்டோபா; மாதம் வாசிப்பு மாதமாக தேசிய ரீதியில் கொண்டாடப்படுகிறது. அருகிவரும் வாசிப்புப் பழக்கத்தை, வாசிப்புக்கலையை ஊக்குவிக்கும் வகையில் நூலகங்கள் வாயிலாக பல்வேறு நிழக்ச்சித் திட்டங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றது.  வீட்டுக்கு வீடு வாசற்படி போல ஊருக்கு ஊர்  நூலகங்கள் அமைக்கப்பட வேண்டும். வாசிப்பு என்பது ஒரு கலை அது அழகான ஒரு விடயம். வாசிப்பின் மீது நேசம் கொண்டவர்கள்தான் ஆழுமை மிக்க மேம்பாடான சமூகத்தை, சமூதயாத...

சி.எம். முபீத்தின் முயற்சியால் நற்பிட்டிமுனை ஆலயடி வடக்கு வீதி நிர்மாணம்

Image
நற்பிட்டிமுனை ஆலயடி வடக்கு  வீதியில் வசிக்கும் மக்களின் நீண்டகாலக் கனவாகவும், தாகமாகவும் இருந்த ஆலயடி வடக்கு   வீதிக்கு 5 மில்லியன் ரூபா நிதியில் கொங்றீட் வீதி அமைப்பதற்கான  முதற்கட்ட வேலைத் திட்டங்கள்   நேற்று முன்தினம்  (27) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த வீதியின் அவல  நிலை குறித்து கல்முனை மாநகர சபை முன்னாள்  உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்முனை தொகுதி அமைப்பாளர்களின் ஒருவருமான நற்பிட்டிமுனை சி.எம்.முபீத் வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாத் பதியுதீனிடம்  விடுத்த வேண்டுகோளை அடுத்து அமைச்சரினால் இந்த வீதிக்கான முதற்கட்ட நிதியாக 50இலச்சம்  ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது  கல்முனை மாநகர சபை முன்னாள்  உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்முனை தொகுதி அமைப்பாளர்களின் ஒருவருமான சி.எம்.முபீத் இந்த வீதிக்கான  வேலை திட்ட்ங்களை ஆரம்பித்து வைத்தார் 

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

Image
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் சமூகவிவகார பிரிவின் கல்முனை கிளை ஏற்பாடு செய்த "மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" என்ற கருப்பொருளில்  மர  நடுகையும் மரக்கன்றுகள் விநியோகம் செய்யும் நிகழ்வும் இன்று (28.10.2017)கல்முனை மஸ்ஜிதுல் ஹைராத் பள்ளிவாசலில் இடம் பெற்றது . இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின்  கல்முனை கிளை பொறுப்பாளர் தலைமையில் நடை பெற்ற நிகழ்வில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர்  பிரதம அதிதியாக கலந்து கொண்டு பள்ளிவாசல் வளாகத்தில் மரம் நட்டு  வைத்ததோடு பள்ளிவாசல் மஹல்லாவை சேர்ந்த முஸ்லீம் தமிழ் மக்களுக்கும் , பொது நிறுவனங்களுக்கும்   மரக்கன்றுகள்  வழங்கி  வைத்தார்  கல்முனை  அல் -பஹ்ரியா மகாவித்தியாலய அதிபர் ரசாக் ,கல்முனை  அல் -மிஸ்பாஹ் மகாவித்தியாலய அதிபர் அமீன் உட்பட இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின்  கல்முனை கிளை  உறுப்பினர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர் 

கல்முனை செலான் வங்கியின் சிறுவர் சந்தை

Image
கல்முனை செலான் வங்கி கிளையின் அனுசரணையுடன் கல்முனை கார்மேல்  பற்றிமா தேசிய பாடசாலையில் நடை பெற்ற  சிறுவர் சந்தை  வெற்றியளித்துள்ளதாக  வங்கி முகாமையாளர் திருமதி பிறேமினி மோகன்ராஜ்  தெரிவித்தார் . மாணவர்களின் கல்விக்கு  உதவும் வகையில்  சிறுவர் சேமிப்பு பழக்கத்தை  சிறுபராயத்தில்  இருந்தே  ஊக்குவிக்கும் திட்டம்  செலான் வாங்கி கிளையினால் அறிமுகப் படுத்தப் பட்டு கல்முனை பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளில்  இந்த சிறுவர்  சந்தை  திட்டம் அமுல் படுத்தப் பட்டு வருகிறது. இதன் அடிப்படையில்  புதன்  கிழமை (25)  கல்முனை வெஸ்லி உயர்தர  பாடசாலையில் சிறுவர் சந்தை  கல்லூரி அதிபர்  வே.பிரபாகரன்  தலைமையில் நடை பெற்றது. நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட   வங்கி முகாமையாளர் திருமதி பிறேமினி மோகன்ராஜ் மற்றும் உதவி முகாமையாளர் ,வங்கி உத்தியோகத்தர்கள் , பிரதி அதிபர்கள் ,உதவி அதிபர்கள் ஆசிரியர்கள் ,பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்

தேசிய கிரிக்கட் நடுவராக நற்பிட்டிமுனை றிலாஸ் நியமனம் தேசபிமான விளையாட்டு செம்மல் விருது வழங்கி கெளரவிப்பு

Image
இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டு  சபையினால் நடத்தப்பட்ட கிரிக்கட் நடுவர்களுக்கான போட்டிப் பரீட்சையில் தேசிய ரீதியாக தரம் ஐந்து நடுவராக சித்தி பெற்ற நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மத்திய மகாவித்தியாலய விளையாட்டு ஆசிரியர் அபூபக்கர் முகம்மட் றிலாஸ் நடுவராக நியமிக்கப் பட்டுள்ளார் . கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலங்க சுமதிபால பிரதம அதிதியாக கலந்து கொண்ட நிகழ்வு ஆர்.பிரேமதாச கிரிக்கட்  மைதான விளையாட்டு அரங்கில் அண்மையில் நடை பெற்றது.  உள்ளூர் கிரிக்கட் போட்டி நடவடிக்கைகளின் தலைவர் சிந்தக்க எதிர்மன்னவினால்    நியமனக் கடிதம்  வழங்கி வைக்கப் பட்டது. நற்பிட்டிமுனை மண்ணுக்கு இந்தக் கெளரவத்தை பெற்றுக் கொடுத்த  முகம்மட் றிலாஸ் நற்பிட்டிமுனை அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பினால் பாராட்டி கெளரவித்து பொன்னாடை போர்த்தி தேசபிமான விளையாட்டு செம்மல் விருது வழங்கி கெளரவித்தனர் . கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் சி.எம். முபீத்தின்  நெறிப்படுத்தலில் நற்பிட்டிமுனை அல் -கரீ...

கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் எம்.சி.அன்சாருக்கு தேசகீர்த்தி விருது

Image
(பி.எம்.எம்.ஏ.காதர்) கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் மருதமுனையைச் சேர்ந்த எம்.சி.அன்சார் அவர்களின் சமூக சேவையை கௌரவித்து மனித உரிமைகள் மக்கள் பாதுகாப்பு அமைப்பு தேசகீர்த்தி விருது வழங்கி கௌரவித்துள்ளது. இந்த நிகழவு  அண்மையில் கொழும்பு தபால் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் அமைப்பின் தலைவர் மொகமட் ஷரீக் ஹை தலைமையில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு துரைராஜ சிங்கம் மாகாணப் பணிப்பாளர் எம்.சி.அன்சாருக்கு பதக்கம் அணிவித்து விருது மற்றும் சாண்றிதழ் வழங்கி கௌரவித்தார். 1963ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் திகதி அகமது லெப்பை முகம்மது காசிம் சாலைக்குட்டி சவ்தா உம்மா தம்பதிக்கு முதல் மகனாக மருதமுனையில் பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை பெரியநீலாவணை புலவர்மணி ஷரிபுத்தீன் வித்தியலயத்திலும் உயர்கல்வியை மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியிலும்  கற்றார்.

மண்ணுக்கு மகிமை சேர்த்த நற்பிட்டிமுனை முத்துக்கள்

Image
அண்மையில்  வெளியான தரம் 05 புலமைப் பரிசு பரீட்சையில் சித்தி பெற்ற நற்பிட்டிமுனையை சேர்ந்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையிலும் , மருதமுனை அல் -ஹம்றா வித்தியாலயத்திலும்   கல்வி கற்றுகின்ற  மாணவிகள்  02 பேர் நற்பிட்டிமுனை அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில்  சமூக அபிவிருத்தி ​அமைப்பினால் பாராட்டி கெளரவிக்கப் பட்டனர் . கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் மாணவி முகம்மட் லியாஸ் ஹிமாஹதா -172 , மருதமுனை அல் -ஹம்றா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவி முகம்மட் சித்தீக் பாத்திமா ஹிஜா -169 ஆகிய இரு மாணவிகளும் மாலை அணிவித்து பரிசு வழங்கி இன்று பாராட்டி கெளரவிக்கப் பட்டனர்  முன்னாள் கல்முனை மாநகர  சபை உறுப்பினர் சி.எம். முபீத்தின் வழிகாட்டலுடன்  அமைப்பின் தலைவர் ஹலீமின் தலைமையில் இடம் பெற்ற  இந்த கெளரவிப்பு  ஒவ்வொரு மாணவரினதும் வீடுதேடிச்சென்று இடம் பெற்றது. இந்நிகழ்வில் நற்பிட்டிமுனை லாபிர்  வித்தியாலய ஆசிரியர் எம்.எல்.எம் .அஷ்ரப் ,நற்பிட்டிமுனை அல் -கரீம் நெசவாளர் மற்று...

மருதமுனை கடல் பரப்பில் மீன் பிடிக்கச் சென்ற கரவலைத் தோணி கடலில் மூழ்கியது

Image
(பி.எம்.எம்.ஏ.காதர்) வங்காள விரிகுடா கடலில் இன்று(17-10-2017)கடும் காற்றும் கடல் கொந்தளிப்புமாக இருந்தது.மருதமுனை கடல் பரப்பில் மீன் பிடிக்கச் சென்ற மருதமுனையைச் சேர்ந்த மீனவர்கள் பயணித்த கரவலைத் தோணியொன்று காலை 11 மணியளவில் கடலில் மூழ்கியது அதில் பயணித்தவர்கள் மயிரிழையில் உயிர் தப்பினார்கள் பெரும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் தோணியையும் அதில் பயனித்தவர்களையும் பொது மக்கள் 1.30 மணியளவில் கரைசேர்த்தனர்.கல்முனை பொலிசார் ஸ்தலத்திற்கு விரைந்து வந்து நிலைமைகளை அவதானித்தனர். 

பஞ்ச பாண்டவர்களின் வனவாசம்

Image
பஞ்சபாண்டவர்களின் வரலாற்றைச் சித்தரிக்கும் பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த  மஹோற்சவத்தின் 18 ஆம் நாள் சடங்கான தீ மிதிப்பு நாளை வெள்ளிக்கிழமை இடம் பெறும். தீ மிதித்தலுக்கு முந்திய இரண்டு தினங்களும் பாண்டவர்களின் வனவாசம்  செல்லும் நிகழ்வும்  தவநிலை கொள்ளலும் இடம் பெறும்  இதன் நிமிர்த்தம் வனவாசம் செல்லும் போது தர்மரிடமிருந்து வீமரிடம் வாள் மாற்றுதல், பரந்தாமன் பஞ்சபாண்டவர் ஸ்ரீ திரௌபதா தேவி சகிதம் வனவாசம் செல்லும் போது பாண்டவர்கள் நற்பிட்டிமுனை பிள்ளையார் ஆலயத்தில் ஓய்வெடுத்து கட்டுச்சாதம் குடிவழிகளாருக்கு பரிமாறி அதனை தொடர்ந்து அங்கிருந்து  அஞ்சாத வாசம் செல்லுதலும் இடம் பெற்றது.  இந்த வனவாச நிகழ்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அடியவர்கள் தீ சட்டி ஏந்தியும், காவடி ஏந்தியும் தங்களின் காணிக்கைகளை நிறைவு  செய்தனர். நாட்டின் பல பாகத்திலும் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்த அடியவர்கள் கலந்து கொண்டனர் இலங்கையில் பிரசித்தி பெற்றதும் ஐந்தாம் வேதமாகிய  மகாபாரதத்தை அடிப்படையாகக்  கொண்டதும் சரித்திரப்புகழ் பெற்றதுமான ...