கல்முனை செலான் வங்கியின் சிறுவர் சந்தை

கல்முனை செலான் வங்கி கிளையின் அனுசரணையுடன் கல்முனை கார்மேல்  பற்றிமா தேசிய பாடசாலையில் நடை பெற்ற  சிறுவர் சந்தை  வெற்றியளித்துள்ளதாக  வங்கி முகாமையாளர் திருமதி பிறேமினி மோகன்ராஜ்  தெரிவித்தார் .

மாணவர்களின் கல்விக்கு  உதவும் வகையில்  சிறுவர் சேமிப்பு பழக்கத்தை  சிறுபராயத்தில்  இருந்தே  ஊக்குவிக்கும் திட்டம்  செலான் வாங்கி கிளையினால் அறிமுகப் படுத்தப் பட்டு கல்முனை பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளில்  இந்த சிறுவர்  சந்தை  திட்டம் அமுல் படுத்தப் பட்டு வருகிறது.

இதன் அடிப்படையில்  புதன்  கிழமை (25)  கல்முனை வெஸ்லி உயர்தர  பாடசாலையில் சிறுவர் சந்தை  கல்லூரி அதிபர்  வே.பிரபாகரன்  தலைமையில் நடை பெற்றது. நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட   வங்கி முகாமையாளர் திருமதி பிறேமினி மோகன்ராஜ் மற்றும் உதவி முகாமையாளர் ,வங்கி உத்தியோகத்தர்கள் , பிரதி அதிபர்கள் ,உதவி அதிபர்கள் ஆசிரியர்கள் ,பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்








Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

மர்ஹூம் எம்.எச்.அஸ்ரபின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று