பஞ்ச பாண்டவர்களின் வனவாசம்

பஞ்சபாண்டவர்களின் வரலாற்றைச் சித்தரிக்கும் பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த  மஹோற்சவத்தின் 18 ஆம் நாள் சடங்கான தீ மிதிப்பு நாளை வெள்ளிக்கிழமை இடம் பெறும்.

தீ மிதித்தலுக்கு முந்திய இரண்டு தினங்களும் பாண்டவர்களின் வனவாசம்  செல்லும் நிகழ்வும்  தவநிலை கொள்ளலும் இடம் பெறும் 

இதன் நிமிர்த்தம் வனவாசம் செல்லும் போது தர்மரிடமிருந்து வீமரிடம் வாள் மாற்றுதல், பரந்தாமன் பஞ்சபாண்டவர் ஸ்ரீ திரௌபதா தேவி சகிதம் வனவாசம் செல்லும் போது பாண்டவர்கள் நற்பிட்டிமுனை பிள்ளையார் ஆலயத்தில் ஓய்வெடுத்து கட்டுச்சாதம் குடிவழிகளாருக்கு பரிமாறி அதனை தொடர்ந்து அங்கிருந்து  அஞ்சாத வாசம் செல்லுதலும் இடம் பெற்றது. 

இந்த வனவாச நிகழ்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அடியவர்கள் தீ சட்டி ஏந்தியும், காவடி ஏந்தியும் தங்களின் காணிக்கைகளை நிறைவு  செய்தனர். நாட்டின் பல பாகத்திலும் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்த அடியவர்கள் கலந்து கொண்டனர்

இலங்கையில் பிரசித்தி பெற்றதும் ஐந்தாம் வேதமாகிய  மகாபாரதத்தை அடிப்படையாகக்  கொண்டதும் சரித்திரப்புகழ் பெற்றதுமான   இவ்வாலயத்தில் புதினெட்டு நாட்கள் நடை பெறும் கிரியைகளைத் தொடர்ந்து  நாளை 06.10.2017 வெள்ளிக் கிழமை அதிகாலை வீர கும்பம் நிறுத்தப்பட்டு தீ மூட்டலும் இடம் பெற்று  மாலை கடல் குளித்தல் ,மஞ்சள் குளித்தலுடன் பஞ்ச பாண்டவர்களின் தீ மிதித்தலும் இடம் பெறும்







Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது