மண்ணுக்கு மகிமை சேர்த்த நற்பிட்டிமுனை முத்துக்கள்
அண்மையில் வெளியான தரம் 05 புலமைப் பரிசு பரீட்சையில் சித்தி பெற்ற நற்பிட்டிமுனையை சேர்ந்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையிலும் , மருதமுனை அல் -ஹம்றா வித்தியாலயத்திலும் கல்வி கற்றுகின்ற மாணவிகள் 02 பேர் நற்பிட்டிமுனை அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக அபிவிருத்தி அமைப்பினால் பாராட்டி கெளரவிக்கப் பட்டனர் .
கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் மாணவி முகம்மட் லியாஸ் ஹிமாஹதா -172 , மருதமுனை அல் -ஹம்றா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவி முகம்மட் சித்தீக் பாத்திமா ஹிஜா -169 ஆகிய இரு மாணவிகளும் மாலை அணிவித்து பரிசு வழங்கி இன்று பாராட்டி கெளரவிக்கப் பட்டனர்
முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சி.எம். முபீத்தின் வழிகாட்டலுடன் அமைப்பின் தலைவர் ஹலீமின் தலைமையில் இடம் பெற்ற இந்த கெளரவிப்பு ஒவ்வொரு மாணவரினதும் வீடுதேடிச்சென்று இடம் பெற்றது. இந்நிகழ்வில் நற்பிட்டிமுனை லாபிர் வித்தியாலய ஆசிரியர் எம்.எல்.எம் .அஷ்ரப் ,நற்பிட்டிமுனை அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக அபிவிருத்தி அமைப்பி செயலாளர் யு.எல்.எம்.பாயிஸ் உட்பட பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment