வாசிப்பின் மீது நேசம் கொண்டவர்களால்தான் ஆழுமை மிக்க மேம்பாடான சமூகத்தையும், தேசத்தைக்கட்டியெழுப்ப முடியும்.


நூலகர் மருதமுனை ஹரீஷா
(பி.எம்.எம்.ஏ.காதர்)
வாசிப்பு என்பது மிக உன்னதமான புனிதமான விடயம். வாசிப்பின் முக்கியத்துவம் பற்றி எல்லா மதங்களும் கூறுகிறது. பல புலமையாளர்கள், அறிவியல் மேதைகள், கல்வியாளர்களும் பல்வேறு கருத்துக்களையும் முன்வைத்துள்ளனர் .
 இந்த நிலையில் வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் நூல்கள் வறட்சியற்ற நூலகங்களை உருவாக்க வேண்டும் என களுதாவளை பொது நூலகத்தின் நூலகர் திருமதி எம்.ஏ.சி.ஹரீஷா சமீம் தெரிவித்தார்.
தேசிய வாசிப்பு மாதத்தையொட்டி வாசிப்பு தொடர்பாக அவரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது:-ஒக்டோபா; மாதம் வாசிப்பு மாதமாக தேசிய ரீதியில் கொண்டாடப்படுகிறது. அருகிவரும் வாசிப்புப் பழக்கத்தை, வாசிப்புக்கலையை ஊக்குவிக்கும் வகையில் நூலகங்கள் வாயிலாக பல்வேறு நிழக்ச்சித் திட்டங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றது. 
வீட்டுக்கு வீடு வாசற்படி போல ஊருக்கு ஊர்  நூலகங்கள் அமைக்கப்பட வேண்டும். வாசிப்பு என்பது ஒரு கலை அது அழகான ஒரு விடயம். வாசிப்பின் மீது நேசம் கொண்டவர்கள்தான் ஆழுமை மிக்க மேம்பாடான சமூகத்தை, சமூதயாததை, தேசத்தைக்கட்டியெழுப்ப முடியும்.இவ்வாறு குற்றமற்ற, யுத்தமற்ற தேசத்தைக்கட்டியெழுப்பவும், கல்வியயலாளர்கள், அறிவியல் வல்லுனர்கள், கலைஞர்கள் என பலரை உருவாக்கும் சக்தி வாசிப்புக்குண்டு. வாசிப்புக்கும், அறிவுக்கும் மிக நெருக்கமான தொடர்புண்டு, இறுக்கமான பிணைப்புண்டு.
இன்னுமொருவர்  மூலம் ஒரு தகவலை அல்லது விடயத்தை அறிந்து கொள்வதை விடவூம் சுயமாக வாசிக்கும் பழக்கம் உடையவர்கள் சுதந்திரமாக எந்தவித இடைஞ்சலுமின்றி ஆதாரபூர்வமாக அறிவை வளர்த்துக் கொள்கிறார் கள்.வாசிப்பில் உச்ச நிலையை அடைந்த மிகச் சிறந்த வாசிப்பாளன் எழுத்துக்களும் , கருத்துக்களும்தான் இன்று பல விடயங்களுக்கு முன்னுதாரணமாகக் கொள்ளப்படுகிறது.கற்றல் என்பது வேறு , வாசித்தல் என்பது வேறு கற்பவர்கள் பரீட்சைக்காக  அல்லது ஒரு நோக்கத்தை அடைவதற்காக கற்கிறார்கள். வாசித்தல் வாழ்வை வாழ்வின் நடைமுறைகளை, வாழ்க்கையை, ஒழுக்கத்தை நம்மில் படிப்படியாக படியச்செய்கிறது. 
நம் நாட்டில் மட்டுமல்ல பல்வேறு தேசத்தின் முக்கிய தலைவர்கள், முக்கிய பிரதிநிதிகள், பிரபலங்கள், எழுத்தாளர்கள், பொறுப்பு வாய்ந்த பதவிகளை வகிப்பவர்கள், சிந்தனைவாதிகள் எல்லாம் வாசிப்பை ஒரு தவமாக கொண்டவர்கள்தான். இவர்கள் நூல்களோடும், நூலகங்களோடும் உறவாடுபவர்கள்.இன்று வாசிப்பு முறை இணையத்தளம், முகநூல், வட்சப் என காலத்திற்கேற்ற வகையில் மாற்றம் பெற்றிருத்தாலும் அது ஆரோக்கியமற்ற நம்பகத்தன்மையற்ற அழிந்துவிடக்கூடிய ஒன்றாக ஆகிவிடுகிறது. 
சிறந்த வாசிப்புகலைக்கு நூலகங்களை சிறந்த தெரிவு , நூல்களுடனான, நூலகங்களுடனான தொடர்பும் உறவும், உடல் மாற்றம், மனநிம்மதி, மன ஒருமைப்பாடு மற்றும் ஆரோக்கிய சிந்தனைகள் , புத்துணர்ச்சி என்பவற்றை ஏற்படுத்தும்.மேலும் கிழக்கு மாகாணத்தில் தான் அதிகம் எழுத்தாளர்கள்,படைப்பாளிகள், கலைஞர்கள் காணப்படுகின்றார்கள் மிக அதிகமான பத்திரிகைகள், சஞ்சிகைகள் கிழக்கில்தான் விற்பனையாகின்றன, கிழக்கிலிருந்துதான் அதிகமான படைப்பிலக்கியங்கள் வெளிக்கொணரப்படுகின்றன. 
குறிப்பாக யுத்த சூழ்நிலை முற்றுப்பெற்று சமாதானம் சாத்தியமான பின் மிகச் சந்தோசமான நிம்மதியான வாழ்வு  நிலைக்கு வந்த பின் பல எழுத்தாளர்கள். கலைஞர்கள் கலை வெளியீடுகளை அதிகம் பிரசவித்துக் கொண்டிருக்கின்றனர். எதிர்காலத்தில் தன்னிறைவு மிக்க  மானிடசமூகத்தையும், புத்திஜீவிகளை உருவாக்கவும் வாசிப்பு முக்கிய பங்கு வகிக்கின்றது. 
அந்த வகையில் காலத்துக்கேற்றவாறு வாசிப்பின் முக்கியத்துத்தை உணர் த்தவும், நூலகங்களின் பக்கம் வாசகர்களை வசீகரிக்கவும், நூலகங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்படவேண்டும்.இதற்கு நூல் வரட்சியற்ற நூலகங்களை உருவாக்குவதோடு இன்றைய நவீன காலத்திற்கு ஏற்றவாறு வாசகர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.


Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்