நற்பிட்டிமுனை கரீம் முகம்மது ஹலீமுக்கு சத்தியஜோதி விருது
நம்நாடு நற்பணி பேரவையின் ஹிந்தி கீத்ராத் நிகழ்வு நேற்று கொழும்பு ஜே.ஆர். ஜெயவர்தன மண்டபத்தில் நடை பெற்றது. சாம ஸ்ரீ அல் -ஹாஜ் ரபீக் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் நற்பிட்டிமுனை ஹலீமுக்கு சத்தியஜோதி விருது வழங்கி கௌரவிக்கப் பட்டுள்ளது. நற்பிட்டிமுனை அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக அபிவிருத்தி அமைப்பின் தலைவரும், கைத்தொழில் வாணிகத்துறை அமைச்சரின் இணைப்பு உத்தியோகத்தரும் , அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கல்முனை தொகுதி இளைஞர் அமைப்பாளருமான நற்பிட்டிமுனை கரீம் முகம்மது ஹலீம் இந்த விருதைப் பெற்றுக் கொண்டுள்ளார் . கௌரவிக்கப் பட்ட 15 பேருள் வயது குறைந்தவர் ஹலீமாவார் . கௌரவிப்பு விழாவில் சமூக வலுவூட்டல் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, புரவலர் ஹாசிம் உமர் ,நற்பணி மன்றத்தின் தலைவர் தேசமானி ரபீக் ஆகியோரால் ஹலீம் பொன்னாடை போர்த்தி சத்திய ஜோதி விருது வழங்கி கௌரவித்தனர்