தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற பொத்துவில் அஸ்ரபுக்கு கல்முனையில் மகத்தான வரவேற்பு

தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றி 4×100M ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தையும் 100M ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் வென்று  தாய் நாட்டிற்கும்  கிழக்கு மாகாணத்திற்கும்  பெருமை தேடித் தந்த பொத்துவிலைச் சேர்ந்த செல்வன் எம்.அஸ்ரபை  பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கல்முனையில் இடம் பெற்றது.
 கல்முனை சனி மௌண்ட் விளையாட்டுக் கழகமும்  கல்முனை பொது மக்களும் இணைந்து ஏற்பாடு செய்த வரவேற்பு  பாராட்டு விழா வைபவம் நேற்று கல்முனை நகரில் இடம் பெற்றது.
கழகத்தின் தலைவர் எம்.ஏ.கரீம் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் கழகத்தின் பொது செயலாளர் அப்துல் மனாப்  ,  விளையாட்டு வீரரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.எம்.றியாஸ்(பெஸ்டர் ) உள்ளிட்ட கல்முனை பிரமுகர்கள் பலர் இணைந்து  பொன்னாடை அணிவித்து  மலர் மாலைகள் சூடி  நகரின் மத்தியில் வரவேற்றனர்.







Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்