"பிள்ளைகளை உயிர் போல் காப்போம்" கல்முனையில் விழிப்புணர்வு ஊர்வலம்
பிள்ளைகளை உயிர் போல் காப்போம் , உங்கள் பிள்ளை பாதுகாப்பானவரா ? என்ற கருப் பொருளைக் கொண்டதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் சிறுவர் மற்றும் பெண்கள் செயற்குழு தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் , ஸ்ரீ லங்கா இளைஞர் கழக சம்மேளனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த விழிப்புணர்வு ஊர்வலமும் துண்டு பிரசுரம் விநியோகிக்கும் நிகழ்வும் இன்றுகாலை கல்முனை பிரதேச செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப் பட்டது. கல்முனை பிரதேச செயலாளர் எம் .எச்.முகம்மது கனி தலைமையில் இடம் பெற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தில் பிரதேச செயலக கணக்காளர் எம்.எம்.எம்.ஹுசைனுதீன் ,திவிநெகும தலைமைப் பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் உட்பட பிரதேச செயலக அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர். பிரதேச செயலகத்தில் இருந்து ஆரம்பமான இவ்வூர்வலம் கல்முனை பொது சந்தையை சென்றடைந்து அங்கு துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு நகர் ஊடாக ஊர்வலமாக செயலகத்தை சென்றடைந்தது .