Posts

கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் கல்வி கற்ற பழைய மாணவ மாணவிகளின் ஒன்று கூடல்

Image
கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் கல்வி கற்ற பழைய மாணவ மாணவிகளின்  ஒன்று கூடல்  நேற்று (20) கல்லூரி நல்லதம்பி மண்டபத்தில் நடை பெற்றது. "பசுமை நினைவுகள் மீட்போம்  இனிய உறவுகள் காப்போம் " என்ற தொனிப் பொருளுடன்  கல்லூரி பழைய மாணவனும்  கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.எம்.றியாஸ் (பெஷ்டர் ) தலைமையில் நடை பெற்ற இந்த சந்திப்பில் 1972 தொடக்கம் 1986 வரை கல்வி கற்ற  பழைய மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். எதிர்வரும் காலத்தில் பாடசாலையில் எவ்வாறான திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பான  விரிவான  கருத்துக்கள் கூறப் பட்டதுடன்  கல்லூரி அதிபரை சந்தித்து  பழைய மாணவர் சங்கம் இயங்குவதற்கான அங்கீகாரத்தைப் பெற்று அதன் படி  செயற்படுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. மேலும்  இப்பாடசாலையில் கல்வி கற்ற பழைய மாணவர்கள்  பெஸ்டர் றியாசுடன் (`0773246870 ) தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றீர்கள் 

ஒரு தீய ஆட்சியை நல்லாட்சியாக மாற்றக்கூடிய வல்லமை ஊடகங்களுக்கும்,ஊடகவியலாளர்களுக்கும் உண்டு

Image
 கலாபூஷணம் மீரா எஸ் இஸ்ஸடீன்;   (பி.எம்.எம்.ஏ.காதர்)  சமூகத்தின் நல்வழிகாட்டலில் ஊடகங்களுக்கும் ,ஊடகவியலாளர்களுக்கும், பெரும் பங்கு உண்டு ஒரு தீய ஆட்சியை நல்லாட்சியாக மாற்றக்கூடிய  வல்லமை ஊடகங்களுக்கும்,ஊடகவியலாளர்களுக்கும்  உண்டு என அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் கலாபூஷணம் மீரா எஸ் இஸ்ஸடீன்  தெரிவித்தார். அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம்  இன்று(21-02-2016)சாய்ந்தமருது சீ பிறீச் மண்டபத்தில் “எயார் கின்ங்ஸ் பிறைவெட் லிமிடட்” அனுசரணையில் நடைபெற்றது இதில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் சிரேஷ்;ட உறுப்பினரும் ,ஆலோசகர்களில் ஒருவருமான எம்.எல்.எம்.ஜமால்டீன் தலைமையில் நடப்பு வருடத்திற்கான நிர்வாகத் தெரிவு  இடம்பெற்றது இதில் கலாபூஷணம் மீரா எஸ் இஸ்ஸடீன், 18ஆவது தடவையாக மீண்டும் தலைவராகத் தெரிவு  செய்யப்பட்டார். இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது :-தீய ஆட்சியை நல்லாட்சியாக மாற்றக்கூடி வல்லமை உள்ள ஊடகவியலாளர்கள் தூர நோக்குடையவர்களாகவும்; சமூக சிந்தனை உள்ளவர்க

அம்பாறை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளன செயலாளராக நிந்தவூர் எம்.ஏ.எம்.ரஸீன்

Image
அம்பாறை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளன செயலாளராக  நிந்தவூர் எம்.ஏ.எம்.ரஸீன் தெரிவு செய்யப் பட்டுள்ளார். இவர் நிந்தவூர் ஜும்மா  பள்ளிவாசல் செயலாளராகவும்  கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில்  இன நல்லிணக்க  மற்றும் சமாதானக் கல்வி அதிகாரியாகவும் பணி  புரிகின்றார் .

அம்பாறை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவராக உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.சக்காப் தெரிவு

Image
அம்பாறை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவராக உதவிக் கல்விப் பணிப்பாளர்  ஏ.எல்.சக்காப்   சம்மேளன வருடாந்த  பொதுக் கூட்டத்தில் தெரிவாகியுள்ளார். சம்மேளனத்தின் வருடாந்த பொதுக் கூட்டமும் புதிய நிருவாக தெரிவும் கடந்த ஞாயிற்றுக் கிழமை கல்முனைக்குடி முகைதீன் ஜும்மா  பள்ளிவாசலில்  சம்மேளன தலைவர் எஸ்.எம்.ஏ.அஸீஸ்  தலைமையில் நடை பெற்றது . இதன் போது  நடை பெற்ற  நிருவாக தெரிவின் போதே புதிய தலைவராக சக்காப் தெரிவு செய்யப் பட்டுள்ளார் . கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின்  முறைசாராக் கல்வி அபிவிருத்திப் பிரிவுக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் பதவி வகிக்கும் இவர் மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் ஜும்மா  பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தலைவராகவும்  அப்பள்ளி வாசலின்  கட்டிட நிர்மாணக் குழு தலைவராகவும் ,கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் கல்விசாரா உத்தியோகத்தர் சங்க தலைவராகவும் ,மருதமுனை  கல்வி அபிவிருத்தி சபை செயலாளர் பதவி வகிக்கும்  இவர்  அகில இலங்கை சமாதான நீதவானாகவும்  பணியாற்றுகின்றமை  குறிப்பிடத்தக்கது. 

கிழக்கு கிழக்காகவே இருக்க வேண்டும் கிழக்கு மக்களின் அங்கீகாரமின்றி வடக்குடன் கிழக்கை இணைக்கக் கூடாது பேராசிரியர்.எம்.ஏ.எம்.சித்தீக்

Image
(பி.எம்.எம்.ஏ.காதர்) வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பது அங்கீகரிக்கப்பட்ட ஒரு விடையமாக தமிழர் பேரவை பேசிக்கொண்டிருக்கிறது.கிழக்கு கிழக்காகவே இருக்க வேண்டும் கிழக்கு மாகாண மக்களின் அங்கீகாரமின்றி வடக்குக் கிழக்கு இணைக்கக் கூடாது என்பதை புதிய அரசியலமைப்புத் திருத்தத்திற்கு முன் மொழிய வேண்டும் என பேராசிரியர் டொக்டர் எம்.ஏ.எம்.சித்தீக் தெரிவித்தார்.  கல்முனை அபிவிருத்திக்கும் முகாமைத்துவத்துவத்துக்குமான சபை ஏற்பாடு செய்திருந்த இலங்கையின் அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் மக்களின் கருத்துக்களை அறியும் “உத்தேச அரசில் யாப்பும் முஸ்லிம்களும்”என்ற தலைப்பிலான கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிமை(14-02-2016)காலை தொடக்கம் மாலை வரை மாளிகைக்காடு பிஸ்மில்லாஹ் மண்டபத்தில் நடைபெற்றது இதில் கௌரவ அதிதியாக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கல்முனை அபிவிருத்திக்கும் முகாமைத்துவத்துவத்துக்குமான சபையின் தலைவர் டொக்டர் ஏ.எல்.எம்.நஸீரின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் பேராசிரியர் டொக்டர் எம்.ஏ.சித்தீக் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது :-தமிழர் பேரவையின் வரைவிலே  அ

அரசியல் யாப்பு தொடர்பான முன்மொழிவுகளை மேற்கொள்ள அம்பாறை மாவட்டத்தில் 'கிழக்கிலங்கை முஸ்லிம் மஜ்லிஸ்' எனும் அமைப்பு...

Image
( அப்துல் அஸீஸ் ) உத்தேச புதிய அரசியல் யாப்பு தொடர்பான முன்மொழிவுகளை மேற்கொள்ள அம்பாறை மாவட்டத்தில் 'கிழக்கிலங்கை முஸ்லிம் மஜ்லிஸ்' எனும் அமைப்பு நேற்று (14) உருவாக்கப்பட்டுள்ளது. கல்முனை அபிவிருத்திக்கும்,முகமைதுவத்து க்குமான சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட உத்தேச 'அரசியல் யாப்பும்  முஸ்லிம்களும்' எனும் தலைப்பிலான செயலமர்வு  நேற்று மாளிகைக்காடு பிஸ்மில்லாஹ் ஹோட்டல் மண்டபத்தில் இடம்பெற்றது. இதன் போது உத்தேச புதிய அரசியல் யாப்பு தொடர்பாக விழிப்பூட்டப்பட்டதுடன், குழு நிலை கலந்தலோசனனைகளும் இடம்பெற்றதனை அடுத்து எதிகாலத்தில் இவ்விடயங்கள்  தொடர்பான முன்னெடுப்புக்களுக்காக சபையினரினால்  'கிழக்கிலங்கை முஸ்லிம் மஜ்லிஸ்' எனும் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. மேலும் எதிர்காலத்தில் சிவில் சமுக அமைப்புக்களுடன் கலந்தாலோசனைகள் செய்தே   அரசியல் கட்சிகள்   இவ்விடயம் தொடர்பான முன்மொழிவுகளை மேற்கொள்ளுவது மிகவும் அவசியமாகும், அவ்வாறு இல்லாவிடின் குறிப்பிட்ட முன்மொழிவுகள்  ஏற்றுக்கொள்ளப்பட கூடாது எனும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. கல்முனை அபிவிருத்திக்கும்,முகமைதுவத

கல்முனை சைனிங் விளையாட்டுக்கழகத்தின் 34ஆவது ஆண்டு நிறைவு கிரிக்கட் சுற்றுப் போட்டியில் பெரிய நீலாவணை காவேரி விளையாட்டுக் கழகம் சம்பியன்

Image
கல்முனை சைனிங் விளையாட்டுக்கழகத்தின் 34ஆவது ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப் பட்ட மென் பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியில்  பெரிய நீலாவணை  காவேரி  விளையாட்டுக் கழகம்  சம்பியன்  கேடயத்தைப் பெற்றுக்  கொண்டது. கல்முனை சைனிங் விளையாட்டுக்கழகத்தின் 34ஆவது ஆண்டு நிறைவையொட்டி கடந்த ஒருமாத காலமாக நடாத்திய 42 கழகங்கள் பங்குபற்றிய மென்பந்துக்கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி இன்று  13ஆம் திகதி சனிக்கிழமை  கல்முனை சைனிங் விளையாட்டு மைதானத்தில் நடை பெற்றது . இன்று  இடம் பெற்ற   இறுதிச் சுற்றுப்போட்டியில் சவளக்கடை செல்வா அணி  பெரியநீலாவணை காவேரி அணிகள் மோதின . இப்போட்டியில்  காவேரி அணி எட்டு ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 69 ஓட்டங்களைப் பெற்றன . அதனை எதிர்த்தாடிய சவளக்கடை  செல்வா அணி அணைத்து விக்கட்டுக்களையும் இழந்து 48 ஓட்டங்களை பெற்றது . சைனிங்  வெற்றிக்கிண்ண இறுதிப்போட்டிக்கும் பரிசளிப்பு விழாவிற்குமான பிரதம அதிதியாக கல்முனை ஆதார வைத்திய சாலை வைத்தியஅத்தியட்சகர் டாக்டர் இரா.முரளீஸ்வரன் கலந்து சிறப்பித்தார்  பிரபல சமூகசேவையாளர் தொழிலதிபர் எஸ்.சந்திரசேகரம் ராஜன் , கல்முனை ஆதா