அம்பாறை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவராக உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.சக்காப் தெரிவு
அம்பாறை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவராக உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.சக்காப் சம்மேளன வருடாந்த பொதுக் கூட்டத்தில் தெரிவாகியுள்ளார்.
சம்மேளனத்தின் வருடாந்த பொதுக் கூட்டமும் புதிய நிருவாக தெரிவும் கடந்த ஞாயிற்றுக் கிழமை கல்முனைக்குடி முகைதீன் ஜும்மா பள்ளிவாசலில் சம்மேளன தலைவர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் தலைமையில் நடை பெற்றது . இதன் போது நடை பெற்ற நிருவாக தெரிவின் போதே புதிய தலைவராக சக்காப் தெரிவு செய்யப் பட்டுள்ளார் .
கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் முறைசாராக் கல்வி அபிவிருத்திப் பிரிவுக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் பதவி வகிக்கும் இவர் மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தலைவராகவும் அப்பள்ளி வாசலின் கட்டிட நிர்மாணக் குழு தலைவராகவும் ,கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் கல்விசாரா உத்தியோகத்தர் சங்க தலைவராகவும் ,மருதமுனை கல்வி அபிவிருத்தி சபை செயலாளர் பதவி வகிக்கும் இவர் அகில இலங்கை சமாதான நீதவானாகவும் பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment