கல்முனை சைனிங் விளையாட்டுக்கழகத்தின் 34ஆவது ஆண்டு நிறைவு கிரிக்கட் சுற்றுப் போட்டியில் பெரிய நீலாவணை காவேரி விளையாட்டுக் கழகம் சம்பியன்

கல்முனை சைனிங் விளையாட்டுக்கழகத்தின் 34ஆவது ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப் பட்ட மென் பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியில்  பெரிய நீலாவணை  காவேரி  விளையாட்டுக் கழகம்  சம்பியன்  கேடயத்தைப் பெற்றுக்  கொண்டது.

கல்முனை சைனிங் விளையாட்டுக்கழகத்தின் 34ஆவது ஆண்டு நிறைவையொட்டி கடந்த ஒருமாத காலமாக நடாத்திய 42 கழகங்கள் பங்குபற்றிய மென்பந்துக்கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி இன்று  13ஆம் திகதி சனிக்கிழமை  கல்முனை சைனிங் விளையாட்டு மைதானத்தில் நடை பெற்றது .

இன்று  இடம் பெற்ற   இறுதிச் சுற்றுப்போட்டியில் சவளக்கடை செல்வா அணி  பெரியநீலாவணை காவேரி அணிகள் மோதின . இப்போட்டியில்  காவேரி அணி எட்டு ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 69 ஓட்டங்களைப் பெற்றன . அதனை எதிர்த்தாடிய சவளக்கடை  செல்வா அணி அணைத்து விக்கட்டுக்களையும் இழந்து 48 ஓட்டங்களை பெற்றது .
சைனிங்  வெற்றிக்கிண்ண இறுதிப்போட்டிக்கும் பரிசளிப்பு விழாவிற்குமான பிரதம அதிதியாக கல்முனை ஆதார வைத்திய சாலை வைத்தியஅத்தியட்சகர் டாக்டர் இரா.முரளீஸ்வரன் கலந்து சிறப்பித்தார்

 பிரபல சமூகசேவையாளர் தொழிலதிபர் எஸ்.சந்திரசேகரம் ராஜன் ,கல்முனை ஆதார வைத்தியசாலை உதவி வைத்திய அத்தியட்சகர் டாக்டர்.எஸ்.இராஜேந்திரன்  கல்முனை மாநகரசபை எதிர்க்கட்சித்தலைவர் கு.ஏகாம்பரம் கிழக்கிலங்கை இந்துசமய விழிப்புணர்வுச்சபையின் ஆலோசகர் ஆர்.சோமாஸ்கந்தன் ஆகியோர் கௌரவ அதிதிகளாககலந்து கொண்டனர்.

கல்முனை சைனிங் விளையாட்டுக்கழகத்தின் 34ஆவது ஆண்டு நிறைவு   கிரிக்கட் சுற்றுப் போட்டியில்  பெரிய நீலாவணை  காவேரி  விளையாட்டுக் கழகம்  சம்பியன்







Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்