அரசியல் யாப்பு தொடர்பான முன்மொழிவுகளை மேற்கொள்ள அம்பாறை மாவட்டத்தில் 'கிழக்கிலங்கை முஸ்லிம் மஜ்லிஸ்' எனும் அமைப்பு...

( அப்துல் அஸீஸ் )



உத்தேச புதிய அரசியல் யாப்பு தொடர்பான முன்மொழிவுகளை மேற்கொள்ள அம்பாறை மாவட்டத்தில் 'கிழக்கிலங்கை முஸ்லிம் மஜ்லிஸ்' எனும் அமைப்பு நேற்று (14) உருவாக்கப்பட்டுள்ளது.

கல்முனை அபிவிருத்திக்கும்,முகமைதுவத்துக்குமான சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட உத்தேச 'அரசியல் யாப்பும்  முஸ்லிம்களும்' எனும் தலைப்பிலான செயலமர்வு  நேற்று மாளிகைக்காடு பிஸ்மில்லாஹ் ஹோட்டல் மண்டபத்தில் இடம்பெற்றது. இதன் போது உத்தேச புதிய அரசியல் யாப்பு தொடர்பாக விழிப்பூட்டப்பட்டதுடன், குழு நிலை கலந்தலோசனனைகளும் இடம்பெற்றதனை அடுத்து எதிகாலத்தில் இவ்விடயங்கள்  தொடர்பான முன்னெடுப்புக்களுக்காக சபையினரினால்  'கிழக்கிலங்கை முஸ்லிம் மஜ்லிஸ்' எனும் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது.

மேலும் எதிர்காலத்தில் சிவில் சமுக அமைப்புக்களுடன் கலந்தாலோசனைகள் செய்தே   அரசியல் கட்சிகள்   இவ்விடயம் தொடர்பான முன்மொழிவுகளை மேற்கொள்ளுவது மிகவும் அவசியமாகும், அவ்வாறு இல்லாவிடின் குறிப்பிட்ட முன்மொழிவுகள்  ஏற்றுக்கொள்ளப்பட கூடாது எனும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

கல்முனை அபிவிருத்திக்கும்,முகமைதுவத்துக்குமான சபையியின் தலைவரும், கல்முனை  அஷ்ரப்  வைத்தியசாலையின்   வைத்திய அத்தியட்சகருமாகிய வைத்திய கலாநிதி எ.எல்.எம்.நஸீர் தலைமையில் இடம்பெற்ற இந்  நிகழ்வில் கொழும்பு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர்  சட்டத்தரணி எம்.எ.எம்.ஹக்கீம்,  பேராதனை பல்கலைக்கழக ஓய்வு பெற்ற சிரேஷ்ட விரிவுரையாளர்  பேராசிரியர் எம்.ஐ.எம்.சித்தீக், வைத்திய கலாநிதி வை.எல்.எம்.யூசுப் ஆகியோர்கள் சிறப்புரை  வழங்கியதுடன், இதில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த புத்திஜீவிகள், கல்வியலாளர்கள், சிவில் சமுக அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

'கிழக்கிலங்கை முஸ்லிம் மஜ்லிஸ்' எனும் அமைப்பு  எதிர்வரும் சில தினங்களில் கிழக்கு மாகாணம் எங்கும் விஸ்தரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.









Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்