Posts

உதிரம் கொடுப்போம் உயிர்களைக்காப்போம் மருதமுனையில் மாபெரும் இரத்தான நிகழ்வு

Image
(பி.எம்.எம்.ஏ.காதர்- யு.எம்.இஸ்ஹாக் ) ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் மருதமுனை கிளை மூறாவது முறையாக ஏற்பாடு செய்துள்ள மாபெரும் இரத்தான முகாம் எதிர் வரும் 2017-07-30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00மணி தொடக்கம் மாலை 3.30 மணிவரை மருதமுனை மசூர்மௌனா வீதியில் அமைந்துள்ள கிளை வளாகத்தில் நடைபெறவுள்ளது. ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் மருதமுனை கிளை  கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப்பிரிவுடன் இணைந்து உதிரம்; கொடுப்போம் உயிர்களைக்காப்போம் என்ற தொனிப்பொருளில் இந்த இரத்ததான முகாமை ஏற்பாடு செய்துள்ளது.பெண்களுக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மனிதம் பேணும் இந்த மகத்தான பணிக்கு அனைவரும் அணிதிரண்டு வருமாறு ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் மருதமுனை கிளையின் செயலாளர் எம்.எச்.அஹமட்   அஜ்மீர் அழைப்பு விடுத்துள்ளார்.

கல்முனையின் காவலன் கலாநிதி ஏ.ஆர். மன்சூர் காலமானார்.

Image
கல்முனையின் காவலன் என்றழைக்கப்பட்ட கல்முனை பிரதேசத்தின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி ஏ.ஆர். மன்சூர் இன்று மாலை கொழும்பு தனியார் வைத்தியசாலையில் காலமானார். அவரது ஜனாஸா இன்று(2017.07.25) இரவு  விசேட விமானத்தில் கல்முனைக்கு கொண்டுவரப்பட்டு நாளை(26) கல்முனையில்  அடக்கம் செய்யப்படவுள்ளது. கல்முனை பிரதேசத்தின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி ஏ.ஆர். மன்சூர் அவர்கள் 1977 தொடக்கம் 1994ம் ஆண்டு வரையிலான 17 வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராகவும், யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு  மாவட்ட அமைச்சராகவும், வர்த்தக, வாணிபம் மற்றும் கப்பல்துறை அமைச்சராகவும் பணியாற்றி அரசியலிருந்து  கெளரவமாக ஓய்வு  பெற்றவர். பின்னர் சில ஆண்டுகள் குவைத் நாட்டின் இலங்கைக்கான தூதுவராகவும் பணியாற்றினார். பெரும்பாலான அரசியல்வாதிகளைப் போல் அரசியல் இருப்புக்களை தக்கவைத்துக்கொள்ள குறுக்கு வழிகளை செயற்படுத்த விரும்பாத மிகவும் நேர்மையான அரசியல்வாதியாக இறுதிவரையில் செயற்பட்டுவந்தவர். சமூக பொறுப்புகள் நிறைந்த, சமூக நெருக்கடிகளுக்கு மத்தியில் உ...

சவூதி இளவரசர் நாளை காத்தான்குடிக்கு விஜயம்

Image
(ஆர்.ஹஸன்) புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் ஏற்பாட்டில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சவூதி அரேபியாவின் முன்னணி முதலீட்டாளரும், இளவரசருமான பஹத் பின் முக்ரீன் பின் அப்துல் அஸீஸ் இன்று சனிக்கிழமை இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வை சந்தித்து முதலீடுகள் குறித்து விசேட கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.  சவூதி இளவரசர் தலைமையிலான தூதுக்குழுவுடன் இராஜாங்க அமைச்சின் காரியாலயத்தில் இன்று சனிக்கிழமை காலை நடைபெற்ற மேற்படி கலந்துரையாடலில் மட்டக்களப்பு கெம்பஸ் நிறைவேற்று பணிப்பாளர் பொறியியலாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ், அஷ்ஷெ;ய்யித் மசூர் மௌலானா ஆகியோரும் கலந்து கொண்டனர்.  இதன்போது, இலங்கையின் சுற்றுலாத்துறை, நகர அபிவிருத்தி, கட்டிட நிர்மாணம் மற்றும் வீடமைப்பு துறைகளில் முதலீடு செய்வது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரச உயர் மட்டத்துடனான பேச்சுக்களை எவ்வாறு மேற்கொள்ளவது என்பது தொடர்பிலும் ஆராயப்பட்டன.  இதேவேளை, நாளை ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொள்ளவுள...

நற்பிட்டிமுனை லாபிர் வித்தியாலய பேண்ட் வாத்திய குழு மாணவர்களுக்கான சீருடை வழங்கும் வைபவம்

Image
நற்பிட்டிமுனை அல் கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக அபிவிருத்தி அமைப்பின் அனுசரணையுடன் வித்தியால அதிபர் வை.எல்.ஏ பஷீர் தலைமையில் நடை பெற்றது . கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் ,அமைப்பின் தலைவர் சி.எம்.ஹலீம் ,முன்னாள் மாநகர சபை உறுப்பினர் சி.எம்.முபீத் ,அமைப்பின் செயலாளர் யு.எல்.எம்.பாயிஸ் உட்பட பிரதிக்கல்விப்பணிப்பாளர்கள் எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா ,எஸ்.எல்.ஏ.றஹீம் , பீ.எம்.வை அரபாத் முகைதீன் . கோட்டக் கல்வி அதிகாரி ஏ.எல்.சக்காப் மற்றும் அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சீருடை அணிவிப்பதை காணலாம்.மண்ணின் மைந்தன் பிரபல அறிவிப்பாளர் வீ.எம்.மக்பூல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்

கிழக்கு ஆளுநருக்கு சமூக சேவையாளர் நற்பிட்டிமுனை ஹலீம் வாழ்த்து

Image
கிழக்கு மாகாண ஆளுனராக  ரோஹித போகொல்லாகம பதவியேற்றபின்னர் ஆளுநர்  அலுவலகத்துக்கு சென்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான  றிஷாத் பதியுதீனின் இணைப்பாளரும் ,சமூகசேவையாளருமான நற்பிட்டிமுனை சி.எம்.ஹலீம்  ஆளுநருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்

புதிய கிழக்கு மாகாண ஆளுநருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

Image
(அகமட் எஸ். முகைடீன்) முன்னாள் வெளிவிவகார அமைச்சர் சட்டத்தரணி ரோஹித போகல்லாகம புதிய கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் ஆளுநர் பதவிக்கு மிகவும் பொருத்தமான ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பதையிட்டு பெருமகிழ்வடைவதாகவும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.  பிரதி அமைச்சர் ஹரீஸ் அச்செய்தியில் மேலும் தெரிவிக்கையில், மாகாணத்தில் ஜனாதிபதியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மாகாண ஆளுநர் மாகாணத்தின் நிறைவேற்றாளராக செயற்படுகின்றார். அந்தவகையில் அனுபவமும் ஆற்றலும் மிக்க ஒருவர் கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதனால் கிழக்கு மாகாணத்தின் நடவடிக்கைகள் மேலும் சிறப்பாக அமைவதற்கு வழிவகுப்பதோடு, எதிர்காலத்தில் கிழக்கின் நிர்வாக கட்டமைப்பு மேன்மையடைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.   வெளிவிவகார அமைச்சராக கடமையாற்றியதன் மூலம் பல்தேசத்தவர்களுடனும் இலங்கை நாட்டின் உறவை வலுப்படுத்துவதற்கு பங்களிப்புச் செய்த முன்னாள் அமைச்சர் ரோகித போகல்லாகம கிழக்கு மாகாண ஆளு...

பல்கலைக்கழக மாணவர்கள் அனுமதிக்கான கால எல்லை நீடிப்பு

Image
2016-2017 கல்வியாண்டுக்கென பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான காலஎல்லை நீடிக்கப்பட்டுள்ளது. நாளை முடிவடைய இருந்த கால எல்லை எதிர்வரும் ஜுலை மாதம் 7ம் திகதி வரை நீடிக்கப்பட்டள்ளதாக பல்ககைலழகங்கள் மானிய ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா தெரிவித்தார். இதுவரை 71 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன என்றும் மானிய ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.

காத்தான்குடி கடற்கரை வீதி திறந்து வைப்பு

Image
(ஆர்.ஹஸன்) புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளுக்கு இணங்க உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் 60 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் காபட் இடப்பட்டு புனர்நிர்மாணம் செய்யப்பட்ட காத்தான்குடி கடற்கரை வீதி (மெரைன் டிரைவ்)  நேற்று புதன்கிழமை மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.  கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் ஜே.பி. தலைமையில் நடைபெற்ற வீதி திறப்பு விழாவில், இராஜாங்க அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வீதியை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.  காத்தான்குடி கடற்கரை வீதியை காபட் இட்டு அபிவிருத்தி செய்யுமாறு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் முன்வைத்த கோரிக்கையை ஏற்ற அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தனது நெடுஞ்சாலைகள் அமைச்சினால் 60 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்திருந்தார். இதற்கமைய 2.8 கிலோ மீற்றர் தூரம் காபட் இடப்பட்டுள்ளதுடன் மீதமுள்ள சிறயளவு தூரத்தையும் காபட் இடுவதற்கான நடவடிக...

தரம் 1ற்கான அனுமதிப்பத்திரங்களை பாடசாலை அதிபர்களிடம் கையளிக்கலாம்

Image
தரம் 1இல் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை நேரடியாக பாடசாலை அதிபர்களிடம் கையளிக்கலாம் என்று கல்வி அமைச்சின் தேசிய பாடசாலைகளுக்கு பொறுப்பான பணிப்பாளர் ஜயந்த விக்ரமரட்ன தெரிவித்துள்ளார். 2018 ஆண்டு தரம் ஒன்றில் மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான விண்ணப்பங்களை தபாலில் சேர்ப்பதற்குரிய காலக்கெடு வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகின்றது. தபால் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதில் சில பெற்றோர் சிக்கல்களை எதிர்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தகைய பெற்றோர் தாம் விண்ணப்பிக்கும் பாடசாலையின் அதிபரிடம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதுபற்றி சகல பாடசாலை அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை கையேற்கும் அதிபர்கள் அதனை ஏற்றுக் கொண்டதற்கான எழுத்துமூல ஆதாரத்தை சமர்ப்பிப்பார்கள் என்றும் கல்வி அமைச்சின் தேசிய பாடசாலைகளுக்கு பொறுப்பான பணிப்பாளர் ஜயந்த விக்ரமரட்ன மேலும் தெரிவித்தார்.

விருப்பமின்றி எம்மை விட்டும் விடைபெறும் ரமழான்

Image
இரக்கமுள்ள இறைவன் எமக்கு அனுப்பிவைத்த அருட்கொடையை சுமந்து வந்து  வழங்கி விட்டு விருப்பமின்றி எம்மை விட்டும் விடைபெறும் இப்புனித ரமழானின் அருள் நிறைந்த இம்மாதத்தின் நிறைவில் கண்ணெட்டும் தூரத்து வான்தொட்ட நூல்இளை ஒளிக் கீறலாய் ஷவ்வால் ஏந்தி வந்து இளம் பிறை தந்த  நோன்புப் பெருநாளான இன் நன்னாளை வைகறைவிடியலில் விழித்தெழுந்து கடற்கரை  நீள் மணல்பரப்பிலும் மஜ்லிஸ்களிலும் ஒன்றிணைந்த அல்லாஹூ அக்பர் எனும் தக்பீரின் ஓசையுடன் தொழுகையோடு தொடர்ந்து ஈத் முபாறக் எனும் வாழ்த்தொலிகளுடன் பரஸ்பரம் அன்போடு பரிமாறி கொண்டாடித் திளைத்திருக்கும் அகிலத்தின் இசுலாமிய உறவுகள் மற்றும்  என் முகநூல் நண்பர்கள் அனைவருக்கும்  ஈகைத்திரு நாளின் எனதினிய நல் வாழ்த்துகள் மருதூர் மெளஜுன் Zim,mazhoth

முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சி.எம்.முபீத் அவர்களின் பெருநாள் வாழ்த்து

Image

கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளரின் பெருநாள் வாழ்த்து

Image

இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத் தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதி தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீலின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

Image
யூ.கே.காலித்தீன்  வாதம் மேலோங்கியிருக்கின்ற சூழலில் நமக்காக துணிந்து குரல் கொடுக்கின்ற அரசியல் தலைமைத்துவத்தின் கீழ் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத் தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதி தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது; எந்த இனவாத பூதத்தின் நெருக்குவாரங்களுக்காக முஸ்லிம்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பி, அதற்காக அணிதிரண்டு ஒட்டுமொத்தமாக வாக்களித்தார்களோ, அதே இனவாத பூதம் இந்த நல்லாட்சியிலும் முஸ்லிம்கள் மீது அட்டூழியங்களை கட்டவிழ்த்து விட்டு, அடக்கியொடுக்க எத்தனித்திருப்பதானது எமக்கு பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இனவாத சக்திகளுக்கு நல்லாட்சி அரசாங்கம் அடிபணிந்திருப்பதானது இந்த ஆட்சியை கொண்டு வந்த முஸ்லிம்களின் பாதுகாப்பையும் இருப்பையும் கேள்விக்குறியாக்கியிருக்கிறது. இதனால் நாம் இன்று அரபு நாடுகளினதும் சர்வதேசத்தினதும் கவனத்தை ஈர்க்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளோம். இதற்காக முன்னிற்கின்ற சமூகத்திற...

பெருநாள் வாழ்த்துக்கள்

Image