உதிரம் கொடுப்போம் உயிர்களைக்காப்போம் மருதமுனையில் மாபெரும் இரத்தான நிகழ்வு


(பி.எம்.எம்.ஏ.காதர்- யு.எம்.இஸ்ஹாக் )

ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் மருதமுனை கிளை மூறாவது முறையாக ஏற்பாடு செய்துள்ள மாபெரும் இரத்தான முகாம் எதிர் வரும் 2017-07-30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00மணி தொடக்கம் மாலை 3.30 மணிவரை மருதமுனை மசூர்மௌனா வீதியில் அமைந்துள்ள கிளை வளாகத்தில் நடைபெறவுள்ளது.
ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் மருதமுனை கிளை  கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப்பிரிவுடன் இணைந்து உதிரம்; கொடுப்போம் உயிர்களைக்காப்போம் என்ற தொனிப்பொருளில் இந்த இரத்ததான முகாமை ஏற்பாடு செய்துள்ளது.பெண்களுக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மனிதம் பேணும் இந்த மகத்தான பணிக்கு அனைவரும் அணிதிரண்டு வருமாறு ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் மருதமுனை கிளையின் செயலாளர் எம்.எச்.அஹமட்   அஜ்மீர் அழைப்பு விடுத்துள்ளார்.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்