Posts

கல்முனை அரச கால் நடை வைத்திய அலுவலக இப்தார்

Image
கல்முனை அரச கால் நடை வைத்திய அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இணைந்து ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு அலுவலக வளாகத்தில் கால்நடை வைத்திய அதிகாரி ஏ.ஜிப்ரி தலைமையில் நடை பெற்ற போது கால்நடை வைத்திய சுகாதார திணைக்கள உயர் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டிருப்பதைக் காணலாம்

தற்கொலைச் சம்பவங்களுக்கு சமூக ஊடகங்கள் முக்கியத்துவம் வழங்கக்கூடாது

Image
தற்கொலைச் சம்பவங்கள் தொடர்பாக சமூக ஊடகங்கள் தேவையற்ற பிரச்சாரங்களை வழங்குகின்றன.   இதன் மூலம் சமூகத்திலிருந்து கட்டுப்படுத்த வேண்டிய இவ்வாறான சம்பவங்கள்  மேலும் பிரபல்யமடைவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.      அதனால் இவ்வாறான சம்பவங்களுக்கு பிரச்சாரம் கொடுக்க வேண்டாமென அதிகாரசபை சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புகளையும் கேட்டுள்ளது.    இவ்வாறான சம்பவங்களை தொடர்ந்தும் ஊடகங்கள் மூலம் பிரச்சாரம் செய்வது பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள பலர் தற்கொலை செய்து கொள்வதற்கு வழி வகுக்கும். 18 வயதுக்கு குறைந்தவர்களை மன அழுத்தத்திலிருந்து விடுவிப்பதற்கான தீர்வுக்கு ஆதரவு வழங்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கடமைப்பட்டுள்ளது. இதற்காக உளவள சமூகப் பிரிவொன்றும் இயங்கி வருகின்றது.      அதிகார சபையின் மாவட்ட மற்றும் பிரதேச உத்தியோகத்தர்கள் மூலமாகவும் இந்த ஆதரவை பெற்றுக் கொள்ள முடியும் என அதிகார சபை தெரிவித்துள்ளது.

மருதமுனை இஸ்லாமிய பிரச்சார மைய இப்தார்

Image
(பி.எம்.எம்.ஏ.காதர்) மருதமுனை இஸ்லாமிய பிரச்சார மையம் ஏற்பாடு செய்த விஷேட மார்க்கச் சொற்பொழிவும்  இப்தார்   நிகழ்வும்  புதன்கிழமை(14-06-2017)பிரச்சார மையம் வளாகத்தில் நடைபெற்றது.இதில் அஷ்செய்க் கலாநிதி எம்.எல்.முபாறக் மதனி சுவனத்தை நோக்கி என்ற தலைப்பிலும்,  அஷ்செய்க் ஆர்.நுவீஸ்(மக்கி)நரகத்தைப் பயந்துகொள்வோம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

இலங்கை போக்குவரத்து சபையின் கல்முனைச் சாலையின் முதலாவது இப்தார்

Image
இலங்கை போக்குவரத்து சபையின் கல்முனைச் சாலையின் முதலாவது இப்தார் நிகழ்வு  உத்தியோகஸ்தர்கள். ஊழியர்களின் ஏர்ப்பாட்டில்  நேற்று  விமர்சியாக கல்முனைச் சாலையில் நடைபெற்றது  சாலையின் மகாமையாளர் வீ.ஜஃபர் தலைமையில் நடை பெற்ற  இந்நிகழ்வில்  இ.போ.சபையின் பிராந்தி பிரதான முகாமையாளர் ஏ.எல்.சித்திக்,  பிராந்திய நிதி முகாமையாளர் சமன் ரத்நாயகா மற்றும் லொயிட்ஸ் உரிமையாளரும் மற்றும்   மற்றும் ஏனைய திணைக்கள உத்தியோகஸ்தர்களும் சாலை உத்தியோகஸ்த ர்களு ம்  ஊழிய ர்களு ம்  கலந்து சிறப்பித்தனர். கிழக்கு இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை செயலாளரும் , அட்டாளைச்சேனை கல்வியற் கல்லூரி விரிவுரையாளரும்  நற்பிட்டிமுனை ஜும்மா பள்ளிவாசல்  நிருவாக சபை தலைவருமான  அஸ்ஸெய்ஹ்   ஏ.எல்.நாசீர் கனி  மார்க்க சொற்பொழிவாற்றினார்  

நற்பிட்டிமுனை லாபிர் வித்தியாலய பழைய மாணவர்களின் இப்தார்

Image
நற்பிட்டிமுனை லாபிர் வித்தியாலய  பழைய மாணவர்  சங்கம் ஏற்பாடு செய்த நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு நேற்று  வெள்ளிக்கிழமை  லாபிர் முன்பள்ளி ரெயின் போவ்  கல்லூரியில் நடை பெற்றது. லாபிர் முன்பள்ளி இயக்குனர்களில் ஒருவரான  கிராம சேவை  அதிகாரி எஸ்.எம்.ஆஸாத்  தலைமையில் இடம் பெட்ரா நிகழ்வில்  அதிபர்கள்,ஆசிரியர்கள், சமூகசேவை அமைப்பை சார்ந்தவர்கள், நற்பிட்டிமுனை லாபிர் வித்தியாலய  பழைய மாணவர்  சங்க அங்கத்தவர்கள் என பலர் கலந்து கொண்டனர் 

மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் பள்ளிவாசல் கீழ்தளம் தொழுகைக்காக திறந்து வைப்பு

Image
மருதமுனை  மஸ்ஜிதுல் கபீர் பள்ளிவாசல்  கீழ்தளம் தொழுகைக்காக திறந்து வைக்கப் பட்டு  பிரமாண்டமான இப்தார் நிகழ்வும் அங்கு இடம் பெற்றது. மஸ்ஜிதுல் கபீர் பள்ளிவாசல் தலைவரும் கல்முனை முஸ்லிம்  பிரிவுக்கான கோட்டக் கல்விப் பணிப்பாளருமான ஏ.எல்.சக்காப்  தலைமையில்  இந்நிகழ்வுகள் இன்று இடம் பெற்றது. நிகழ்வில்  கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் ,கிழக்கு மாகாண  சபை உறுப்பினரும் கல்முனை நகர ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தலைவருமான கே,எம்.ஏ.ரஸாக்  உட்பட மருதமுனையை சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர் .

அமைச்சரவையின் அறிக்கை

Image
சமகால அரசாங்கம் முனைப்புடன் கட்டியெழுப்பும் சமூகத்தில் சமூக இன மற்றும் மதவெறுப்புக்கள், வன்முறைகள் மற்றும் தண்டனைக்குரிய செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. கௌரவ ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையின் கீழ் செயற்படும் தேசிய ஒற்றுமை அரசாங்கமானது கடந்த 2015 அம் ஆண்டு ஜனவரி மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் இடம்பெற்ற தேர்தல்களில் மக்களிடமிருந்து பெறப்பட்ட ஆணைகளுக்கு இணங்கஇ எமது நாடு மீண்டும் கடந்தகால மோதல் நிலைமைகளுக்கு திரும்பாதிருப்பதை உறுதி செய்தல், நல்லிணக்கம், நிலையான சமாதானம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி நோக்கி எமது தேசத்தை வழிநடத்தல் என்பவற்றில் மிக உறுதியாக உள்ளது. அமைச்சரவை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இந்த அறிக்கையை வெளியிட்டார். இந்த அறிக்கையில் மேலும்தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அண...

கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக் கழகத்தின் 39 வது இப்தார் வைபவம்

Image
கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக் கழகத்தின் 39 வது  இப்தார்  வைபவம் கழகத் தலைவர் ஏ.எல் .ஏ .காதர் தலைமையில் கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய மைதானத்தில் நடை பெற்றது . இன  மத  வேறுபாடுகளைக்கடந்து  ஐக்கியத்தை வலுப்படுத்திய  இப்தாராக கலந்து கொண்டவர்களைக் காணலாம் 

கல்முனை வலயக்கல்வி அலுவலக தகவல் வழங்கும் அதிகாரியாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் பீ.எம்.வை அரபாத் முகைதீன் நியமிக்கப் பட்டுள்ளார் .

Image
இலங்கை ஜனநாயக சோஷலிஸக் குடியரசின் பாராளுமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட 2016 / 12ஆம் இலக்க தகவல் அறிந்து கொள்ளும் உரிமைகள் சட்டத்தின் பிரகாரம்  அந்த சட்டத்தில் குறிப்பிடப்படும் ஏற்பாடுகளுக்கமைவாக கல்முனை வலயக் கல்வி அலுவலக  தகவல் வழங்கும் அதிகாரியாக இந்த நியமனம் வலயக்கல்விப்  பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீலினால்   திட்டமிடல் பிரிவின்  பிரதிக் கல்விப் பணிப்பாளரான பீ.எம்.வை அரபாத் முகைதீனுக்கு வழங்கப்பட்டுள்ளது.  

கல்முனை வலயக் கல்வி அலுவலக இப்தார்

Image
கல்முனை கல்வி வலய  கல்விசாரா,கல்விசார் உத்தியோகத்தர்களும்,பாடசாலை அதிபர்களும் இணைந்து ஏற்பாடு செய்த  வருடாந்த இப்தார் நிகழ்வு  வலயக்  கல்விப்  பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தலைமையில்  நேற்று (12) திங்கட் கிழமை வலயக்கல்வி அலுவலக முற்றவெளியில் நடை பெற்றது . கல்முனை வலயக் கல்வி அலுவலக கணக்காளர் கே.ரிஸ்வி யஹ்ஸர் நெறிப்படுத்தலில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தலைமையில் நடை பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ .அப்துல் நிஸாம் உட்பட திணைக்களங்களின் தலைவர்களும் ,பிரதேச அரசியல் பிரமுகர்களும் , வலயத்துக்குட்பட்ட 65 பாடசாலைகளின் அதிபர்களும் மற்றும் உதவிக்கல்விப் பணிப்பாளர்கள் ,ஆசிரிய ஆலோசகர்கள் என பலர் கலந்து கொண்டனர்