கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் கல்வி கற்ற பழைய மாணவ மாணவிகளின் ஒன்று கூடல்
கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் கல்வி கற்ற பழைய மாணவ மாணவிகளின் ஒன்று கூடல் நேற்று (20) கல்லூரி நல்லதம்பி மண்டபத்தில் நடை பெற்றது. "பசுமை நினைவுகள் மீட்போம் இனிய உறவுகள் காப்போம் " என்ற தொனிப் பொருளுடன் கல்லூரி பழைய மாணவனும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.எம்.றியாஸ் (பெஷ்டர் ) தலைமையில் நடை பெற்ற இந்த சந்திப்பில் 1972 தொடக்கம் 1986 வரை கல்வி கற்ற பழைய மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். எதிர்வரும் காலத்தில் பாடசாலையில் எவ்வாறான திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பான விரிவான கருத்துக்கள் கூறப் பட்டதுடன் கல்லூரி அதிபரை சந்தித்து பழைய மாணவர் சங்கம் இயங்குவதற்கான அங்கீகாரத்தைப் பெற்று அதன் படி செயற்படுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. மேலும் இப்பாடசாலையில் கல்வி கற்ற பழைய மாணவர்கள் பெஸ்டர் றியாசுடன் (`0773246870 ) தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றீர்கள்