Posts

கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தராக எம்.ஐ.உதுமாலெப்பை நியமனம்

Image
ஏ.பி.எம்.அஸ்ஹர் கல்முனை பிரதேச செயலகத்தின்  கிராம  உத்தியோகத்தர்களுக்கான பதில் நிருவாக உத்தியோகத்தராக கல்முனையை சேர்ந்த  எம்.ஐ.உதுமாலெப்பை  நியமிக்கப்பட்டுள்ளார். 1978ஆம் ஆண்டு கிராம உத்தியோகத்தராக நியமனம் பெற்ற இவர் கல்முனைக்குடி 2.4.மற்றும் 12ஆம் பிரிவுகளில்  கிராம உத்தியோகத்தராகவும் இவர் கடமையாற்றியுள்ளார்.இதுவரை  கிரா ம உத்தியோகத்தர்களுக்கான  நிருவாக உத்தியோகத்தராகக்கடமையாற்றி வந்த  ஏ.எச்.ஏ.லாஹிர்  அண்மையில் ஒய்வு பெற்றுச் சென்றதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே இவர்   நியமிக்கப்பட்டுள்ளார்.

ஞானசார தேரரை உடனே விடுதலை செய்யா விட்டால் நீதிமன்ற வளாகத்தில் தீக்குளிப்போம். மூன்று பிக்குமார் அறிவிப்பு.

Image
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை எதிர்வரும் பெப்ரவரி 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதை அடுத்து நீதிமன்ற வளாகத்திற்கு வந்திருந்த ஏனைய பிக்குமார்கள் தம்மையும் விளக்கமறியலில் வைக்குமாறு கோரி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிறைச்சாலை வாகனம் நீதிமன்றத்தின் அருகில் வந்த போது அதனை செல்ல விடாமல் வாகனத்தின் சில்லுக்கு கீழ்படுத்தவண்ணம் பிக்குமார் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததுடன் சற்றுமுன்னர் மூன்று பிக்குமார், ஞானசார தேரரை உடனே விடுதலை செய்யா விட்டால் நீதிமன்ற வளாகத்தில் தீக்குளிப்போம் என அறிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிகின்றன.

ஞானசார தேரர் கைது விவகாரம்.. ஹோமாகமவில் பதற்ற நிலை. பிக்குமார், ஆதரவாளர்கள் ஆர்பாட்டம்

Image
பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை, விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதையடுத்து, ஹோமாகம நீதவான் நீதிமன்றத்துக்கு முன்னால் பதற்றமான நிலையொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எங்களையும் சிறையில் போடவும் என அங்கிருந்த பிக்குமார்கள் சத்தமிட்டுள்ளனர். சிறைச்சாலை வாகனம் நீதிமன்றை அண்மித்த பொது அதனை அங்குள்ள பிக்குமார்கள் செல்ல விடாமல் முன்னால் படுத்து மறைத்துள்ளனர். அதன்பிறகு பிக்குமார்கள் சுவரை குதித்து நீதிமன்றின் வளவினுள் சென்றுள்ளனர். சுமார் 300 பொலிசார் தற்போது பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்ட்டு நிலைமையை சரி செய்து வருகின்றனர். ஆர்பாட்டம் தொடர்கிறது.. இது தொடர்பில் வெளியான படங்கள்..

விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய விருத்தி தேசிய வாரத்தை முன்னிட்டு நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மகா வித்தியாலயத்தில் சிரமதானம்

Image
ஏ.பி.எம்.அஸ்ஹர் விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய விருத்தி தேசிய வாரத்தை முன்னிட்டு கல்முனை பிரதேச செயலக நலனோம்பல் அமைப்பபினால் ஏற்பாடு செய்யப்பட்ட  சிரமதான  நிகழ்வொன்று இன்று  நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மகா வித்தியாலயத்தில்  நடை பெற்றது. வித்தியாலய அதிபர்  எம்.எல்.அப்துல் கையும்  தலைமையில் நடை பெற்ற இச்சிரமதான நிகழ்வில்    நலனோம்பல் அமைப்பபின் பிரதித்தலைவர்  பிரதி திட்டமிடல் பணிப்பாளர்  கே. ராஜத்துரை  செயலாளர் ஏ.பி.எம். அஸ்ஹர்  நலனோம்பல் அமைப்பபின் ஒருங்கிணைப்பாளர் எம்.எம.ஜௌபர் உட்பட  பிரதேச செயலக   வெளிக்கள உத்தியோகத்தர்கள் கிராம  உத்தியோகத்தர்கள் திவிநெகும அபிவிருத்தி   உத்தியோகத்தர்கள்   ம ற்றும் சமுர்த்தி பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஏ.எம்.பறக்கத்துல்லாஹ் எழுதிய கல்முனைமாநகரம் உள்ளூராட்சியும் சிவில் நிருவாகமும் ஆய்வு நூல் அறிமுக விழா

Image
( அப்துல் அஸீஸ்,யு.எம்.இஸ்ஹாக் ) ஏ . எம் . பறக்கத்துல்லாஹ்   எழுதிய   க ல்முனை மாநகரம்    உள்ளூராட்சியும்   சிவில்   நிருவாகமும்  ஆய்வு   நூல்   அறிமுக    விழாவும், முதுசங்கள் கௌரவிப்பும்  சனிக்கிழமை மாலை கல்முனை மஃமூத் மகளிர் கல்லூரி சேர் றாசிக் பரீட் மண்டபத்தில் இடம்பெற்றது. ஓய்வுநிலை அதிபரும், பிரதிக்கல்விப்பணிப்பாளருமான சட்டத்தரணி எம்.சீ.ஆதம்பாவா தலைமையில்   இடம்பெற்ற  இவ்விழாவி ல்  பிரதம அதிதியாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் நாயகம் ஏ.எல்.ஏ.அஸீஸ், விசேட அதிதிகளாக மாநகர ஆணையாளர் ஜே.லியாக்கத் அலி, சாய்ந்தமருது    பிரதேச செயலாளர் எ.எம்.சலீம்,  கல்முனை   வலயக் கல்விப்  பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல், ஆகியோர்கள்   கலந்து சிறப்பித்ததுடன், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், துறைசார் பிரதிநிதிகள், மநகர சபை அதிகாரிகள், அரசாங்க அதிகாரிகள், சமுக அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர். இன் நூல் பற்றிய உரைகளை தென்கிழக்கு பல்கலைக்கழக சி...

எம்.எஸ். தெளபீக் பாராளுமன்றுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்

Image
அமைச்சர் ரஊப் ஹக்கீமின் சகோதரர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ் தனது பாராளுமன்ற பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து உருவான வெற்றிடத்திற்கு, எம்.எஸ். தௌபீக் நியமிக்கப்பட்டுள்ளார்.   ஐக்கிய தேசியக் கட்சியினால் வழங்கப்பட்ட தேசியப் பட்டியல் வெற்றிடமே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   குறித்த விடயம் தொடர்பில், ஐக்கிய தேசியக் கட்சியினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்கவே இந்நியமனம் வழங்கப்பட்டதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் இன்று (23) தெரிவித்தார்.   கடந்த 2000-2004 காலப்பகுதியில், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட இவர், முன்னாள் உள்நாட்டு போக்குவரத்து பிரதியமைச்சராவார்.

உடற் கல்வியும் சுகாதாரமும் விருத்தி தொடர்பான தேசிய வாரம் -கல்முனைத் தொகுதியில்

Image
ஜனாதிபதி அவர்களினால் பிரகடனப் படுத்தப் பட்டுள்ள “ ஆரோக்கியமான மூளை ஒன்று உருவாக்கப் படுவது நோயற்ற சரீரத்தின் ஊடாகவே” என்ற தொனிப் பொருளுடன் உடற் கல்வியும் சுகாதாரமும் விருத்தி தொடர்பான தேசிய வாரம் விளையாட்டுத் துறை அமைச்சின் அனுசரணையுடன்  இம்மாதம் 25 தொடக்கம் 30 வரை நாடு பூராகவூம் நடை பெறவுள்ளது. இவ்வாரத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தில் கல்முனை தொகுதியை மையப்படுத்தி பாரிய விளையாட்டு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப் பட்டுள்ளன. இது தொடர்பான உயர்மட்ட மாநாடு விளையாட்டுத் துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் இன்று (19) கல்முனை பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது. பிரதேச செயலாளர்கள் உட்பட திணைக்கள தலைவர்கள் விளையாட்டு அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டு கருத்துக்கள் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் ஜனவரி 30ஆம் திகதி கல்முனைத் தொகுதியில் பாரியளவிலான விளையாட்டுடன் தொடர்பு பட்ட பல நிகழ்வுகள் நடை பெறவுள்ளது.

Dr .ஹபீஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா ! யார் ? அந்த இடத்துக்கு

Image
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ஹக்கீமின் சகோதரருமான எ.ஆர் .எ .ஹபீஸ் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்துள்ளதாக தெரிய வருகின்றது . இவர் தனது இராஜினாமாக் கடிதத்தை நாடாளுமன்ற செயலாளரிடம் கையளித்துள்ளதாக அறியக் கிடைக்கின்றது. இவரது  வெற்றிடத்துக்கு யாரும் நியமிக்கப் படாத நிலையில் கட்சிக்குள் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது . வன்னிக்கா ? திருமலைக்கா? திகாமடுல்ல மாவட்டத்துக்கா? என்ற ஆவலுடன்  கட்சி முக்கியஸ்தர்கள் காத்திருக்கின்றனர் .

அக்கரைப்பற்றைச் சேர்ந்த தொழில் அதிபர் எம்.என்.எம்.நபீல் இலங்கை சீனிக் கூட்டுத்தாபனத்தின் இணைப்பாளராக நியமனம்

Image
(அகமட் எஸ். முகைடீன்) திகாமடுல்ல மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக பராளுமன்றத் தேர்தல் 2015ல் போட்டியிட்ட அக்கரைப்பற்றைச் சேர்ந்த தொழில் அதிபர் எம்.என்.எம்.நபீல் இலங்கை சீனிக் கூட்டுத்தாபனத்தின் இணைப்பாளராக கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிசாத் பதியுதீனால் இன்று (18) நியமிக்கப்பட்டுள்ளார். கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சில் இடம்பெற்ற மேற்படி நியமனம் வழங்கும் நிகழ்வில் முன்னாள் கல்முனை மாநகர முதல்வரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளரும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் நிபுணத்துவ ஆலோசகருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரும் லக்சல நிறுவனத்தின் தலைவருமான கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில்  மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூன்றாவது பிரதித் தலைவரும் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கல்முனை வர்தகவங்கி (Commercial Bank) அருநெலு புலமைப் பரிசு வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு

Image
கல்முனை வர்த்தக வங்கி (Commercial Bank) கிளையில் அரு நெலு  சிறுவர் சேமிப்பு கணக்கு வைத்துள்ள  கடந்த வருடம் ஐந்தாம் தர புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த நான்கு மாணவர்களை பாராட்டி பரிசு வழங்கும் நிகழ்வு  வங்கி முகாமையாளர் ஜே.எம்.சித்தீக் தலைமையில் சமீபத்தில் இடம் பெற்றது. முகாமையாளர் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில்  குறித்த நான்கு மாணவர்களான பால சுந்தரம் கோவர்சனன் ,கங்காதரன் டிரோஜன் ,கோவணன் சலுஜிந்த் ,முஹம்மது நியாஸ் மிஸ்பார்  ஆகியோர்  பரிசு வழங்கி பாராட்டி கௌரவிக்கப் பட்டனர் . நிகழ்வில் உதவி முகாமையாளர் ஐ.எம்.பாயிஸ், மற்றும் வங்கி உத்தியோகத்தர்கள்  உட்பட மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். 

கல்முனை கல்வி வலயத்தில் விளையாட்டுத்துறையில் சாதனை படைத்த மாணவர்களும், ஆசிரியர்களும் கௌரவிப்பு

Image
2015 ஆம் ஆண்டு கல்முனை கல்வி வலயத்தில் தேசிய மட்டத்திலும் ,மாகாண  மட்டத்திலும் விளையாட்டுப் போட்டிகளில்  திறமை காட்டி சாதனை படைத்த மாணவ வீர வீராங்கணைகளையும் , விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றி சாதனை படைத்த ஆசிரியர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு  இன்று  நடை பெற்றது. கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தலைமையில் கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலை நல்லதம்பி  மண்டபத்தில் இடம் பெற்ற   இந்நிகழ்வில்  விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாகவும் ,கௌரவ அதிதியாக  கிழக்கு மாகாண  கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.அப்துல் நிஸாமும்  கலந்து கொண்டனர் . கல்முனை வலயக் கல்வி அலுவலக பிரிவில் சாதனை படைத்த 230 விளையாட்டு வீர வீராங்கணைகள் பாராட்டி கௌரவிக்கப் பட்டதுடன்  விளையாட்டு துறையில் சாதனை படைத்த ஆசிரியர்களும் பதக்கம் சான்றிதழ்  வழங்கி கௌரவிக்கப் பட்டனர்  நிகழ்வில் பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள்,உதவிக்கல்விப் பணிப்பாளர்கள்,கோட்டக்  கல்விப் பணிப்பாளர்கள் , ஆசிரிய ஆலோசக...