விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய விருத்தி தேசிய வாரத்தை முன்னிட்டு நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மகா வித்தியாலயத்தில் சிரமதானம்
விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய விருத்தி தேசிய வாரத்தை முன்னிட்டு கல்முனை பிரதேச செயலக நலனோம்பல் அமைப்பபினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதான நிகழ்வொன்று இன்று நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மகா வித்தியாலயத்தில் நடை பெற்றது.
வித்தியாலய அதிபர் எம்.எல்.அப்துல் கையும் தலைமையில் நடை பெற்ற இச்சிரமதான நிகழ்வில் நலனோம்பல் அமைப்பபின் பிரதித்தலைவர் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே. ராஜத்துரை செயலாளர் ஏ.பி.எம். அஸ்ஹர் நலனோம்பல் அமைப்பபின் ஒருங்கிணைப்பாளர் எம்.எம.ஜௌபர் உட்பட பிரதேச செயலக வெளிக்கள உத்தியோகத்தர்கள் கிராம உத்தியோகத்தர்கள் திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ம ற்றும் சமுர்த்தி பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment