உடற் கல்வியும் சுகாதாரமும் விருத்தி தொடர்பான தேசிய வாரம் -கல்முனைத் தொகுதியில்
ஜனாதிபதி அவர்களினால் பிரகடனப் படுத்தப் பட்டுள்ள “ ஆரோக்கியமான மூளை ஒன்று உருவாக்கப் படுவது நோயற்ற சரீரத்தின் ஊடாகவே” என்ற தொனிப் பொருளுடன் உடற் கல்வியும் சுகாதாரமும் விருத்தி தொடர்பான தேசிய வாரம் விளையாட்டுத் துறை அமைச்சின் அனுசரணையுடன் இம்மாதம் 25 தொடக்கம் 30 வரை நாடு பூராகவூம் நடை பெறவுள்ளது.
இவ்வாரத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தில் கல்முனை தொகுதியை மையப்படுத்தி பாரிய விளையாட்டு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப் பட்டுள்ளன.
இது தொடர்பான உயர்மட்ட மாநாடு விளையாட்டுத் துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் இன்று (19) கல்முனை பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.
பிரதேச செயலாளர்கள் உட்பட திணைக்கள தலைவர்கள் விளையாட்டு அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டு கருத்துக்கள் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் ஜனவரி 30ஆம் திகதி கல்முனைத் தொகுதியில் பாரியளவிலான விளையாட்டுடன் தொடர்பு பட்ட பல நிகழ்வுகள் நடை பெறவுள்ளது.
Comments
Post a Comment