ஞானசார தேரரை உடனே விடுதலை செய்யா விட்டால் நீதிமன்ற வளாகத்தில் தீக்குளிப்போம். மூன்று பிக்குமார் அறிவிப்பு.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை எதிர்வரும் பெப்ரவரி 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதை அடுத்து நீதிமன்ற வளாகத்திற்கு வந்திருந்த ஏனைய பிக்குமார்கள் தம்மையும் விளக்கமறியலில் வைக்குமாறு கோரி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சிறைச்சாலை வாகனம் நீதிமன்றத்தின் அருகில் வந்த போது அதனை செல்ல விடாமல் வாகனத்தின் சில்லுக்கு கீழ்படுத்தவண்ணம் பிக்குமார் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததுடன் சற்றுமுன்னர் மூன்று பிக்குமார், ஞானசார தேரரை உடனே விடுதலை செய்யா விட்டால் நீதிமன்ற வளாகத்தில் தீக்குளிப்போம் என அறிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிகின்றன.
Comments
Post a Comment