Posts

ரஹ்மானின் தலையீட்டால் மருதமுனையில் திவிநெகும கொடுப்பனவு ஆரம்பம்!

Image
கல்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட மருதமுனை மற்றும் நற்பிட்டிமுனை கிராமங்களைச் சேர்ந்த திவிநெகும பயனாளிகளுக்கு கடந்த மூன்று மாதங்களாக வழங்கப்படாமல் இருந்து வந்த மாதாந்த திவிநெகும உதவிக் கொடுப்பனவு இன்று புதன்கிழமை தொடக்கம் நிலுவையுடன் வழங்கப்படுகிறது. கல்முனை மாநகர சபை உறுப்பினர் இசட்.ஏ.எச்.ரஹ்மான் மேற்கொண்ட முயற்சியின் பயனாகவே இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர், திவிநெகும திணைக்களத்தின் மாவட்ட உதவி ஆணையாளர் ஆகியோரின் கவனத்திற்கு இவ்விடயத்தை கொண்டு சென்ற மாநகர சபை உறுப்பினர் இசட்.ஏ.எச்.ரஹ்மான், ஹஜ் பெருநாளை முன்னிட்டாவது இக்கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியிருந்தார். மருதமுனை வலய திவிநெகும வங்கியின் கீழ் மருதமுனை மற்றும் நற்பிட்டிமுனை கிராமங்களைச் சேர்ந்த 3015 குடும்பங்கள் திவிநெகும பயனாளிகளாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றனர். இவர்களுக்கான மாதாந்த உதவிக் கொடுப்பனவு அந்தந்த மாதம் இவ்வங்கிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தும் அது பயனாளிகளுக்கு விநியோகிக்கப்படாமல் நிலுவையாக இருந்து வருவதாகவும் இதனால் அதனை நம்பி வாழ்கின்ற பயனா...

கிழக்கு முதலமைச்சரின் ஹஜ்ஜுப்பெருநாள் வாழ்த்துச்செய்தி

Image
உலகளாவிய ரீதியில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பல்வேறு சவால்களுக்கும், பிரச்சனைகளுக்கும் தீர்வுகிடைக்க இன்றைய தியாகத் திருநாளில் நாம் அனைவரும் பிரார்த்திக்கவேண்டுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் விடுத்துள்ள பெருநாள் செய்தியில் தெரிவித்துள்ளார். அவரது பெருநாள் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது புனித மக்கமா நகரில் தியாகத்தை நினைவூட்டும்வகையில் ஒன்று கூடியுள்ள அனைத்துலக மக்களும் எந்த விதமான பேதமுமின்றி இறையோனின் கட்டளைக்கு அடிபணிந்து பிரார்த்தனைகளிலும், தொழுகைகளிலும், நல்லமல்களிலும் ஈடுபட்டுள்ளார்கள். ஆண்டான், அடிமை என்ற பேதமின்றியும், கறுப்பன் வெள்ளையன் என்ற நிற வேறுபாடின்றியும், நாடு குல பேதங்களை மறந்து இஸ்லாமியர்களாகிய அனைவரும் புனித மக்கமா நகரில் ஹஜ்ஜுக்கடமையில் ஈடுபட்டுள்ளனர். இன்றையத் தியாகத் திருநாள் சமூகங்களுக்கிடையே பல்வேறு படிப்பினைகளை உருவாக்கி உள்ளது.  இறையோனின் கட்டளைக்கு அடி பணிந்து நபி இப்றாகிம் (அலை) அவர்கள் அன்பு மைந்தன் இஸ்மாயிலை அருத்து குர்பான் கொடுப்பதற்கு தயாரான வரலாறும், அதன் பின்னரான பல்வேறு சம்பவங்களும் இந்த புனித ஹஜ்ஜுக் கடமைய...

கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிபின் புனித ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

Image
(அகமட் எஸ். முகைடீன்) புரிதலுடன் வாழ்ந்து, மனக் கறையகற்றி, மணங்கமலும் நல்லதோர் வாழ்வினை இஸ்லாமிய அடிப்படையில் வாழ்வதற்கு புனித ஹஜ்ஜூப் பெருநாளை கொண்டாடும் அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் அருல்புரிய பிரார்த்திப்பதாக கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளருமான சிராஸ் மீராசாஹிப் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் இப்றாஹீம் நபி (ஸல்) அவர்களின் பெரும் தியாகத்தை நினைவூட்டும் ஹஜ்ஜூப் பெருநாள் எம்மத்தியிலும் தியாக உணர்வை ஏற்படுத்துவதோடு இஸ்லாம் காட்டித்தந்த சீரிய பாதையில் பயனிப்பதற்கு ஆசையுடையவர்களாக அனைவரையும் மாற்ற வேண்டும். உலக மக்கள் சகோதரத்துவத்துடனும் இன நல்லுறவுடனும் வாழ்வதற்கு வழிகுக்கும் ஒரு திருநாளாக இந்நாள் அமைவதோடு எமது நாட்டில் நல்லாட்சி நீடிக்கவும் இறைவன் துணைபுரிய வேண்டும். அத்தோடு புனித ஹஜ் கடமையினை நிறைவேற்றிய ஹாஜிகளின் ஹஜ்களை இறைவன்  பொருந்திக் கொள்வதற்கும் ஏனையவர்களுக்கும் புனித ஹஜ் கடமையினை  நிறைவேற்ற அருல்பாலிப்பதற்கும் இறைவனிடம் இருகரம் ஏந்தி பிராத்திப்பதாகவும் தெரிவித்தார்.

பஞ்ச பாண்டவர் வனவாசத்தில் தீ சட்டி ஏந்தி நேர்த்தி கடன் தீர்த்த பெண் மரணம்

Image
பஞ்ச பாண்டவர் வனவாசத்தில் தீ சட்டி ஏந்தி நேர்த்தி கடன் தீர்த்த பெண் மரணமான சம்பவம் இன்று இடம் பெற்றுள்ளது . பாண்டிருப்பு பஞ்ச பாண்டவர்கள் வரலாறு கூறும்  திரௌபதை அம்மன் ஆலய  வனவாச உற்சவம்  இன்று  3.00 மணிக்கு ஆலயத்தில் இருந்து புறப்பட்டது . இந்த வனவாச நிகழ்வில் நேர்த்திகடனை நிறைவேற்றும் பொருட்டு  காவடி எடுத்தல், தீ சட்டி ஏந்துதல் என்பன இடம் பெறுவன . அவ்வாறு தீ சட்டி ஏந்தி காணிக்கையை நிறைவேற்றிய நட்பிட்டிமுனையை சேர்ந்த  54 வயதுடைய யோகேஸ்வரி என்பவர் நற்பிட்டிமுனை முருகன் ஆலயத்தில் மயங்கி வீழ்ந்துள்ளார் . அவரை கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு  எடுத்துவரும் வேளை  மரணமடைந்துள்ளார் . அவரது சடலம்  நட்பிட்டிமுனையில் அவரது இல்லத்தில் வைக்கப் பட்டுள்ளது 

சர்வதேச கரையோர சுத்திகரிப்பு தினத்தையொட்டி மருதமுனை கடற்கரைப் பிரதேசம் சுத்திகரிப்பு

Image
(பி.எம்.எம்.ஏ.காதர்;) சர்வதேச கரையோர சுத்திகரிப்பு தினத்தையொட்டி கரையோரம் பேணல் மற்றும் மூலவள முகாமைத்துவத் திணைக்களம்,மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு அகியவற்றின் வழிகாட்டலில்“அழகிய கடற்கரை பிதேசத்தினை சுத்தமாக பேணுவோம்”என்ற தொனிப் பொருளில் நாட்டைச் சூழவுள்ள கரையோரத்தினை சுத்திகரிக்கும் செயற்திட்டத்தின் கீழ் கல்முனை பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த கடற்கரையோர சுத்திகரிப்பு நிகழ்வு  இன்று காலை (22-09-2015)மருதமுனை கடற்கரைப் பிரதேசத்தில் நடைபெற்றது. கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மட் கனி இந்த சுத்திகரிப்பு வேலைத் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.இதில் விஷேட விருந்தினர் களாக அம்பாறை மாவட்டச் செயலாளர் துஷித்த பி.வனிகசிங்க மேலதிக மாவட்ட செயலாளர் அஷ்செய்க் எம்.ஐ.எம்.அமீர்.பிரதிக் கல்விப் பணிப்பாளர் பி.எம்.வை.அறபாத் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் கல்முனை பிரதேச செயலக திட்டமிடல் பிரதிப்பணிப்பாளர் கே.இராஜதுரை,திவிநெகும தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ்,கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.உமர்அலி,திவிநெகு முகாமையாளர்களான ஏ.சி.அன்வர்,திருமதி பரீரா சஹ...

கிழக்கு மாகாணசபை உறுப்பினராக சம்மாந்துறை ஐ.எல்.எம்.மாஹீர் இன்று சத்தியப் பிரமாணம்

Image
கிழக்கு மாகாண சபை முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதனைத் தொடர்ந்து இடம்பெற்ற வெற்றிடத்திற்கு சம்மாந்துறையைச்சேர்ந்த ஐ.எல்.எம். மாஹிர் இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார். இந்நிகழ்வு இன்று காலை 9.00 மணிக்கு கிழக்கு மாகாண சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர், ஆரிப் சம்சுதீன், எம்.ராஜேஸ்வரன், முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் மற்றும் நிந்தவூர் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹீர் ஆகியோருடன் புதிய மாகாணசபை உறுப்பினரின் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர். (பி.எம்.எம்.ஏ.காதர்) நீண்டகாலமாக அரசியலில் பயணித்து வந்த இலங்கைக்கான சவூதிஅரேபிய தூதுவராலய மக்கள் தொடர்பு அதிகாரி சம்மாந்துறையைச் சேர்ந்த  ஐ.எல்.எம்.மாஹிர் இன்று செவ்வாய்க்கிழமை (22-09-2015) கிழக்கு மாகாண சபையின் உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்தார் . அவர் பற்றிய ஓர்  கண்ணோட்டம்  பிறப்பு  கல்முனைக் குடி...

கல்முனை பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட கரையோர சுத்திகரிப்பு

Image
( எல்.அப்துல் அஸீஸ் )  சர்வதேச கரையோர சுத்திகரிப்பு தினத்தை முன்னிட்டு கல்முனை பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட விழிபூட்டலும்,     கரையோர சுத்திகரிப்பு வேலைத்திட்டமும் இன்று (22) கல்முனை கடற்கரைப்பிரதேசத்தில் இடம்பெற்றது. 'அழகிய கடற்கரைப்பிரதேசத்தை சுத்தமாக பேனுவோம்'  என்ற தலைப்பில்   கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச். முகமத் கனி தலைமையில் இடம்பெற்ற இன் நிகழ்வில் பிரதேசசெலக உத்தியோகத்தர்கள், பதுகாப்புப்படையினர், கிராம மக்கள் அமைப்பின் அங்கத்தவர்கள், மாநகர சபை   ஊ ழியர்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

அம்பாறை மாவட்டத்தின் சகல கடற்கரை பிரதேசங்களையும் சுத்தப்படுத்துவதற்கான நிகழ்வு

Image
(யு.எம்.இஸ்ஹாக்)   சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினத்தை முன்னிட்டு கடல் சூழல் பாதுகாப்பு அதிகார சபையானது கரையோரம் பேணல் திணைக்களம் மற்றும் அனா;த்த முகாமைத்துவ நிலையம் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து மாவட்ட செயலகத்தினூடாக அம்பாறை மாவட்டத்தின் சகல கடற்கரை பிரதேசங்களையும் சுத்தப்படுத்துவதற்கான நிகழ்வு  இன்று 22ம் திகதி காலை 7.00 மணி தொடக்கம் 11.00மணிவரை இடம் பெற்றது. இந்நிகழ்வின்போது பெரிய நீலாவணை தொடக்கம் பாணம வரையிலான கடற்கரை பிரதேசங்கள் பிரதேச செயலக உத்தியோகத்தா;கள்> மாணவா;கள்> பொதுமக்கள்> படையினா; மற்றும் ஏனைய அரச திணைக்கள உத்தியோகத்தர்களுடன் ஒருங்கிணைந்து சுத்தப்படுத்தப் பட்டன. அம்பாறை மாவட்ட பிரதான நிகழ்வானது சாய்ந்தமருது கடற்கரை பகுதியில் பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்புடன் கடல் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் மாவட்ட உத்தியோகத்தா; கி.சிவகுமார்  தலைமையில் இடம்பெற்ற போது  இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிர் ; துஷித பி.வணிகசிங்க> பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம்>மாநகர ஆணையாளர் லியாக்கத் அலி உட்பட முக்கிய அரச அதிகாரிகள்>பொது மக்கள் எ...

Lankamuslim.org முஸ்லிம் பாடசாலைகளுக்கு ஹஜ்ஜுப் பெருநாள் விடுமுறை

Image
ஹஜ்ஜுப் பெருநாள் தினமான எதிர்வரும் செப்டெம்பர் 24 ஆம் திகதிக்கு அடுத்த நாளான செப்டெம்பர் 25 ஆம் திகதி முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.இது குறித்து கல்வி அமைச்சின்  பாடசாலை நடவடிக்கை பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் குறித்த பாடசாலை நாளுக்கு பதிலாக எதிர்வரும் ஒக்டோபர் 03 ஆம் திகதி, சனிக்கிழமை பதில் பாடசாலை நடைபெறும் என அவ்வறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஹஜ்ஜுப் பெருநாள் தினத்திற்கு (24) அடுத்த நாளான வெள்ளிக்கிழமையை தொடர்ந்து சனி மற்றும் ஞாயிறு ஆகிய பாடசாலை விடுமுறை நாட்கள் வருவதனால், தூர இடங்களுக்கு செல்லும் மாணவர்கள் நலன் கருதி இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் செப்டெம்பர் 24 ஆம் திகதி உலகம் முழுவதுமுள்ள முஸ்லிம்கள் ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்முனை வலயக் கல்வி அலுவலக ஏற்பாட்டில் உலக சமாதான தினம் நிந்தவூரில் கொண்டாடப்பட்டது

Image
  (இஸ்ஹாக் -கல்முனை ) கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் உலக சமாதான தினம் இன்று  (21.09.2015) நிந்தவூர் அல் - மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் சிறப்பாக  கொண்டாடப்பட்டது. கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜலீல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். உலக சமாதான தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் சமாதானக் கல்வி க்கான  இணைப்பாளர்  எம்.ஏ.எம்.றசீனின் மேற்பார்வையில் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வில் முகாமைதுவதுக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் பீ.எம்.வை .அறபாத் , நிந்தவூர் கோட்டக்  கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.எம்.சலீம், ஆங்கிலக் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.கலீல், உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.சத்தார், அதிபர் திருமதி என்.யூ.எச்.எம். சித்தீக் உட்பட கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள். இதே வேளை, உலக சமாதானத்தை வலியுறுத்தி...