கல்முனை வலயக் கல்வி அலுவலக ஏற்பாட்டில் உலக சமாதான தினம் நிந்தவூரில் கொண்டாடப்பட்டது
(இஸ்ஹாக் -கல்முனை )
கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் உலக சமாதான தினம் இன்று (21.09.2015) நிந்தவூர் அல் - மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் உலக சமாதான தினம் இன்று (21.09.2015) நிந்தவூர் அல் - மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜலீல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
உலக சமாதான தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் சமாதானக் கல்வி க்கான இணைப்பாளர் எம்.ஏ.எம்.றசீனின் மேற்பார்வையில் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வில் முகாமைதுவதுக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் பீ.எம்.வை .அறபாத் , நிந்தவூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.எம்.சலீம், ஆங்கிலக் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.கலீல், உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.சத்தார், அதிபர் திருமதி என்.யூ.எச்.எம். சித்தீக் உட்பட கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.
Comments
Post a Comment