அம்பாறை மாவட்டத்தின் சகல கடற்கரை பிரதேசங்களையும் சுத்தப்படுத்துவதற்கான நிகழ்வு
(யு.எம்.இஸ்ஹாக்)
சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினத்தை முன்னிட்டு கடல் சூழல் பாதுகாப்பு அதிகார சபையானது கரையோரம் பேணல் திணைக்களம் மற்றும் அனா;த்த முகாமைத்துவ நிலையம் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து மாவட்ட செயலகத்தினூடாக அம்பாறை மாவட்டத்தின் சகல கடற்கரை பிரதேசங்களையும் சுத்தப்படுத்துவதற்கான நிகழ்வு இன்று 22ம் திகதி காலை 7.00 மணி தொடக்கம் 11.00மணிவரை இடம் பெற்றது.
இந்நிகழ்வின்போது பெரிய நீலாவணை தொடக்கம் பாணம வரையிலான கடற்கரை பிரதேசங்கள் பிரதேச செயலக உத்தியோகத்தா;கள்> மாணவா;கள்> பொதுமக்கள்> படையினா; மற்றும் ஏனைய அரச திணைக்கள உத்தியோகத்தர்களுடன் ஒருங்கிணைந்து சுத்தப்படுத்தப் பட்டன.
அம்பாறை மாவட்ட பிரதான நிகழ்வானது சாய்ந்தமருது கடற்கரை பகுதியில் பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்புடன் கடல் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் மாவட்ட உத்தியோகத்தா; கி.சிவகுமார் தலைமையில் இடம்பெற்ற போது இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிர் ; துஷித பி.வணிகசிங்க> பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம்>மாநகர ஆணையாளர் லியாக்கத் அலி உட்பட முக்கிய அரச அதிகாரிகள்>பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment