சர்வதேச கரையோர சுத்திகரிப்பு தினத்தையொட்டி மருதமுனை கடற்கரைப் பிரதேசம் சுத்திகரிப்பு
(பி.எம்.எம்.ஏ.காதர்;)
சர்வதேச கரையோர சுத்திகரிப்பு தினத்தையொட்டி கரையோரம் பேணல் மற்றும் மூலவள முகாமைத்துவத் திணைக்களம்,மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு அகியவற்றின் வழிகாட்டலில்“அழகிய கடற்கரை பிதேசத்தினை சுத்தமாக பேணுவோம்”என்ற தொனிப் பொருளில் நாட்டைச் சூழவுள்ள கரையோரத்தினை சுத்திகரிக்கும் செயற்திட்டத்தின் கீழ் கல்முனை பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த கடற்கரையோர சுத்திகரிப்பு நிகழ்வு இன்று காலை (22-09-2015)மருதமுனை கடற்கரைப் பிரதேசத்தில் நடைபெற்றது.
கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மட் கனி இந்த சுத்திகரிப்பு வேலைத் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.இதில் விஷேட விருந்தினர் களாக அம்பாறை மாவட்டச் செயலாளர் துஷித்த பி.வனிகசிங்க மேலதிக மாவட்ட செயலாளர் அஷ்செய்க் எம்.ஐ.எம்.அமீர்.பிரதிக் கல்விப் பணிப்பாளர் பி.எம்.வை.அறபாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் கல்முனை பிரதேச செயலக திட்டமிடல் பிரதிப்பணிப்பாளர் கே.இராஜதுரை,திவிநெகும தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ்,கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.உமர்அலி,திவிநெகு முகாமையாளர்களான ஏ.சி.அன்வர்,திருமதி பரீரா சஹீட்,மருதமுனை,நற்பிட்டிமுனை சமூதாய அடிப்படை வங்கி முகாமையாளர் எம்.எம்.முகம்மட் முபீன்,இளைஞர் சேவை அதிகாரி எம்.ரீ.எம்.ஹாறூன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இவர்களுடன்; கல்முனை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள்,கிராம உத்தியோகத்தர்கள்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,திவிநெகும உத்தியோகத்தர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,அல்-ஹம்றா வித்தியாலயம்,பெரிய நீலாவணை புலவர்மணி ஷரிபுத்தீன் வித்தியாலயம் ஆகிவற்றின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கழகங்களின் பிரதிநிதிகள் பொது மக்கள் உள்ளிட்ட பெரும் தொகையானோர் கலந்து கொண்டனர்
இந்த கரையோர சுத்திகரிப்பின் போது பெரிய நீலாவணை வீசி வீதியில் இருந்து மருதமுனை மற்றும் பாண்டிருப்பு எல்லை வீதிவரை சுமார் மூன்று கிலோ மீற்றர் தூரம் வரை குப்பைகள் அகற்றப்பட்டு சுத்திகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment