Posts

கிழக்கு மாகாண சபை பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி வரை ஒத்தி வைப்பு!

Image
கிழக்கு மாகாண சபையின் அமர்வு பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.இன்று (20.01.2015) காலை சபையின் தவிசாளர் தலைமையில் கிழக்கு மாகாண சபையின் அமர்வு நடைபெற்றது.  சபையில் ஆளும் தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு உறுப்பினர்களிடையே இடம்பெற்ற விவாதங்களினால் சபையில் அமைதியின்மை ஏற்பட்டமையினாலும் சபையை தொடர்ந்து சபையின் அமர்வு பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதன் காரணமாக கிழக்கு மாகாண சபையின் 2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்றும் நிறைவேற்ற முடியாமல் போனது. எனினும் இன்று நடைபெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தின் போது கிழக்கு மாகாணசபையில் ஆளும் தரப்பினர் மற்றும் எதிர்த்தரப்பினரிடையே தமது பலத்தினை வெளிப்படுத்த முடியாத உறுதியான தன்மை இன்னும் ஏற்படாமை காரணமாக குறித்த பலத்தினை வெளிப்படுத்தி அதனூடாக வரவுசெலவுத்திட்டத்தை நிறைவேற்றுவது ஆரோக்கியமானதாக அமையும் என்று கருத்து தெரிவிக்கப்பட்டதற்கிணங்க சபை அமர்வு எதிர்வரும் பெப்ரவரி 10ஆம் திகதி வரை ஒத்தி வைப்பதாகவும் தீர்மானம் எடுக்கப்பட்டது. எனினும்  ஜனாதிபதி மைத்திரிபால...

கிழக்கு மாகாண ஆளுநர் தனது பதவியை இராஜினாமா செய்தார்!

Image
கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரம தனது ஆளுநர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சற்று நேரத்துக்கு முன் தொலைநகல் மூலமாக அனுப்பி வைத்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவிக்கின்றது. 2006ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் திகதி முதல் ஆளுநராக கடமை புரிந்த இவர், கிழக்கு மாகாணத்தின் முதலாவது ஆளுநருமாவார்.

யாரும் மனம் தளரத் தேவையில்லை- மஹிந்த

Image
எனது கட்சி ஆதரவாளர்களது எதிர்பார்ப்புக்களை நாம் எதிர்காலத்தில் நிறைவேற்றுவோம். இப்போது யாரும் மனம் தளரத் தேவையில்லை. சற்று பொறுமையாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி இன்று செவ்வாய்க்கிழமை கண்டி ஸ்ரீ தலதா மாளிகை, அஸ்கிரிய மற்றும் மல்வத்தை பீடங்களுக்கு சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டார். அதன்பின்னர், ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். “எனது குடும்பம் எனது தந்தையின் காலம் முதல் அரசியல் செய்து வருகிறது. வெள்ளையர்கள் ஆட்சியிலும் நாம் அரசியல் செய்தவர்கள். 1931 ஆம் ஆண்டு எனது தந்தை அரசியல் செய்தது முதல் இன்று வரை நாம் பல்லாண்டுகாலம் தொடர்ந்து அரசியல் செய்கிறோம். ஆனால், எமது வீடுகளை பொலிஸார் முற்றுகையிட்டதில்லை. தற்போதைய ஆட்சியில் எனது வீடு சோதனை செய்யப்பட்டது. ஆனால் அங்கு எதுவும் இருக்கவில்லை. எமது நாட்டைப் பொறுத்தவரை இதனை விட உயர்ந்த ஒரு அரசியல் கலாசாரமும் அரசியல் ஒழுக்கமும் தேவைப்படுகிறது.” என்றுள்ளார்.

பாராளுமன்றம் இன்று கூடுகிறது புதிய பிரதமர் ரணில் விசேட உரை

Image
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் முதன் முறையாக இன்று பாராளுமன்றம் கூடுகிறது. புதிய பிரதமர் மற்றும் புதிய அமைச்சரவை பதவியேற்றிருக்கும் நிலையில் இன்றைய பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளன. புதிய பிரதமராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன் சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட ரணில் விக்கிரமசிங்க இன்று தனது பெரும்பான்மையை உறுதிப்படுத்துவார். சபை முதல்வராக அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல நேற்றுப் பதவியேற்றுக் கொண்டதுடன், ஆளும் கட்சியின் பிரதம கொரடாவாக கயந்த கருணாதிலகவும் பதவியேற்றார். புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வுகள் தொடர்பாக நேற்றையதினம் கட்சித் தலைவர்கள் கூடி ஆராய்ந்திருந்தனர். புதிய பிரதமர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பாராளுமன்றத்தில் பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் உறுதிமொழி வழங்கியுள்ளனர். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்ட பின்னர் அவரின் பாராளுமன்ற ஆசனத்திற்கு ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்துக்காக பொலன்னறுவையைச் சேர்ந்த ஜயசிங்க பண்டார பாராளுமன்ற உறுப்பின...

கிழக்கு மாகாண அரச ஊழியருக்கு 23ல் சம்பளம்

Image
கிழக்கு மாகாண அரச சேவையாளர்களின் சம்பள கொடுப்பனவு தொடர்பான பிரச்சினைகளுக்கு சுமுக தீர்வு காணப்பட்டுள்ளது. இதையடுத்து இம்மாதம் 23ம் திகதி இவர்களுக்கான சம்பள கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன. 2015ற்கான கிழக்கு மாகாண சபை பஜட் நிறைவேற்றப்படாததால் எழுந்த இழுபறி நிலையை கருத்தில்கொண்ட ஆளுநர் இது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்திற்குகொண்டு வந்தார். இதன்போது இந்த இழுபறி நிலைக்கு சுமுக தீர்வு காணப்பட்டதையடுத்தே சம்பளம் வழங்கப்படவுள்ளது. கிழக்கு மாகாண சபையின் 2015ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றுவதில் தடங்கல் ஏற்பட்டது. இதனால் கிழக்கு மாகாண சபை அரச சேவையாளர்களுக்கான சம்பளக் கொடுப்பனவுகள் செய்ய முடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டது. ஆளுநரின் தலையீட்டினாலும் அதிமேதகு ஜனாதிபதியின் வழிகாட்டலினாலும் இப்பிரச்சினைக்கு தீர்வுகாணப்பட்டுள்ளது. இதையடுத்து கிழக்கு மாகாண அரச சேவையாளர்களுக்கு இம்மாதம் 23ம் திகதி சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கிழக்கின் முஸ்லிம் முதலமைச்சர் விடயத்தில் முஸ்லிம் தலைமைகள் தாரைவார்த்து விடாதீர்கள் - பிரதித் தவிசாளர் சுபைர்

Image
கிழக்கு மாகாண முதலமைச்சராக முஸ்லிம் ஒருவரை நியமிக்க முனைப்புடன் செயற்படுங்கள், முஸ்லிம் முதலமைச்சர் விடயத்தில் முஸ்லிம் தலைமைகள் தாரைவார்த்து விடாதீர்;கள் என கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் எம்.எஸ்.சுபைர் கோரிக்கை விடுத்துள்ளார். முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிக்கும் வித்தியாரம்ப விழா இன்று ஏறாவூர் அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற ஒரே ஒரு சபையாக கிழக்கு மாகாண சபை காணப்படுகின்றது. இதில் முஸ்லிம் ஒருவரே முதலமைச்சராக நியமிக்கப்பட வேண்டும். இந்த யாதார்த்தத்தை அரசியல் தலைமைகள் புரிந்து நடக்க வேண்டும். முதலமைச்சர்; பதவியை வைத்துக் கொண்டு இரு சமூகங்களுக்கிடையில் குரோதங்களை ஏற்படுத்தாமல் விட்டுக் கொடுப்புடன் தமிழ், முஸ்லிம் தலைமைகள் செயற்பட்டு ஆரோக்கியமான முடிவினை எடுத்தல் வேண்டும். கிழக்கு மாகாண சபையின் இரண்டாவது ஆட்சியில் முஸ்லிம்கள் 15 உறுப்பினர்களை தெரிவு செய்து அனுப்பியுள்ளனர். ஆட்சியிலிருந்த மஹி...

கல்முனை பிரதேச பாட சாலைகளில் இன்று நடை பெற்ற முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைக்கும் நிகழ்வுகள்

Image
பாண்டிருப்பு  அல் -மினன்  வித்தியாலயம்  மருதமுனை புலவர் மணி சரிபுதீன்  வித்தியாலயம்  மருதமுனை அல் -மதீனா வித்தியாலயம்  மருதமுனை அக்பர் வித்தியாலயம்  கல்முனை கிரீன் பீல்ட் றோயல்  வித்தியாலயம்  சாய்ந்தமருது  லீடர் அஸ்ரப் வித்தியாலயம்  கல்முனை அல் -அஸ்ஹர்  வித்தியாலயம்  மருதமுனை அல் -ஹிக்மா வித்தியாலயம்  கல்முனை  அல் -மிஸ்பாஹ் மகா வித்தியாலயம்  கல்முனை அல் - பஹ்றியா மகா வித்தியாலயத்தில் கல்முனை  இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயம்  கார்மேல் பற்றிமா தேசிய பாட சாலை 

கல்முனை அல்-அமீன் பாலர் பாடசாலையின் மாணவர்களின் விடுகையும் கலை நிகழ்ச்சியும் பரிசளிப்பு விழாவும்

Image
கல்முனை அல்-அமீன் பாலர் பாடசாலையின் 16வது ஆண்டு நிறைவும் 2014ம் ஆண்டு மாணவர்களின் விடுகையும் கலை நிகழ்ச்சியும் பரிசளிப்பு விழாவும் நேற்று  (18) கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் மாலை 3.30 மணிக்கு இடம்பெற்றது. அல்-அமீன் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை எஸ்.வாரிதா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு கல்முனை மாநகர சபை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் பிரதிநிதிகளின் செயலாளருமான ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். இந்நிகழ்வில் மார்க்க விழுமியங்களுடன் தொடர்புடைய சிரார்களின் கலை   நிகழ்ச்சிகளும் ,  கல்வி   சார்ந்த   நிகழ்ச்சிகள் பார்ப்போரை வசீகரப்படுத்தியது. இக்கலைநிகழ்விலும் பங்குபற்றிய மாணவர்களுக்கும் இவ்வாண்டு தரம் 1ற்று பாடசாலை செல்லும் மாணவர்களுக்கும் பிரதம அதிதி ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ் அவர்களினார்   பரிசில்களும் அப்பியாசப் புத்தகங்களும்  வழங்கப்பட்டன . நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ் அவர்களுக்கு அல்-அமீன் பாடசாலையில் ஆசிரியைகளால் நினைவுச்ச...