கல்முனை அல்-அமீன் பாலர் பாடசாலையின் மாணவர்களின் விடுகையும் கலை நிகழ்ச்சியும் பரிசளிப்பு விழாவும்
கல்முனை அல்-அமீன் பாலர் பாடசாலையின் 16வது ஆண்டு நிறைவும் 2014ம் ஆண்டு மாணவர்களின் விடுகையும் கலை நிகழ்ச்சியும் பரிசளிப்பு விழாவும் நேற்று (18) கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் மாலை 3.30 மணிக்கு இடம்பெற்றது.
அல்-அமீன் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை எஸ்.வாரிதா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு கல்முனை மாநகர சபை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் பிரதிநிதிகளின் செயலாளருமான ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் மார்க்க விழுமியங்களுடன் தொடர்புடைய சிரார்களின் கலை நிகழ்ச்சிகளும், கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் பார்ப்போரை வசீகரப்படுத்தியது. இக்கலைநிகழ்விலும் பங்குபற்றிய மாணவர்களுக்கும் இவ்வாண்டு தரம் 1ற்று பாடசாலை செல்லும் மாணவர்களுக்கும் பிரதம அதிதிஏ.எம்.பறக்கத்துள்ளாஹ் அவர்களினார் பரிசில்களும்அப்பியாசப் புத்தகங்களும் வழங்கப்பட்டன.
நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தஏ.எம்.பறக்கத்துள்ளாஹ் அவர்களுக்கு அல்-அமீன் பாடசாலையில் ஆசிரியைகளால் நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் கடந்த காலங்களில் பெற்றோரை இழந்தவருமானம் குறைந்த பாடசாலை மாணவர்களுக்கும்பாடசாலை கற்றல் உபகரணங்களும், அப்பியாசப் புத்தகங்களும் வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment