யாரும் மனம் தளரத் தேவையில்லை- மஹிந்த


எனது கட்சி ஆதரவாளர்களது எதிர்பார்ப்புக்களை நாம் எதிர்காலத்தில் நிறைவேற்றுவோம். இப்போது யாரும் மனம் தளரத் தேவையில்லை. சற்று பொறுமையாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி இன்று செவ்வாய்க்கிழமை கண்டி ஸ்ரீ தலதா மாளிகை, அஸ்கிரிய மற்றும் மல்வத்தை பீடங்களுக்கு சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டார். அதன்பின்னர், ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

“எனது குடும்பம் எனது தந்தையின் காலம் முதல் அரசியல் செய்து வருகிறது. வெள்ளையர்கள் ஆட்சியிலும் நாம் அரசியல் செய்தவர்கள். 1931 ஆம் ஆண்டு எனது தந்தை அரசியல் செய்தது முதல் இன்று வரை நாம் பல்லாண்டுகாலம் தொடர்ந்து அரசியல் செய்கிறோம்.
ஆனால், எமது வீடுகளை பொலிஸார் முற்றுகையிட்டதில்லை. தற்போதைய ஆட்சியில் எனது வீடு சோதனை செய்யப்பட்டது. ஆனால் அங்கு எதுவும் இருக்கவில்லை. எமது நாட்டைப் பொறுத்தவரை இதனை விட உயர்ந்த ஒரு அரசியல் கலாசாரமும் அரசியல் ஒழுக்கமும் தேவைப்படுகிறது.” என்றுள்ளார்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்