Posts
மனித நேயத்தையும் மனிதப் பண்புகளையும் இனங்காண வைத்த ஆழிப்; பேரலையின் அனுபவப்பகிர்வு
- Get link
- Other Apps
By
kalmunainews
-
-மருதமுனை பி.எம்.எம்.ஏ.காதர்- 2004-12-26ம் திகதி காலை 8.15 மணிக்கு ஏற்பட்ட ஆழிப் பேரலையில் சிக்குண்டு அனுபவித்தறிந்த ஊடகவியலாளன் என்ற வகையில் இன்று நிறைவடையும் ஆழிப் பேரலையின் 10வது ஆண்டு நிறைவையொட்டி அதை ஞாபகப்படுத்தி இக் கட்டுரைiயை எழுதியுள்ளேன். ஊமையாய் உறங்கிக் கிடந்தது உறுமும் வங்காள விரிகுடாக் கடல்;. அடிவானம் சிவக்க ஆரவாரமின்றி அமைதியாய் பிரசவமானது சூரியன். மெல்லிய காற்று என் மேனியை மெதுவாக வருடியது என் வீட்டு முற்றத்தில் போடப்பட்டிருந்த அடித்தளத்தில் நான் அமர்ந்திருந்த போது. இன்றைய (2004-12-26) நிகழ்ச்சி நிரல் என்ன என்பதைப் பற்றி என் மனதுக்குள் பட்டியல் போட்டுக் கொண்டிருந்தேன். அப்போது எனது மூத்த மகள் ஹரீஷா வாப்பா நான் கணணி வகுப்புக்குப் போய் வருகின்றேன் என்றாள் கவனமாகச் சென்று வாருங்கள் என்றேன். திரும்பிய போது எனது இரண்டாவது மகள் ஷாயிரா வாப்பா நான் தென்கிழக்குப்பல்கலைக் கழக ஆங்கிலக் கற்கை நெறிவகுப்பிற்கு அட்டாளைச் சேனைக்குச் செல்கின்றேன் என்று சொன்னாள். அவளையும் வீதி வரை சென்று வழியனுப்பிவிட்டுத் திரும்பினேன். அப்போது எனது இரட்டையர்கள் ஸீமா.ஸீபா> மகன் சஜ
10 ஆண்டு நிறைவை நினைவு கூரும் பேரழிவான சுனாமி அனர்த்தம்
- Get link
- Other Apps
By
kalmunainews
-
எஸ்.எம்.எம்.றம்ஸான் தேசியப் பேரழிவான சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்று வெள்ளிக்கிழமையூடன் பத்து ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. 2004ஆம் ஆண்டு டிசெம்பர் 26ஆம் திகதி ஏற்பட்ட இந்த சுனாமி அனர்த்தத்தினால் இலங்கை உட்பட ஆசியாவிலுள்ள பல நாடுகள் பேரழிவைச் சந்தித்தன. சிலருக்கு தங்கச் சுனாமி என வர்ணிக்கப்பட்டாலும்இ அந்த அனர்த்தத்தினால் தமது உறவுகளை, பெற்றோரை,மனைவியை, கணவனை, தாயை, தந்தையைக் காவு கொடுத்தும், வீடுகள், சொந்தங்கள், வளங்களை, பொருளாதாரத்தை இழந்து நின்ற பேரவலத்தின் எதிர்விளைவுகளை, அதன் தாக்கத்தை இன்றும் அனுபவிக்கும் மக்களும் நம்மிடையே உள்ளனர். இந்த நிலையில் வெளிநாடுகளிலிருந்து வந்த அரசசார்பற்ற நிறுவனங்கள் மட்டுமன்றி உள்ளுர் நிறுவனங்களும், அமைப்புகளும், பாதிக்கப்படாத மக்களும்,அரசாங்கமும் காட்டிய காருண்யமான சேவைகளையும் இச்சந்தர்ப்பத்தில் நன்றியுடன் நினைவு கூரவேண்டும். 10 ஆண்டு நிறைவை நினைவு கூரும் நிகழ்வுகள் அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இடம் பெற்றது. கல்முனை மாமாங்க வித்தியாலய முற்றத்தில் நிரமாணிக்கப்பட்டுள்ள நினைவு தூபிக்கு தமிழ் மக்கள் அஞ்சலி செலுத்தும
நற்பிட்டிமுனையில் இந்த நென சல அறிவகம் எங்கே உள்ளது ?
- Get link
- Other Apps
By
kalmunainews
-
AL-Matharasathus Samathaya உரிமையாளரின் விபரங்கள் பெயர் Mr. Najeeb தொலைபேசி 077-6168919 மின்னஞ்சல் இயக்குபவரின் விபரங்கள் பெயர் தொலைபேசி மின்னஞ்சல் பொதுவான தகவல்கள் முகவரி 27D, Matharasa Rd, Natpiddimunai, Kalmunai மின்னஞ்சல் almatharasathus.elibrary@gmail.com தொலைபேசி 067-2670012 தொலைநகல் இணைய முகவரி ஆரம்பிக்கப்பட்ட திகதி 0000-00-00 குறிப்புரை
இப்போது எமது சமூகத்துக்கு எதிராக செயற்பட்டவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்
- Get link
- Other Apps
By
kalmunainews
-
நாம் எடுத்திருக்கின்ற முடிவு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மட்டுமல்ல இனி வரப் போகின்ற ஜனாதிபதி யாராக இருந்தாலும் எமது சமூகத்தின் மீதும் , எங்களின் மத விடயங்களிலும் கை வைப்பார்களாக இருந்தால் இவ்வாறுதான் தண்டனை வழங்கப் படும் என்பதனை நிருபித்துள்ளோம். இப்போது எமது சமூகத்துக்கு எதிராக செயற்பட்டவர்கள் உணர்ந்திருக்கிறார்கள் எனவும் முன்னாள் அமைச்சர் றிசாத் பதியூதீன் கல்முனையில் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மக்கள் சந்திப்பும்இ தேர்தல் பிரச்சாரக் கூட்டமும் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் தலைமையில் கல்முனை ஆசாத் வரவேற்பு மண்டபத்தில் வியாழக் கிழமை (25) இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு பெரும்திரளான மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில், எமது கட்சி இவ்வாறான முடிவினை எடுக்கும் என அரசாங்கமோஇ மக்களாகிய நீங்களோ நினைத்திருக்கமாட்டீர்கள். நாம் அவர்களுடன்தான் இருப்போம் என மக்கள் எதிர்பார்த்தனர். 9 வருடமாக அவர்களுக்கு பக்கபலமாக இருந்து ஜனாதிபதியை உருவாக்கி இ சமாதானத்தை உருவாக்கியவர்கள் இந்த நாட்டின் அப
ஆண்டுகள் பத்து கடந்ததே! அவலங்கள் இன்னும் மாறவில்லை!!
- Get link
- Other Apps
By
kalmunainews
-
10வது ஆண்டு கடல் கோள் அனர்த்த நினைவுக் கட்டுரை - எமது சிரேஸ்ட ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.சலீம் 2004ஆம் ஆண்டு டிசெம்பர் 26ஆம் திகதி ஏற்பட்ட இந்த சுனாமி அனர்த்தத்தினால் இலங்கை உட்பட ஆசியாவிலுள்ள பல நாடுகள் பேரழிவைச் சந்தித்தன. சிலருக்கு தங்கச் சுனாமி என வர்ணிக்கப்பட்டாலும், அந்த அனர்த்தத்தினால் தமது உறவுகளை, பெற்றோரை, மனைவியை, கணவனை, தாயை, தந்தையைக் காவுகொடுத்தும், வீடுகள், சொந்தங்கள், வளங்களை, பொருளாதாரத்தை இழந்து நின்ற பேரவலத்தின் எதிர்விளைவுகளை, அதன் தாக்கத்தை இன்றும் அனுபவிக்கும் மக்களும் நம்மிடையே உள்ளனர். இந்த நிலையில் வெளிநாடுகளிலிருந்து வந்த அரசசார்பற்ற நிறுவனங்கள் மட்டுமன்றி உள்ளூர் நிறுவனங்களும், அமைப்புகளும், பாதிக்கப்படாத மக்களும் காட்டிய காருண்யமான சேவைகளையும் இச்சந்தர்ப்பத்தில் நன்றியுடன் நினைவுகூரவேண்டும். அதேவேளை பாதிக்கப்பட்டவர்களுக்காக கட்டப்பட்ட வீடுகளை விடவும் கூடுதலான வீடுகள் கட்டப்பட்ட சில மாவட்டங்களும் நம் நாட்டிலுள்ளன. அதேவேளை, பாதிக்கப்பட்டவர்களுக்காக கட்டப்பட்ட வீட்டுத் தொகுதிகள் கையளிக்கப்படாத நிலைமை இன்றும் உள்ளதையும் இந்த 10 ஆவது ஆண்டு நிறைவில் சுட்டி
கல்முனை பிரதேசத்திலுள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் நத்தார் பண்டிகை
- Get link
- Other Apps
By
kalmunainews
-
உலகெங்கிலும் கோலாகலமான முறையில் டிசெம்பர் மாதம் 25 ஆம் திகதியான இன்று (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது வெறுமனே பண்டிகை மட்டுமன்றி அனைத்து மக்களுக்குமான சமாதான செய்தி வாழ்த்துக்களையும் தன்னகத்தே கொண்டு இவ்வாண்டுக்கான நத்தார் பண்டிகை உலகெங்கிலும் உள்ள மக்களை மகிழ்ச்சியில் திகைக்க வைக்கவுள்ளது. இதன் அடிப்படையில் கல்முனை பிரதேசத்திலுள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் நத்தார் பண்டிகை மிகச் சிறப்பாக இடம் பெற்றது. கல்முனை மெதடிஸ்த ஆலயத்தில் நடை பெற்ற நத்தார் வழிபாடுகள் போதகர் ஜே.அழகுராஜா தலைமையில் இடம் பெற்றது. இலங்கை கத்தோலிக்க திருச் சபை உப தலைவர் வீ.பிரபாகரன் உட்பட பங்கு மக்கள் பலரும் கலந்த கொண்டனர். இதே வேளை கல்முனை திரு இருதய நாதர் ஆலயத்தில் ஆலய பங்கு தந்தை லியோ அன்ரனி தலைமையில் ஆலய வழிபாடுகள் இடம் பெற்றன. நாட்டின் அமைதி, சமாதானம் வேண்டி வழிபாடுகளும் இடம் பெற்றதுடன் பங்கு மக்கள் ஒருவருக் கொருவர் நத்தார் வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.
என்னை அரசியல் ரீதியாக பலமிழக்கச் செய்யலாம் என்று எண்ணுகின்றவர்களின் கனவு ஒரு போதும் பலிக்காது
- Get link
- Other Apps
By
kalmunainews
-
பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன................... நான் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிக்கு ஆதரவளிப்பதாக கூறி எனக்கெதிராக இட்டுக்கட்டப்பட்ட பொய்யான செய்திகளை இன்று பல இணையத்தளங்கள் வெளியிட்டு எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன தெரிவித்தார். நேற்று புதன்கிழமை (24) அக்கரைப்பற்றிலுள்ள அவரது காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;, தமிழ் மக்களிடையே எனக்கு இருக்கின்ற செல்வாக்கையும், ஆதரவையும் இல்லாமல் செய்வதற்கும் தமிழ் பிரதேசங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காக உழைத்து வருகின்றவன் என்ற வகையிலும். ஜனாதிபதிக்கும் இந்த அரசாங்கத்துக்கும் என் மீது இருக்கின்ற நம்பிக்கையையும் நன்மதிப்பையும் இல்லாமல் செய்வதற்காக ஒரு சில தீய சக்திகள் இன்று பொய்யான செய்திகளையும் பிரச்சார நடவடிக்கையிலும் ஈடு பட்டு வருகின்றனர். எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபத
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அம்பாரை மாவட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு இஸட். ஏ.எச் றஹ்மான் வேண்டுகோள்
- Get link
- Other Apps
By
kalmunainews
-
(பி.எம்.எம்.ஏ.காதர்) நாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக அம்பாரை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு அபிவிருத்தி மன்றத்தின் இணைப்பாளரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான இஸட்.ஏ.எச்.றஹ்மான் அம்பாரை மாவட்டச் செயலாளர் நீல்; டி அல்விஸ் இடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக இஸட்.ஏ.எச்.றஹ்மான். தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் வெள்ளம் காரணமாக குறிப்பிட்ட ஒரு பகுதியினர் பாதிக்கப்பட்டிருப்பினும் இந்த மழை வெள்ளம் காரணமாக எல்லாத்தரப்பு மக்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் எனவேண்டுகோள் விடுத்துள்ளளேன் இது தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அம்பாரை மாவட்டச் செயலாளர் நீல் டி அல்விஸ் தெரிவித்தார். மேலும் கடந்த காலங்களில் நிவாரணமாக வழங்கப்பட்ட உலர் உணவுப் பொருட்களின் பெறுமதியை விட இம்முறை இப்பெறுமதி 1500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் நீல் டி அல்விஸ் தெரிவித்ததாக இஸட்.ஏ.எச்.றஹ்மான் மேலும் தெரிவித்தார்.
ஜே.வி.பி.நியூஸ் இணையத்தளத்தில் என்னைப் பற்றி பொய் செய்திகள்
- Get link
- Other Apps
By
kalmunainews
-
அரசிலிருந்து நான் விலகவேமாட்டேன்-பியசேன அரசுக்கு எதிராக விஷமப் பிரசாரங்களை மேற்கொண்டு வரும் ஜே.வி.பி. நியூஸ் டொட்கொம் இணையத்தளத்தை வன்மையாகக் கண்டிப்பதாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச். பியசேன தெரிவித்தார். நேற்று (23) ஜே.வி.பி. நியூஸ் டொட்கொம் என்ற இணையத்தளத்தில் என்னைப்பற்றி பொய்யான செய்தி வெளியிடப்பட்டிருந்தது. நான் ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபாலவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக இணையத்தளத்தில் செய்தி பிரசுரித்துள்ளனர். இது உண்மைக்குப் புறம்பான செய்தியாகும். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வெற்றிக்காக அம்பாறை மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம், சிங்களப் பிரதேசங்களில் தேர்தல் பிரசாரக் கூட்டங்களை நடத்தி வருகின்றேன். பணத்திற்காக நான் ஒரு போதும் சோரம் போகமாட்டேன். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு ஒருபோதும் நான் விலகிச் செல்லமாட்டேன். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றியை தாங்க முடியாத சில தீய சக்திகள் இவ்வாறான செய்திகளைப் பிரசுரிக்கின்றனர். இது விடயமாக நான் ஜே.வி.பி. நியூஸ் டொட்கொம் இணையத்தளத்திற் கெதிராக நூறு கோடி ரூபா மான நஷ்ட ஈடு வழக்குத்
கல்முனை கரையோர மாவட்ட கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் தயங்கியது ஏன்?
- Get link
- Other Apps
By
kalmunainews
-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்முனை கரையோர மாவட்ட கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்ற தயாராகவிருந்த நேற்றைய சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜக்பக்ஷவின் அமைச்சரவையைச் சேர்ந்த பல சிங்கள அமைச்சர்கள் அதற்கு தங்களது முழுமையான எதிர்ப்பினையும் ஆட்சேபனையையும் தெரிவித்துள்ளனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்தாலும் அந்தக் கட்சியின் ஆதரவாளர்கள், வாக்காளர்கள் எதிரணி பொதுவேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவையே ஆதரிக்கத் தீர்மானித்துள்ளனர். எனவே இதனை நிறைவேற்றிக் கொடுப்பதால் அவர்கள் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கப் போவதில்லை என பல அமைச்சர்களும் கருதியதாக கூறப்படுகிறது. மேலும் அமீர் அலிக்கு தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கியும் கூட அகில இலங்கை மக்க்ள் காங்கிரஸ் அரசை விட்டு விலகிச் சென்றுள்ளது. அவ்வாறே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் கல்முனை கரையோர மாவட்டத்தைப் பெற்றுக் கொண்டு அரசிலிருந்து விலகி மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கவும் கூடுமெனவும் பல கருத்துகள் தெரிவிக்கப்பட்டதன் காரணமாகவே இந்தக் கோரிக்கையை செயற்ப
அம்பாறை மாவட்டத்தில் 4 இலட்சத்து 66 ஆயிரத்து 221 பேர் வாக்களிக்கத் தகுதி
- Get link
- Other Apps
By
kalmunainews
-
எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் கடமைகளுக்காக அம்பாறை மாவட்டத்தில் 6800 அரச ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் 2014 ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டடியலின்படி 4 இலட்சத்து 66 ஆயிரத்து 221 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் போது அம்பாறை மாவட்டத்தில் 4 இலட்சத்து 41 ஆயிரத்து 287 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். எனினும் இம்முறை 24 ஆயிரத்து 934 பேரால் இத் தொகை அதிகரித்துள்ளது. இதன் பிரகாரம் இம்மாவட்டத்தில் 464 சிரேஸ்ட தலைமை தாங்கும் உத்தியோஸ்தர்களும், 548 கனிஸ்ட தலைமை தாங்கும் உத்தியோஸ்தர்களும், இதற்கு மேலதிக பணிகளுக்காக சிறு தொகையினரும் நியமிக்கப்பட்டுள்ளதுடன் மொத்தமாக 6800 பேர் கடமையாற்றவுள்ளனர்.
கல்முனை மாநகர சபை, கல்முனை பிரதேச செயலகம் ஆகியவற்றில் இடம்பெற்ற தபால் மூலவாக்களிப்பு நடவடிக்கைகளை படம்களில் காண்லாம்.
- Get link
- Other Apps
By
kalmunainews
-
மாவடிப்பாள்ளி தாம்போதியில் லொரி ஒன்று வெள்ளத்தினால் அடித்துச்செல்லப்பட்டது
- Get link
- Other Apps
By
kalmunainews
-
நாடு பூராகவும் தொடர்ச்சியான மழை பெய்துவருவதனால் போக்கு வரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்துக்களும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் மாவடிப்பள்ளி பாலத்தில் மேலாக நீர் பெருக்கெடுத்ததினால் இன்று மாலை (2014.12.23) மணியளவில் லொரி ஒன்று வெள்ளத்தினால் அடித்துச்செல்லப்பட்டது. இது தொடர்பாக மேலும் அறியவருவதாவது கல்முனை அம்பாறை பிரதான வீதியுடாக அம்பாறையை நோக்கி சென்ற லொரி விபத்தக்குள்ளகியதுடன் அதில் பயனித்த சாரதி மற்றும் உதிவியாளர் மயிரிலையில் உயிர்தப்பினர.; மேலும் இங்கு போக்குவரத்து பொலிஸ் பிரிவினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொலிஸார் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் வாகணங்களை செலுத்தும் சாரதிகள் அவதானமாக செலுத்துவதுடன் முற்ச்க்கர வண்டி, மோட்டார் சைக்கில் மற்றும் துவிச்சக்கர வண்டிகள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன் வாகணங்களை அவதானமாக செலுத்துமாறும் கேட்டுக்கொண்டனர். அத்துடன் முற்ச்க்கர வண்டி, மோட்டார் சைக்கில் மற்றும் துவிச்சக்கர வண்டிகளை கொண்டு செல்வதற்க்காக விஷேட போக்கவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
5ஆம் ஆண்டு புலமை பாரிசில் பரீட்சை வெற்றியாளர்களுக்கு கல்முனை வர்த்தக வங்கி கிளையின் பணப் பரிசு
- Get link
- Other Apps
By
kalmunainews
-
இலங்கை வர்த்தக வங்கி அறிமுகப் படுத்தியுள்ள அருணலு சிறுவர் சேமிப்பு கணக்கு திட்டத்தின் கீழ் 5ஆம் ஆண்டு புலமை பாரிசில் பரீட்சை வெற்றியாளர்களுக்கு பணப் பரிசு வழங்கும் திட்டத்தின் கீழ் கல்முனை வங்கி கிளையினால் 5ஆம் ஆண்டு புலமை பாரிசில் பரீட்சையில் திறமை காட்டிய மூன்று மாணவர்களுக்கு பணப் பரிசு வழங்கும் நிகழ்வு இன்று (23) வங்கியில் இடம் பெற்றது . கல்முனை வர்த்தக வங்கி கிளை முகாமையாளர் ஜே.எம்.சித்தீக் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாட சாலை மாணவன் கே. நிருஜீத் என்பவருக்கு 10ஆயிரம் ரூபாவும் , பாண்டிருப்பு அல் - மினன் வித்தியாலய மாணவன் ஏ.எப்.தானிஸ் என்பவருக்கு 10ஆயிரம் ரூபாவும், கோட்டைக் கல்லாறு கண்ணகி வித்தியாலய மாணவன் எஸ்.பனோஸ் என்பவருக்கு 5ஆயிரம் ரூபாவும் பரிசாக வழங்கி வைக்கப் பட்டது. இந்த நிகழ்வில் வங்கி கிளை ஊழியர்களும் , மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர் .