வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அம்பாரை மாவட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு இஸட். ஏ.எச் றஹ்மான் வேண்டுகோள்
(பி.எம்.எம்.ஏ.காதர்)
நாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக அம்பாரை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு அபிவிருத்தி மன்றத்தின் இணைப்பாளரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான இஸட்.ஏ.எச்.றஹ்மான் அம்பாரை மாவட்டச் செயலாளர் நீல்; டி அல்விஸ் இடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக இஸட்.ஏ.எச்.றஹ்மான். தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் வெள்ளம் காரணமாக குறிப்பிட்ட ஒரு பகுதியினர் பாதிக்கப்பட்டிருப்பினும் இந்த மழை வெள்ளம் காரணமாக எல்லாத்தரப்பு மக்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் எனவேண்டுகோள் விடுத்துள்ளளேன் இது தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அம்பாரை மாவட்டச் செயலாளர் நீல் டி அல்விஸ் தெரிவித்தார்.
மேலும் கடந்த காலங்களில் நிவாரணமாக வழங்கப்பட்ட உலர் உணவுப் பொருட்களின் பெறுமதியை விட இம்முறை இப்பெறுமதி 1500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் நீல் டி அல்விஸ் தெரிவித்ததாக இஸட்.ஏ.எச்.றஹ்மான் மேலும் தெரிவித்தார்.
Comments
Post a Comment