கல்முனை கரையோர மாவட்ட கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் தயங்கியது ஏன்?
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்முனை கரையோர மாவட்ட கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்ற தயாராகவிருந்த நேற்றைய சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜக்பக்ஷவின் அமைச்சரவையைச் சேர்ந்த பல சிங்கள அமைச்சர்கள் அதற்கு தங்களது முழுமையான எதிர்ப்பினையும் ஆட்சேபனையையும் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்தாலும் அந்தக் கட்சியின் ஆதரவாளர்கள், வாக்காளர்கள் எதிரணி பொதுவேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவையே ஆதரிக்கத் தீர்மானித்துள்ளனர். எனவே இதனை நிறைவேற்றிக் கொடுப்பதால் அவர்கள் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கப் போவதில்லை என பல அமைச்சர்களும் கருதியதாக கூறப்படுகிறது.
மேலும் அமீர் அலிக்கு தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கியும் கூட அகில இலங்கை மக்க்ள் காங்கிரஸ் அரசை விட்டு விலகிச் சென்றுள்ளது. அவ்வாறே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் கல்முனை கரையோர மாவட்டத்தைப் பெற்றுக் கொண்டு அரசிலிருந்து விலகி மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கவும் கூடுமெனவும் பல கருத்துகள் தெரிவிக்கப்பட்டதன் காரணமாகவே இந்தக் கோரிக்கையை செயற்படுத்தும் திட்டம் இறுதிக் கட்டத்தில் அரசினால் கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
Comments
Post a Comment