அம்பாறை மாவட்டத்தில் 4 இலட்சத்து 66 ஆயிரத்து 221 பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் கடமைகளுக்காக அம்பாறை மாவட்டத்தில் 6800 அரச ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் 2014 ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டடியலின்படி 4 இலட்சத்து 66 ஆயிரத்து 221 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 

2012 ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் போது அம்பாறை மாவட்டத்தில் 
4 இலட்சத்து 41 ஆயிரத்து 287 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். எனினும் இம்முறை 24 ஆயிரத்து 934 பேரால் இத் தொகை அதிகரித்துள்ளது.
இதன் பிரகாரம் இம்மாவட்டத்தில் 464 சிரேஸ்ட தலைமை தாங்கும் உத்தியோஸ்தர்களும், 548 கனிஸ்ட தலைமை தாங்கும் உத்தியோஸ்தர்களும், இதற்கு மேலதிக பணிகளுக்காக சிறு தொகையினரும் நியமிக்கப்பட்டுள்ளதுடன் மொத்தமாக 6800 பேர் கடமையாற்றவுள்ளனர்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்