இப்போது எமது சமூகத்துக்கு எதிராக செயற்பட்டவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்


நாம்  எடுத்திருக்கின்ற முடிவு   ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மட்டுமல்ல  இனி வரப் போகின்ற ஜனாதிபதி யாராக இருந்தாலும்  எமது சமூகத்தின் மீதும் , எங்களின் மத விடயங்களிலும்  கை வைப்பார்களாக இருந்தால் இவ்வாறுதான் தண்டனை வழங்கப் படும் என்பதனை நிருபித்துள்ளோம்.  இப்போது எமது சமூகத்துக்கு எதிராக செயற்பட்டவர்கள்  உணர்ந்திருக்கிறார்கள் எனவும் முன்னாள் அமைச்சர் றிசாத் பதியூதீன் கல்முனையில் தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மக்கள் சந்திப்பும்இ தேர்தல் பிரச்சாரக் கூட்டமும் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் தலைமையில் கல்முனை ஆசாத் வரவேற்பு மண்டபத்தில் வியாழக் கிழமை (25) இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு பெரும்திரளான மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்,
எமது கட்சி இவ்வாறான முடிவினை எடுக்கும் என அரசாங்கமோஇ மக்களாகிய நீங்களோ நினைத்திருக்கமாட்டீர்கள். நாம் அவர்களுடன்தான் இருப்போம் என மக்கள் எதிர்பார்த்தனர். 9 வருடமாக அவர்களுக்கு பக்கபலமாக இருந்து ஜனாதிபதியை உருவாக்கி இ சமாதானத்தை உருவாக்கியவர்கள் இந்த நாட்டின் அபிவிருத்திக்கு பக்கபலமாக இருந்த எங்களது முடிவூ அனைவரையூம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. ஆனால் நீங்கள் நினைத்ததெல்லாம் முஸ்லிம்களின் பெரும்பான்மைப் பலத்தைப் பெற்ற கட்சியினர் இவ்வாறான முடிவினை எடுப்பார்கள் என்று. அது இன்னும் நடக்கவில்லை. அவர்கள் இதுவரை ஐம்பது கூட்டங்களைக் கூட்டியூம் முடிவூக்கு வரவில்லை. ஆனால் எமது கட்சி ஒரு கூட்டத்தை மாத்திரமே கூட்டி முடிவெடுத்துள்ளது. 
மஹிந்த அரசில் இருக்கும் அமைச்சர்களில் மிக நல்ல மனிதர் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெஸில் ராஜபக்ஸ ஆவார் எமது முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக பொதுபல சேனாவினால் மேற்கொள்ளப்படும் இன விரோத செயற்பாடுகளை விரும்பாத அரசுக்குள் இருக்கும் நல்ல மனிதர் அமைச்சர் பெஸில். அவரின் நட்பை இழந்தமையையிட்டு கவலையடைகின்றேன். அவர் எமது உணர்வூகளை புரிந்து கொள்ளக்கூடிய ஒருவராவர்;. 
இருந்த போதிலும் எம் சமூகத்தின் பாதுகாப்புஇ இருப்புஇ சுய கௌரவம்இ கலாச்சார விழுமியங்களின் பாதுகாப்புஇ எமது பள்ளிவாசல்களின் பாதுகாப்பு என்பவற்றை கருத்தில் கொண்டும்இ எமக்கு ஆணை வழங்கிய மக்களின் கருத்துக்களையூம்இ உணர்வூகளையூம் உள்வாங்கி எடுத்த முடிவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவை ஆதரிப்பதாகும்.


இதுவரையில் பொது எதிரணியில் இணைந்துள்ளவர்களில் எமது கட்சி மட்டுமே பாராளுமன்ற உறுப்பினர்கள்இ மாகாண சபை உறுப்பினர்கள்இ உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள்இ உறுப்பினர்கள் உட்பட 70க்கு மேற்பட்ட ஆகக் கூடுதலான உறுப்பினர்களுடன் இணைந்து பெரும்பலத்தினை பொது எதிரணிக்கு கொடுத்துள்ளது.
நாம் அரசை விட்டு வெளியேறியதிலிருந்து எம்மை விலை பேசுகின்றார்கள்.இன்னும் பல அமைச்சுப் பொறுப்பு தருகின்றௌம் என்கிறார்கள் தினமும் தொலை பேசியில் அழைப்புக் கொடுக்கினறார்கள். எமது கட்சி இந்த அரசாங்கத்தை விட்டு வெளியேறும் கட்சியாக இருக்கவில்லை  2005 இல் நடை பெற்ற தெர்தலில் ஏனைய கட்சிகள் எதிர்த்து நின்ற வேளை நாம் அவரை ஆதரித்தோம்.இந்த நாட்டில் சமாதானத்தைக் கொண்டு வருவதற்கு  இடம் பெற்ற போராட்டதிலே நாம் பங்காளியாக இருந்து  அந்த யூத்தத்திலிருந்த சமாதானத்தைக் கொண்டு வருவதற்கு முஸ்லிம் சமுகம் பங்களிப்பை செய்திருக்கின்றது. என்பதற்கு சாட்சியாக எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி  பங்காளியாக இருந்துள்ளது. யூத்த வெற்றிக்குப் பின்னர்  நன்றிக் கடனாக  2010 இல் இடம் பெற்ற தேர்தலில்  ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவூக்கு ஆதரவூ வழங்கினோம். அதற்காக பொறுப்பு வாய்ந்த அமைச்சுப் பதவி கிடைத்ததன் மூலம் பொது மக்களுக்கு பல அனுகூலங்களைப் பெற்றுக் கொடுத்தோம்.
கடந்த இரண்டு வருடங்களாக எமது சமூகத்துக்கு எதிராக நடாத்தப் பட்ட அனியாயங்களை அனைவரும் அறிந்துள்ளீர்கள். பொதுபல சேனா என்ற அமைப்பை உருவாக்கி தம்புள்ள.தெகிவளஇமகியங்கண போன்ற பிரதேசங்களில் உள்ள  பள்ளி வாசல்கள் உடைக்கப் பட்டதும் இழுத்து மூடப் பட்டதும் அசிங்கமான சம்பவங்கள் நடந்தேறின.
நடைபெறவிருக்கும் இத்தேர்தல் கல்முனைக்கோ, அக்கரைப்பற்றுக்கோ, சம்மாந்துறைக்கோ, காத்தான்குடிக்கோ பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக் கொள்ளும் தேர்தல் அல்ல. இது எமது முஸ்லிம் சமூகத்தின் இருப்பை பாதுகாக்கும் தேர்தலாகும். இதனை மனதில் நிறுத்தி முஸ்லிம் சமூகம் கட்சி பேதங்களை மறந்து மைத்திரிக்கு வாக்களிக்க வேண்டும் எனவூம் கேட்டுக் கொண்டார்.




Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்