Posts

Showing posts with the label அரசியல்

தேர்தலைத் தொடர்ந்து 9 அமைச்சர்கள் இராஜினாமா

Image
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து நேற்று வரை ஒன்பது அமைச்சர்கள் தங்கள் அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.  தேர்தல் பெறுபேறுகள் வெளியான நேற்று முன்தினம் (17) ஏழு அமைச்சர்கள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்தனர். அதனைத்தொடர்ந்து நேற்றைய தினமும் (18) பெருநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தியமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவும் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் அசோக்க அபேசிங்கவும் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்திருப்பதாக புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளனர்.  இதற்கமைய ஐக்கிய தேசியக் கட்சியின் உபதலைவரும் வீடமைப்பு அபிவிருத்தி, நிர்மாணப்பணிகள் மற்றும் கலாசார விவகார அமைச்சர் சஜித் பிரேமதாச, விளையாட்டுத் தொலைதொடர்புகள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, நிதியமைச்சர் மங்கள சமரவீர, டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஜித் பி. பெரேரா, அபிவிருத்தி மூலோபாய சர்வதேச சந்தைப்படுத்தல் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, திறன் அபிவிருத்தி தொழிற்பயிற்சி பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவித்தான

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைத்துவம் மீண்டும் மைத்திரிக்கு

Image
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைத்துவம் மீண்டும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தலின் போது நடுநிலைமையாக இருந்த காரணத்தினால் கட்சியின் தற்காலிக தலைவராக பேராசிரியர் ரோஹண லக்‌ஷ்மன் பியதாஸ நியமிக்கப்பட்டிருந்தார். அதனடிப்படையில் மீண்டும் கட்சியின் தலைமையை முன்னாள் ஜனாதிபதியிடமே ஒப்படைத்தாக பேராசிரியர் ரோஹண லக்‌ஷ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார்.

ஹரின் பெர்னாண்டோ இராஜினாமா

Image
தொலைத்தொடர்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது அமைச்சுப் பதவி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியில் தான் வகிக்கும் அனைத்து பதவிகளிலும் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் தனது ட்விற்றர் கணக்கிலேயே இந்த கருத்தை தெரிவித்துள்ளார். Harin Fernando ‏ Verified account   @fernandoharin   3h 3 hours ago More Respecting the people's mandate I am stepping down as Minister of Sports, Telecommunications & Foreign Employment. I am also resigning from my positions at UNP. I Take this opportunity to thank every one who supported me in my tenure, hope good work done will be continued

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சஜித் பிரேமதாஸ வாழ்த்து

Image
ஐ.தே.க. உப பதவியில் இருந்து விலகுவதாகவும் அறிவிப்பு ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றதற்கு, புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். வெற்றி பெற்றுள்ள கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை எழுதியுள்ள சஜித் பிரேமதாஸ இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் தேர்தலுக்கு பிந்தைய காலத்தில் தனது ஆதரவாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கோட்டாபய ராஜபக்ஷவிடம் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார். மக்கள் ஆணைக்கு கட்டுப்பட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவியில் இருந்து உடனடியாக பதவி விலகுவதாகவும், சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். தன்னை ஜனாதிபதி பதவியில் நியமிக்க ஆதரவளித்தோர், தனக்காக முன்னின்றோர் உள்ளிட்ட அனைவருடனும் தனது எதிர்கால அரசியல் பயணம் குறித்து எதிர்வரும் வாரங்களில், கலந்துரையாடி முடிவெடுக்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தனது 26 வருட அரசியல் வாழ்க்கை மற்றும் தன் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அனைவருக்கும் நன்

பொதுமக்களுக்கு கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள கோரிக்கை

Image
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றி உறுதியாகியுள்ளதால் அந்த வெற்றியை கண்ணியத்துடன் அனுபவிக்குமாறு ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் இன்று (13) முற்பகல் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், நாங்கள் இதுவரையும் எமது தேர்தல் பிரச்சாரங்களை முன்மாதிரியாகவும் மற்றும் கண்ணியத்துடனும் முன்னெடுத்துள்ளோம். அதேபோல், தொடர்ந்தும் தரமான மற்றும் பயனுள்ள அரசாங்கம் ஒன்றை உருவாக்க எதிர்பார்த்துள்ளோம். இதன் காரணமாக, ஜனாதிபதி தேர்தல் வெற்றியை மிகவும் கண்ணியத்துடன் பிறருக்கு இடையூறு ஏற்படாத வகையில் கொண்டாடுமாறு பொது மக்களிடம் கோருகின்றேன். நாம் இதுவரை எமக்கு வழங்கப்பட்ட அனைத்து கடமைகளையும் கண்ணியத்துடன் நிறைவேற்றியுள்ளோம். எதிர் தரப்பினர் பல வருடமாக இந்த அரசாங்கத்தினை நடாத்திச் சென்ற போதும் பொதுமக்களுக்கு ஒன்றையும் செய்யாமல் அதிகாரத்தை கோருபவர்களாக உள்ளனர். அதன் காரணமாக இதுவரை பராமரிக்கப்பட்ட முன்மாதிரி நிலையையும் மற்றும் கண்ணியத்தை

இலங்கையில் மீண்டும் ராஜபக்ஷ குடும்பத்தினர் ஆதிக்கம் செலுத்த தயார் நிலையில்!

Image
நீண்ட இடைவௌிக்கு பின்னர் இலங்கையில் மீண்டும் ராஜபக்ஷ குடும்பத்தினர் ஆதிக்கம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக ரொய்டர் செய்தி சேவை தகவல் வெளியிட்டுள்ளது. இந்த வார இறுதியில் ஒரு சகோதரர் ஜனாதிபதியாக கவனம் செலுத்துகின்ற நிலையில் மற்ற சகோதரர் அடுத்த வருட ஆரம்பத்தில் பிரதமராகுவதற்கு கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மற்ற இரண்டு சகோதரர்கள் தங்களது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் அரசியல் மூலோபாயவாதிகளாக செயற்படுகின்ற நிலையில் அவர்களில் ஒருவர் பாராளுமன்ற சபாநாயகராக மாறுவதற்கான தீர்மானத்தை பரிசீலித்து வருகிறார். குடும்பத்தின் அடுத்த தலைமுறையின் மூன்று ஆண்களும் அரசியலில் ஈடுபட எதிர்பார்த்திருப்பதாக குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. முறையான கருத்துக் கணிப்புகள் எதுவும் இல்லை என்றாலும், நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களில் ஒருவரான சஜித் பிரேமதாச பின்னடைவில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.Adaderana

2019 ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஒழுங்கு விதிகள்

Image
இலங்கையின் 8ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வாக்களிப்பதற்கென ஒரு கோடி 60 இலட்சம் பேர் தகுதி பெற்றுள்ள நிலையில் இந்தமுறை வாக்களிப்பதற்கான நேரம் ஒரு மணித்தியாலத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த கால ஜனாதிபதி தேர்தல்களை விட அதிகளவான வேட்பாளர்கள் போட்டியிடும் ஜனாதிபதி தேர்தலாக 2019 ஜனாதிபதி தேர்தல் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையில் வாக்களிக்க வேண்டிய நிலையம் குறிப்பிடப்பட்டிருக்கும். அட்டையில் குறிப்பிடப்பட்ட நிலையங்களுக்கு சென்று வாக்கினை அளிக்க வேண்டும். வேறு நிலையங்களில் வாக்கினை அளிக்க முடியாது. போட்டியிடும் 35 வேட்பாளர்களுள் விருப்பமான ஒருவருக்கு ஒவ்வொருவரும் தமது தனிப்பட்ட வாக்கை செலுத்தலாம். வாக்களிப்பின் போது வேட்பாளரின் கட்சியின் சின்னத்திற்கும் பெயருக்கும் எதிரே உள்ள கூட்டில் புள்ளடி இட வேண்டும். அல்லது 1 என்ற இலக்கத்தை குறிப்பிட வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டுமாயின் முதலாவது தெரிவுக்கு நேரே 1 என்றும் ஏனைய இர

தேர்தல் பிரசாரங்கள் யாவும் நாளை நள்ளிரவுடன் முடிவு

Image
மீறினால் கடும் தண்டனை ஐரோ. கண்காணிப்பாளர்களும் வருகை ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரசாரங்கள் யாவும் நாளை(13) நள்ளிரவு 12 மணியுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டுமென தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதனடிப்படையில் நாளை நள்ளிரவுக்குப் பின்னர் பிரசாரங்களை முன்னெடுப்பது மற்றும் வீடுகளுக்குச் சென்று பிரசாரங்களை மேற்கொள்வது என்பன தண்டனைக்குரிய குற்றமாகும். எதிர்வரும் சனிக்கிழமை காலை ஆரம்பமாகவுள்ள ஜனாதிபதி தேர்தலையொட்டி 14 ஆம் , 15 ஆம் திகதிகளில் நாட்டில் அமைதி பேணப்படும் அதேநேரம் மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து சுயமாக தீர்மானிப்பதற்குரிய காலமாக இக்காலப்பகுதி இருக்க வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கேட்டுக்கொண்டுள்ளார். இவற்றை மீறி இக்காலப்பகுதியில் கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்துவோர் மற்றும் விளம்பரங்களை ஔி, ஒலிபரப்புச் செய்யும் ஊடக நிறுவனங்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்படுமென்றும் தேர்தல்கள் திணைக்களத்தின் தலைவர் கூறினார். தேர்தலையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 25 ஆயிரத்துக்கும் அதிகமான பொலிஸாரும

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 3627 முறைப்பாடுகள்

Image
ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 3627 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 08 ஆம் திகதி தொடக்கம் நேற்று (11) வரை குறித்த முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில், தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 3387 முறைப்பாடுகளும், வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 27 முறைப்பாடுகளும் மற்றும் 106 வேறு முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. நேற்று (11) பிற்பகல் 4 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 108 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. -News Admin-

2019 ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பிற்காக கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள்

Image
2019 ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பிற்காக கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். நேற்று (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார். நேற்று வரை ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 82 முறைப்பாடுகள் பொலிஸ் நிலையங்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். அதேபோல், தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 100 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், 70 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தல் தினத்தில் பாதுகாப்பு பணிக்காக 60 ஆயிரத்திற்கும் அதிகமான பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், 12 ஆயிரத்து 856 வாக்குச் சாவடிகளில் ஒவ்வொரு வாக்குச் சாவடிகளுக்கும் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் வீதம் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவித்தார். அதன்படி, 12 ஆயிரத்து 856 வாக்குச் சாவடிகளில் 25 ஆயிரத்து 712 பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, நாடு பூராகவும் உள்ள அனைத்

பெப்ரல் தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு பயிற்சி

Image
எதிர்வரும் 16ஆம் திகதி நடை பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில்  அம்பாறை மாவட்டத்தில் 76 வாக்களிப்பு  நிலையங்களை கண்காணிப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ள  உத்தியோகத்தர்களுக்கு  பெப்ரல்  அமைப்பின் ஏற்பாட்டில்கடந்த  சனிக்கிழமை பயிற்சி செயலமர்வு இடம் பெற்றது . பெப்ரல் அமைப்பின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் கே.சத்தியநாதன் தலைமையில் பயிற்சி செயலமர்வு இடம் பெறுவதையும் கலந்து கொண்ட கண்காணிப்பாளர்களையும் கம்போடியநாட்டு தேர்தல் கண்காணிப்பாளரையும் படங்களில் காணலாம்                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        

சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாயல் நிர்வாகிகள், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் சந்திப்பு.

Image
சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாயல் நிர்வாகிகளும், சாய்ந்தமருதை சேர்ந்த கல்முனை மாநகர சபை உறுப்பினர்களும் கல்விமான்களும் அண்மையில் கிழக்கு ஆளுநர் கலாநிதி எம்.எல.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் அவர்களை ஆளுநர் செயலகத்தில் சந்தித்தனர். தங்களின் பிரதேசம் நீண்டகாலமாக அபிவிருத்தி பணிகளில் புறக்கணிக்கபட்டதாகவும் , மக்களின் வேண்டுகோளுக்கு அமைய ஒரு நகரசபை கோரிக்கையை முன்வைத்த நாளிலிருந்து அரசியல்வாதிகளால் நாங்கள் புறக்கணிக்கபடுகிறோம். இதனால் இப்பிரதேசம் அபிவிருத்திகளில் பின்தங்கியுள்ளது என குறிப்பிட்டனர் . மேலும் இச் சந்திப்பில் பாடசாலை ,கல்வி அபிவிருத்தி சுகாதாரம் வைத்தியம் ,விளையாட்டு சுற்றுலா போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது இந்த விடயங்களை செவிமடுத்த ஆளுநர் அவர்கள் இந்த விடயங்களுக்கு தேவையான நிதி ஒதுக்கீடுகளை செய்து பாடசாலை மற்றும் ஏனைய துறைகளுடைய முன்னேற்றத்திற்கு முழு ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்ததோடு இவ்விடயம் தொடர்பான செயலாளர்கள், பணிப்பாளர்கள் சாய்ந்தமருதுக்கு விஜயம் செய்து குறிப்பிட்ட பிரதேச அறிக்கைகளை உடனடியாக சமர்பித்து அவசரமாக இந்த பிரச்சனைகளுக்க

துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை பிரதி அமைச்சராக அப்துல்லா மஹரூப் பதவிப்பிரமாணம்

Image
விசேட பிரதேச அபிவிருத்திக்கான அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சராக வீ. இராதாகிருஷ்ணன் இன்று   பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.  இதேவேளை, தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் தொடர்பான அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சராக ரவீந்திர அமரவீரவும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.  மேலும், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை பிரதி அமைச்சராக அப்துல்லா மஹரூப்வும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.  இவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ஜனாதிபதியின் செயலகத்தில் இன்று காலை பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளனர்.

“இன,மத வேறுபாடுகளுக்கு அப்பால் நீதியாகவும், நேர்மையாகவும் செயற்படுவேன்”

Image
த.தே.கூ. தலைவர் சம்பந்தனிடம் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் எடுத்துரைப்பு “எந்தவொரு இனத்துக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் நீதியாகவும், நேர்மையாகவும் தனது பணிகளை முன்னெடுப்பதாக” கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான ஆர்.சம்பந்தனிடம் எடுத்துரைத்தார்.  கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டதன் பின்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடும் நோக்கில் த.தே.கூ. தலைவர் ஆர்.சம்பந்தனை இன்று வியாழக்கிழமை கொழும்பில் சந்தித்தார்.  இதன்போது, கிழக்கு மாகாண ஆளுநராக செயற்படுவதற்கு ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும், கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்குமாறும் கேட்டுக்கொண்ட த.தே.கூ. தலைவர், தமது முழு ஒத்துழைப்பை வழங்க தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.  மேலும், “தமிழ் மக்கள் பல்வேறு துன்பங்கள், துயரங்களை தாக்கி நின்கிறார்கள்.  கடந்த காலங்களில் அரச நியமனங்கள், பாடசாலை போன்ற விடயங்களில் மாகாண நிர்வாகத்தில் அவர்களுக்க

“ஆளுநர் நியமனத்தை இன ரீதியாக பார்க்காதீர்: கிழக்கில் வாழும் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவனாக இருந்து செயற்படுவேன்!”

Image
பொது மக்களிடம் ஆளுநர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை  கிழக்கு மாகாண ஆளுநராக நான் நியமிக்கப்பட்டதன் பின்னர் சில சகோதரர்கள் இனரீதியான முரண்பாடுகளை தோற்றுவித்து இனரீதியாக பார்ப்பதை நான் அவதானிக்கின்றேன்.இது தொடர்பிலே ஹர்தால் மற்றும் கடையடைப்பு போன்ற விடயங்களுக்கு ஒரு சில சகோதரர்கள் முயற்சிகளில் ஈடுபடுவதாகவும் அறிகின்றேன். குறிப்பாக கிழக்கு மாகாண மக்கள் நாம் எல்லோரும் சந்தோசப்படவேண்டும் எங்களது மொழியை பேசுகின்ற எங்களோடு சேர்ந்து செயற்படக்கூடிய என்னை நியமித்தமைக்காக நீங்கள் எல்லோரும் பெருமைப்பட வேண்டும். குறிப்பாக நான் ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கோ குறிப்பிட்ட பிரதேசத்திற்கோ அல்லது குறிப்பிட்ட மாவட்டத்திற்கோ அல்ல மொத்த கிழக்கு மாகாணத்திற்குமே ஆகும். நான் ஆளுநர் பதவியை பொறுப்பெடுத்த நாள் முதல் கிழக்கு மாகாணத்து அனைத்து மக்களும் என்னுடைய சகோதரர்கள் எனது சகோதரிகள் எனது தாய்மார்கள் தந்தையர்கள் தம்பிமார் தங்கைமார் அண்ணன் தம்பி என்று மிகத்தெளிவாகச் சொல்லியிருக்கிறேன். ஆகவே மாகாணத்தில் வாழுகின்ற அனைத்து மக்களையும் பாதுகாத்து அவர்களுடைய பிரச்சினைகளுக

கிழக்கு மாகாண ஆளுநருக்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் கடிதம்.

Image
(அகமட் எஸ். முகைடீன்)   கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்பட்டுள்ளமைக்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் என்றவகையில் தனது வாழ்த்துக்களை தெரிவித்து இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.  அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் முதன் முதலாக ஆளுநராக நியமிக்கப்பட்டமையினை இட்டு பெருமையடைகின்றேன். இப்பதவிக்காலத்தில் இன, மத, கட்சி பேதமின்றி உங்களுடைய நடவடிக்கைகள் அமையும் என்று நம்புகின்றேன்.  அந்தவகையில் பழுத்த அனுபவம் கொண்ட அரசியல் தலைமையான நீங்கள் இந்த மாகாண சபையினை வினைத்திறன் மிக்கதாக வழிநடத்துவீர்கள் என்ற நம்பிக்கையும் எனக்குள்ளது.  கிழக்கு மாகாண சபையின் ஆளுநர் என்றவகையில் நீங்களும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் என்றவகையில் நானும் குறிப்பாக கிழக்கு மாகாண மக்களின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பும், கடப்பாடும் எம்மிருவருக்கும் இருக்கின்றது.     அந்த அடிப்படையில் எனது அமைச

கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்தி தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல்

Image
(அகமட் எஸ். முகைடீன்)   கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்தி தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் நேற்று (8) செவ்வாய்க்கிழமை அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்றது.   இவ்வுயர்மட்ட கலந்துரையாடலில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உப நகரங்கள் திட்டத்தின் ஆலோசகர் செட்டி, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சின் செயலாளர் எஸ்.பி.ஏ.பி. பொறலஸ்,  மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சின் கருத்திட்டங்களுக்கான மேலதிகச் செயலாளர் எம்.எம். நயிமுடீன், இலங்கை நிர்வாக சேவையில் ஓய்வு பெற்ற உத்தியோகத்தரும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான அப்துல் மஜீட், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என். மணிவண்ணன், கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப், கல்முனை மாநகர ஆணையாளர் எம்.சி. அன்சார் ஆகியோர் கலந்துகொண்டனர்.   இதன்போது உள்ளூராட்சி மன்றங்களுடைய அபிவிருத்தி மற்றும் உள்ளூராட்சி ம

வடக்கு ஆளுநர் - சம்பந்தன் சந்திப்பு!

Image
வடக்கு மாகாணத்தின் ஆளுநராக நியமனம் பெற்ற கலாநிதி. சுரேன் ராகவன் இன்று (08) தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்த​னை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார்.  கலாநிதி. சுரேன் ராகவன் வடக்கு ஆளுநராக நியமனம் பெற்றதன் பின்னர் இடம்பெற்ற முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பு இது என்பதும் குறிப்பிடத்தக்கது.  இச்சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரனும் கலந்து கொண்டிருந்தார். 

ஏ.ஆர்.மன்சூர் வாழ்வும் பணிகளும் நூல் வெளியீட்டு விழா

Image
வரலாற்றுக்  கட்டுரை  எழுத்தாளரும்  முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.எம்.பறக்கத்துல்லாஹ் எழுதிய முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் பற்றிய வாழ்வும் பணிகளும் நூல் வெளியீட்டு விழா ஏ.ஆர்.மன்சூர் பவுண்டேஷன் ஏற்பாட்டில் நடை பெறவுள்ளது. முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூரின் புதல்வரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ரஹ்மத் மன்சூர் தலைமையில் மர்ஹூம் மன்சூரின் பாரியார் திருமதி சொஹ்ரா மன்சூர் முன்னிலையில்  இந்த நூல் வெளியீட்டு  விழா நடைபெறவுள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை (12.01.2019) மர்ஹூம் மன்சூர் ஆரம்பக்கல்வி கற்ற பாடசாலையான கல்முனை வெஸ்லி  உயர்தர பாடசாலை நல்லதம்பி மண்டபத்தில் நடைபெறும் நூல் வெளியீட்டு  விழாவில் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் தேசிய தலைவரும் நகரத் திட்டமிடல்  தேசிய நீர் வழங்கல்  மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார். ஏ.ஆர்.மன்சூர் வாழ்வும் பணிகளும் பற்றிய நூலின் ஆய்வுரையை பேராதனைப் பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவர் பேராசிரியர்  எம்.ஏ. நுகுமான் வழங்குவதுடன்  நூலின் அறிமுகவுரையை  தென்கிழக்குப் பல்கலைக்கழக  மொழித்துறை தலைவர்

பாராளுமன்ற தெரிவுக்குழுவில் மேலும் ஐவர்

Image
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு மேலும் 5 பேர் பெயரிடப்பட்டுள்ளனர். குறித்த குழுவில் அமைச்சர்களான ஜோன் அமரதுங்க, காமினி ஜயவிக்ரம பெரேரா, சஜித் பிரேமதாச, தலதா அத்துகோரள ஆகியோரும், பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர். அதன் அடிப்படையில் சபாநாயகர் தலைமையிலான பாராளுமன்ற தெரிவுக் குழுவில் 17 உறுப்பினர்கள் தற்போது அங்கம் வகிக்கின்றனர். ஏற்கனவே பாராளுமன்ற தெரிவுக்குழுவில், ஐக்கிய தேசிய முன்னணி சார்பில், லக்‌ஷ்மன் கிரியெல்ல, ரஊப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், மனோ கணேசன், பாட்டலி சம்பிக ரணவக்க ஆகியோரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை பிரநிதித்துவப்படுத்தி, நிமல் சிறிபால டி சில்வா, தினேஷ் குணவர்தன, மஹிந்த சமரசிங்க, எஸ் பி திசாநாயக்க, விமல் வீரவங்ச ஆகியோரும், தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவும், மக்கள் விடுதலை முன்னணி சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் ஆகியோரும் அங்கத்துவம் வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.