ஏ.ஆர்.மன்சூர் வாழ்வும் பணிகளும் நூல் வெளியீட்டு விழா
வரலாற்றுக் கட்டுரை எழுத்தாளரும் முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.எம்.பறக்கத்துல்லாஹ் எழுதிய முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் பற்றிய வாழ்வும் பணிகளும் நூல் வெளியீட்டு விழா ஏ.ஆர்.மன்சூர் பவுண்டேஷன் ஏற்பாட்டில் நடை பெறவுள்ளது.
முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூரின் புதல்வரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ரஹ்மத் மன்சூர் தலைமையில் மர்ஹூம் மன்சூரின் பாரியார் திருமதி சொஹ்ரா மன்சூர் முன்னிலையில் இந்த நூல் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.
எதிர்வரும் சனிக்கிழமை (12.01.2019) மர்ஹூம் மன்சூர் ஆரம்பக்கல்வி கற்ற பாடசாலையான கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலை நல்லதம்பி மண்டபத்தில் நடைபெறும் நூல் வெளியீட்டு விழாவில் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் தேசிய தலைவரும் நகரத் திட்டமிடல் தேசிய நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.
ஏ.ஆர்.மன்சூர் வாழ்வும் பணிகளும் பற்றிய நூலின் ஆய்வுரையை பேராதனைப் பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவர் பேராசிரியர் எம்.ஏ. நுகுமான் வழங்குவதுடன் நூலின் அறிமுகவுரையை தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை தலைவர் பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாவும் நிகழ்த்தவுள்ளார்.
முன்னாள் அமைச்சர் மர்ஹூம் ஏ.ஆர்.மன்சூர் அரசியலில் இன நல்லிணக்கத்தை கட்டி வளர்த்தவர் . இன்றும் அவர் ஆற்றிய பணியை தமிழ் முஸ்லீம் மக்கள் நினைவு கூர்ந்து கொண்டே இருக்கின்றனர் . முல்லைத்தீவு மாவட்ட அமைச்சராகவும் ,நீண்ட காலமாக வர்த்தக வாணிப அமைச்சராகவும் இருந்து நாட்டுக்கு அளப்பெரிய பணியாற்றியவர்.
Comments
Post a Comment