தேர்தலைத் தொடர்ந்து 9 அமைச்சர்கள் இராஜினாமா
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து நேற்று வரை ஒன்பது அமைச்சர்கள் தங்கள் அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.
தேர்தல் பெறுபேறுகள் வெளியான நேற்று முன்தினம் (17) ஏழு அமைச்சர்கள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்தனர். அதனைத்தொடர்ந்து நேற்றைய தினமும் (18) பெருநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தியமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவும் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் அசோக்க அபேசிங்கவும் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்திருப்பதாக புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளனர்.
இதற்கமைய ஐக்கிய தேசியக் கட்சியின் உபதலைவரும் வீடமைப்பு அபிவிருத்தி, நிர்மாணப்பணிகள் மற்றும் கலாசார விவகார அமைச்சர் சஜித் பிரேமதாச, விளையாட்டுத் தொலைதொடர்புகள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, நிதியமைச்சர் மங்கள சமரவீர, டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஜித் பி. பெரேரா, அபிவிருத்தி மூலோபாய சர்வதேச சந்தைப்படுத்தல் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, திறன் அபிவிருத்தி தொழிற்பயிற்சி பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவித்தான, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன ஆகியோரே நேற்று முன்தினம் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.
Comments
Post a Comment