Posts

Showing posts from March, 2018

கல்முனை நகர் அருள் மிகு ஸ்ரீ சந்தான ஈஸ்வரர் ஆலய தேர்த் திருவிழா

Image
கல்முனை நகர் அருள் மிகு ஸ்ரீ சந்தான ஈஸ்வரர் ஆலய தேர்த் திருவிழா இன்று வெள்ளிக் கிழமை வெகு சிறப்பாக இடம் பெற்றது. அதிகாலை 4.30 மணிக்கு அபிசேகத்துடன் பூஜை வழிபாடுகள் ஆரம்பமாகி காலை 6.00 மணிக்கு எம் பெருமான் தேரில் எழுந்தருளி தேர்பவனி ஆரம்பமானது. கௌரி அம்பாள் சமேத சந்தான ஈஸ்வரப் பெருமான் ஒரு தேரிலும், விநாயகப் பெருமான் மற்றுமொரு தேரிலும், வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமான் ஒரு தேரிலுமாக மூன்று தேர்களில் இறைவன் பவனி வருகின்ற  திரு நிகழ்வு   சிறப்பாக இடம் பெற்றன.   காவடியாட்டம் ,கரகாட்டம்  நாதஸ்வர தவில் முழங்க பறை மேழ முழக்கத்துடன் ஆண் பெண் வேறுபாடின்றி பக்தர்கள் திரண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். இத் தேர் திரு விழா கல்முனை பிரதான வீதி ஊடாக வலம் வந்து ஆலயத்தை சென்றடைந்தது. இம்மாதம் 20ஆம் திகதி  கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆலய கிரியைகளைத் தொடந்து திரு விழாக்கள்  ஆலய வழிபாடுகள் மற்றும் அன்னதானம் வழங்கல் இடம் பெற்று 11 ஆம் நாளான இன்று (30) இத் தேர் திரு விழா இடம் பெற்றன. நாளை 12 ஆம் நாளான இறுதி நிகழ்வாக தீர்தேற்சவம் நடை பெறும். சிவ பிரம்...

103 மாணவர்கள் 9ஏ சித்தி பெற்று கல்முனை கல்வி வலயத்துக்கு பெருமை

Image
இன்று  வெளியான சாதாரண தரப் பரீட்சையில் சகல பாடங்களிலும் 103 மாணவர்கள் 9ஏ  சித்தி பெற்று கல்முனை கல்வி வலயத்துக்கு  பெருமை சேர்த்துள்ளனர் .  கல்முனை கோட்டத்தில் 40 மாணவர்களும் ,கல்முனை தமிழ் கோட்டத்தில் 31 மாணவர்களும் ,காரைதீவு கோட்டத்தில் 07 மாணவர்களும் ,நிந்தவூர் கோட்டத்தில் 12 மாணவர்களும் சாய்ந்தமருது கோட்டத்தில் 13 மாணவர்களும் 9ஏ சித்தி பெற்றுள்ளனர்  .  கல்முனை கார்மேல் பற்றிமா  பாடசாலையில் 26 மாணவர்களும் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் 25 மாணவர்களும்  9ஏ  சித்தி பெற்றுள்ளனர் . கல்முனை கல்வி வலயத்தில் வரலாற்று  படைத்துள்ள மாணவர்களையும் அதற்கு துணையாக செயற்பட்ட அதிபர்களையும் ,ஆசிரியர்களையும் கல்முனை வலயக்  கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் பாராட்டியுள்ளார் . கடந்த ஆண்டு கல்முனை  வலயத்தில் 54 மாணவர்கள் சகல பாடங்களிலும் 9ஏ சித்தி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கல்முனை ,நிந்தவூர் ,சம்மாந்துறை ,அட்டாளைச்சேனை,பொதுவில் உள்ளூராட்சி சபை ACMC உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்

Image
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் அகில  இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற  கல்முனை மாநகர சபை ,நிந்தவூர் பிரதேச சபை ,சம்மாந்துறை பிரதேச சபை ,அட்டாளைச்சேனை பொத்துவில்  பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் கட்சியின் தலைவர் றிசாத் பதியுதீன் முன்னிலையில் சத்திய  செய்வதை காணலாம் .

அரசியல் கைதிஆனந்த சுதாகரனை விடுதலை செய்யக் கோரி கல்முனையில் கையெழுத்து வேட்டை

Image
அரசியல் கைதியாக தடுத்து வைக்கப் பட்டுள்ள ஆனந்த சுதாகரனை  விடுதலை செய்யக் கோரி  இன்று  (24) சனிக்கிழமை  கல்முனை மாநகரில் கையெழுத்து வேட்டை  இடம் பெற்றது .  கல்முனை தமிழ் இளைஞர்கள் ஒன்றியம் மற்றும் பொது மக்களினால் இந்த கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப் பட்டது . கல்முனை  மாநகர  அம்பலத்தடி பிள்ளையார் ஆலயத்துக்கு முன்பாக  இடம் பெற்ற  இந்த கையெழுத்து பெறும்  நடவடிக்கையினை கல்முனை நகர ஜும்மா பள்ளிவாசல் பேஷ் இமாம் மௌலவி யு.எல்.எம்.இக்பால் , ஸ்ரீ முருகன் ஆலய குருக்கள் சிவ ஸ்ரீ க.சச்சிதானந்தம் ,திரு இருதயநாதர் ஆலய பங்குத்தந்தை  ஏ.ஜேசுதாசன் அடிகளார் ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.  இதன் போது கிழக்கு மாகாண முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.ராஜேஸ்வரன் உட்பட உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் ,பொது மக்கள் , கூடுதலான மாணவர்கள் ,பொது மக்கள், ஊடகவியலாளர்கள்  என  இன  மத வேறுபாடுகளை மறந்து பலரும் கையொப்பமிட்டனர்.  ஆனந்த சுதாகரனின் இரு பிள்ளைகளின் எதிர்காலத்தை கவனத்தில் எடுத்து நல்லாட்சியின் நாயகனான ஜனாதி...

உள்ளுராட்சி சபைகளை அமைக்கும் பணிகள் இன்று (20) முதல் ஆரம்பமாகியுள்ளது.

Image
உள்ளுராட்சி சபைகளை அமைக்கும் பணிகள் இன்று (20) முதல் ஆரம்பமாகியுள்ளது. அதன் அடிப்படையில் உள்ளூராட்சி சபைகளை நிறுவும் பணிகள் இன்று (20) முதல் ஒரு மாதத்திற்குள் நிறுவலாம் என உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமைச்சின் செயலாளரினால் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி 10 ஆம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றியீட்டிய அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்களுக்கு அதற்கான உரிய சபைகளை நிறுவ முடியும். ஆயினும், உள்ளூராட்சி சபைகளின் பலத்தை 50 வீதத்திற்கும் மேல் பெறாத சபைகளின் ஆட்சியை அமைக்கும் பணிகள் தொடர்பில் உரிய சபைகளின் பிரதிநிதிகளிடையே வாக்கெடுப்பும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த வாக்கெடுப்பை நடாத்துவது தொடர்பில், உள்ளூராட்சி சபைகளின் ஆணையாளர்களுக்கு உரிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. தேர்தல் இடம்பெற் 340 உள்ளூராட்சி சபைகளில் 169 சபைகள் பெரும்பான்மை நிறைவேற்றப்படாத நிலையில், குறித்த சபைகளை நிறுவும் பொருட்டு இவ்வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிட...

கல்முனை தமிழ் பிரதேச செயலக கலாச்சார பேரவையினால் நேற்று (15) நடாத்தப் பட்ட கலாச்சார நிகழ்வில் கெளரவிக்கப் பட்ட கலை இலக்கியவாதிகள் சிலர்

Image

அட்டப்பள்ளம் இந்து மயான விவகாரம்

Image
"நான் கொடுப்பவனே தவிர  பறிப்பவன்  அல்ல "  குறை அரசியல் பதர்களே  விடயத்தை பூதாகாரமாகியுள்ளனர்  இவ்வாறு  அட்டப்பள்ளம் இந்து மயான விவகாரத்தில் பிரச்சினைக்குரிய காணி உரிமையாளரான பேராசிரியர் அச்சி முகம்மது இஷாக்  தனது நிலைப்பாட்டை  விளக்குகிறார் .......

பேஸ்புக் தடை வௌ்ளிக்கிழமை நீக்கப்படும்?

Image
பேஸ்புக் உட்பட அனைத்து சமூகவலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை எதிர்வரும் வௌ்ளி்க்கிழமை (16) நீக்கப்படும் என்று தொலைத்தொடர்பு அமைச்சர் ஹரீன் பெனாண்டோ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் பேரில் குறித்த தடை நீக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். பேஸ்புக் நிறுவன பிரதிநிதிகள் எதிர்வரும் வியாழனன்று இலங்கையில் நடைபெறவுள்ள சந்திப்பில் கலந்துகொண்டு குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவார்கள் என்றும் தெரிவிக்ப்பட்டுள்ளது. கடந்த வாரம் கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட இனங்களுக்கிடையிலான முறுகல் நிலை காரணமாக சமூகவலைத்தளங்கள் தற்காலிகமாக முடக்கப்பட்டன.