அரசியல் கைதிஆனந்த சுதாகரனை விடுதலை செய்யக் கோரி கல்முனையில் கையெழுத்து வேட்டை

அரசியல் கைதியாக தடுத்து வைக்கப் பட்டுள்ள ஆனந்த சுதாகரனை  விடுதலை செய்யக் கோரி  இன்று  (24) சனிக்கிழமை  கல்முனை மாநகரில் கையெழுத்து வேட்டை  இடம் பெற்றது . 

கல்முனை தமிழ் இளைஞர்கள் ஒன்றியம் மற்றும் பொது மக்களினால் இந்த கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப் பட்டது .

கல்முனை  மாநகர  அம்பலத்தடி பிள்ளையார் ஆலயத்துக்கு முன்பாக  இடம் பெற்ற  இந்த கையெழுத்து பெறும்  நடவடிக்கையினை கல்முனை நகர ஜும்மா பள்ளிவாசல் பேஷ் இமாம் மௌலவி யு.எல்.எம்.இக்பால் , ஸ்ரீ முருகன் ஆலய குருக்கள் சிவ ஸ்ரீ க.சச்சிதானந்தம் ,திரு இருதயநாதர் ஆலய பங்குத்தந்தை  ஏ.ஜேசுதாசன் அடிகளார் ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.

 இதன் போது கிழக்கு மாகாண முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.ராஜேஸ்வரன் உட்பட உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் ,பொது மக்கள் , கூடுதலான மாணவர்கள் ,பொது மக்கள், ஊடகவியலாளர்கள்  என  இன  மத வேறுபாடுகளை மறந்து பலரும் கையொப்பமிட்டனர். 

ஆனந்த சுதாகரனின் இரு பிள்ளைகளின் எதிர்காலத்தை கவனத்தில் எடுத்து நல்லாட்சியின் நாயகனான ஜனாதிபதி அவர்கள்  ஆனந்த சுதாகரனை   விடுதலை செய்ய வேண்டுமென்ற மகஜர் கல்முனை நகரில் இருந்து ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் கல்முனை  மிழ் இளைஞர்கள் ஒன்றியதினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.






Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்