103 மாணவர்கள் 9ஏ சித்தி பெற்று கல்முனை கல்வி வலயத்துக்கு பெருமை
இன்று வெளியான சாதாரண தரப் பரீட்சையில் சகல பாடங்களிலும் 103 மாணவர்கள் 9ஏ சித்தி பெற்று கல்முனை கல்வி வலயத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர் .
கல்முனை கோட்டத்தில் 40 மாணவர்களும் ,கல்முனை தமிழ் கோட்டத்தில் 31 மாணவர்களும் ,காரைதீவு கோட்டத்தில் 07 மாணவர்களும் ,நிந்தவூர் கோட்டத்தில் 12 மாணவர்களும் சாய்ந்தமருது கோட்டத்தில் 13 மாணவர்களும் 9ஏ சித்தி பெற்றுள்ளனர் .
கல்முனை கார்மேல் பற்றிமா பாடசாலையில் 26 மாணவர்களும் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் 25 மாணவர்களும் 9ஏ சித்தி பெற்றுள்ளனர் .
கல்முனை கல்வி வலயத்தில் வரலாற்று படைத்துள்ள மாணவர்களையும் அதற்கு துணையாக செயற்பட்ட அதிபர்களையும் ,ஆசிரியர்களையும் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் பாராட்டியுள்ளார் .
கடந்த ஆண்டு கல்முனை வலயத்தில் 54 மாணவர்கள் சகல பாடங்களிலும் 9ஏ சித்தி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment