உள்ளுராட்சி சபைகளை அமைக்கும் பணிகள் இன்று (20) முதல் ஆரம்பமாகியுள்ளது.

உள்ளுராட்சி சபைகளை அமைக்கும் பணிகள் இன்று (20) முதல் ஆரம்பமாகியுள்ளது.
அதன் அடிப்படையில் உள்ளூராட்சி சபைகளை நிறுவும் பணிகள் இன்று (20) முதல் ஒரு மாதத்திற்குள் நிறுவலாம் என உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அமைச்சின் செயலாளரினால் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி 10 ஆம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றியீட்டிய அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்களுக்கு அதற்கான உரிய சபைகளை நிறுவ முடியும்.
ஆயினும், உள்ளூராட்சி சபைகளின் பலத்தை 50 வீதத்திற்கும் மேல் பெறாத சபைகளின் ஆட்சியை அமைக்கும் பணிகள் தொடர்பில் உரிய சபைகளின் பிரதிநிதிகளிடையே வாக்கெடுப்பும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த வாக்கெடுப்பை நடாத்துவது தொடர்பில், உள்ளூராட்சி சபைகளின் ஆணையாளர்களுக்கு உரிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
தேர்தல் இடம்பெற் 340 உள்ளூராட்சி சபைகளில் 169 சபைகள் பெரும்பான்மை நிறைவேற்றப்படாத நிலையில், குறித்த சபைகளை நிறுவும் பொருட்டு இவ்வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

தமிழ்த்தினப் போட்டியில் பாவோதலில் சுஷ்மிக்கா முதலிடம்