உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் பொன்விழா

( அஸீம் கிலாப்தீன்) உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் பொன்விழா கொழும்பு இலங்கை மன்ற மண்டபத்தில் விபுலாநந்தா அரங்கில் தற்போது இடம்பெற்றது இந்நிகழ்வில் இரண்டாம் நாள் நிகழ்வில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுத்தீன் , மீள்குடியேற்ற இராஜாங்க ஹிஸ்புல்லாஹ் மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அ லி ஆகியோர் கலந்து சிறப்பித்துக்கொண்டனர் . இந்நிகழ்வில் ஆய்வுக் கோவை , சிறப்பு மலர் வெளியீடு மற்றும் பேராளர்கள் கொளரவிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றது.