திருகோணமலை ஸாஹிரா கல்லூரி அதிபரின் மகத்தான பிரியாவிடை வைபவமும், மாணவர் பரிசளிப்பு விழாவும்....
திருகோணமலை ஸாஹிரா கல்லூரி அதிபர் எஸ்.எம்.முஹம்மட் அலி தனது 32 வருடகால கல்விச்சேவையிலிருந்து 2016.05.01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தனது 60வது வயதில் ஓய்வு பெறுவதையொட்டி 2016.04.30ஆந் திகதி சனிக்கிழமை கல்லூரி திறந்த வெளியரங்கில் மகத்தான பிரியாவிடை வைபவமும், மாணவர் பரிசளிப்பு விழாவும் இடம்பெறவுள்ளது. புதிதாக கல்லூரி அதிபராக கடமையேற்கவிருக்கும் பிரதி அதிபர் அலி சப்றி அவர்களின் தலைமையில் கல்லூரி அதிபரின் மகத்தான பிரியாவிடை வைபவமும், மாணவர் பரிசளிப்பு விழாவும் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ Z.A.நசீர் அஹமட் அவர்களும், கௌரவ அதிதிகளாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ எம்.எஸ்.தௌபீக், கௌரவ அப்துல்லா மஹ்ரூப், கௌரவ இம்ரான் மஹ்ரூப் ஆகியோரும், சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கௌரவ ஆர்.எம்.அன்வர், கௌரவ ஜே.எம்.லாஹிர், கௌரவ நஜீப் ஏ மஜீத் ஆகியோரும், சிறப்பு விருந்தினர்களாக மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம், திருகோணமலை வலயக்கல்விப் பணிப்பாளர் என்.விஜேந்திரன் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர...