நாட்டில் சிறந்ததொரு வைத்தியசாலையாக சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்திய சாலையை மாற்றுவேன்

பாராளுமன்ற உறுப்பினர்  எம்.ஐ.எம்.மன்சூர்-

சம்மாந்துறை வைத்தியசாலை சகல வளங்களுடனும் தரமுயர்தப் பட வேண்டிய  சூழல்  உருவாக்கப் பட்டுள்ளது . இந்த சந்தர்ப்பத்தை  வைத்தியசாலை  வைத்திய அத்தியட்சகர்  உட்பட வைத்திய அதிகாரிகளும் அபிவிருத்திக் குழு அங்கத்தவர்களும் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.

சம்மாந்துறை  வைத்தியசாலையில் திறமை மிக்க சத்திரசிகிச்சை நிபுணர் மற்றும் திறமை மிக்க பொதுவிதிய நிபுணர்  இருவர் நியமிக்கப் பட்டிருக்கும் நிலையில்  இவர்களின் வைத்திய சேவையைப் பெற  பொலநறுவை,திருகோணமலை மட்டக்களப்பு மாவட்டங்களை சேர்ந்தவர்களும் அம்பாறை  மாவட்டத்தில் அனைத்துப் பிரதேசத்தவர்களும்  சம்மாந்துறை வைத்திய சாலைக்கு வருகை தருகின்றனர் . இதனால் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன்  ஊழியர் பற்றாக்குறை,இடப்பற்றாக்குறை, மற்றும்  உபகரணப் பற்றாக்குறை நிலவுகின்றன .

குறித்த விடயம் தொடர்பாக  சத்திர சிகிச்சை நிபுணர் DR. AWM. சமீம் , பொது வைத்திய நிபுணர் DR.ஆபிதா ஆகியோரால் வைத்தியசாலை அத்தியட்சகரின் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர்  எம்.ஐ.எம்.மன்சூரின்  கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

சம்மாந்துறை வைத்தியசாலை அபிவிருத்தி விடயத்தில் பிரதேசவாதம் ,இனவாதங்களுக்கப்பால்  செயல் பட்டு வரும் பாராளுமன்ற உறுப்பினர்  மன்சூர்  நேற்று (18) கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர்  உட்பட  சுகாதார திணைக்கள அதிகாரிகளை அழைத்து நோயாளர்கள் இடப்பற்றாக்குறயினால்  படுகின்ற அவஸ்தைகளைக் காண்பித்ததுடன்  வைத்திய சேவை செயற்பாடுகளையும் பார்வையிட்டனர் . அதனை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் தலைமையில் நடை பெற்ற உயர் மட்டக் கூட்டத்தில் வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு மாகாண  அமைச்சர்  நசீரும் இணக்கம் தெரிவித்துள்ளார் .

இதே வேளை  சம்மாந்துறை வைத்தியசாலை அபிவிருத்தி செய்யப் படுவதை  சகித்துக்கொள்ள முடியாத சிலர்  ஊர்வாதம் ,இனவாதம் பேசுகின்றனர்.எவர் எதை கூறினாலும் சம்மாந்துறை வைத்தியசாலையை இந்த நாட்டில் பேசப்படக் கூடிய வைத்தியசாலையாக மாற்றி அதனை அழகு பார்க்கும் ஒருவனாக என்னை அற்பணிதுள்ளேன்  என பாராளுமன்ற உறுப்பினர்  எம்.ஐ.எம்.மன்சூர்  தெரிவித்தார் 



Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது