கல்முனை புதிய நகரத் திட்டத்திற்கு எத்தடை வரினும் அத்தடைகள் தகர்த்தெறிந்து முன்னேறுவோம்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் மறைந்த தலைவர் கனவு கண்ட புதிய கல்முனைநகரம், 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில்அன்றைய ஜனாதிபதி வேட்பாளர் ரணில்விக்ரமசிங்கவினால் வாக்குறுதியளிக்கப்பட்டு மீண்டும்2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரணில்விக்ரமசிங்கவினால் அவ்வாக்குறுதி புதுப்பிக்கப்பட்டு,இன்று அது செயலுருப் பெறுவதற்கானமுன்னெடுப்புக்கள் நடைபெறுகின்ற நிலையில், தமிழ்தரப்பினர் குறிப்பாக ரெலோ அமைப்பு தலைவர்செல்வம் அடைக்கலநாதன், தமிழர் மகா சபைபோன்ற அமைப்புக்கள் இணைந்து இதற்கு எதிராகஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருப்பதும் அதனைபாரதுரமாக எதிர்ப்பதும் ஆச்சரியப்பட்க் கூடிய ஒருவிடயமல்ல. வட கிழக்கின் மொத்த முஸ்லிம்சமூதாயம் தொடர்பாக தமிழ் தரப்பினரின்மனோநிலையை எடுத்துக் காட்டுகின்ற மற்றொருநிகழ்வு மட்டுமே இதுவாகும். அன்று மறைந்த தலைவர் இந்த புதிய நகரத்திட்டத்தைக் கொண்டுவந்த பொழுதும் இதனைஎதிர்த்தார்கள். இங்கு அவர்கள் மூன்று பிரதானவிடயங்களை சுட்டிக் காட்டுகின்றார்கள். ஒன்றுஉத்தேச புதிய நகரத்திற்காக சுவீகரிக்கப்பட இருக்கும் காணிகளில் கணிசமான அளவு காணிகள் தமிழ...