வெளி நாட்டிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கியவர் வீடு வந்து சேரவில்லை
இவரைக் கண்டவர்கள் தகவல் வழங்குங்கள்
கடந்த 13 ஆந் திகதி வெளி நாட்டிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய மட்டக்களப்பு புது மண்டபத்தடி கன்னங் குடாவை சேர்ந்த 22 வயதுடைய நவரட்ணம் குணராஜ் என்ற வாலிபர் வீடு வந்து சேரவில்லை என தெரிவித்து அவரது தந்தை நவரட்ணம் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் நிலையத்திலும் ,வவுணதீவு போலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளார் .
1993.06.10 ஆந் திகதி பிறந்த குணராஜ் மேசன் தொழில் புரிந்தவர் . இவர் கடந்த 2015.11.05 ஆந் திகதி தொழில் வாய்ப்புக்காக மதிய கிழக்கு நாட்டுக்கு சென்றிருந்தார் . அவருக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டதை அடுத்து அவர் கடந்த 13.12.2015 அன்று நாட்டுக்கு திருப்பி அனுப்பப் பட்டிருந்தார் . கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வந்து இறங்கிய குணராஜ் இன்னும் வீடு வந்து சேரவில்லை .
இவரைக் கண்டவர்கள் அவரது தந்தைக்கு கீழ் குறிப்பிடும் தொலை பேசி இலக்கங்களுக்கு தகவல் வளங்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றீர்கள் . 0772768735, 0779424185, 0717911324, 0756146306
Comments
Post a Comment